என்ன இருந்தாலும் அவங்க இப்படி செஞ்சிருக்க கூடாது... ஃபெர்ராரி உரிமையாளர் இந்த நாளை மறக்கவே மாட்டார்!

லம்போர்கினி நிறுவனத்தின் சூப்பர் கார்களில் ஒன்றான கல்லர்டோ ஸ்போர்ட்ஸ் மாடலை இயக்கி வந்தவருக்கு இளைஞர்கள் சிலர் தர்ம அடி கொடுத்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

யாரை குற்றம் சொல்லுவது... விலையுயர்ந்த சூப்பர் காரில் கெத்தாக வலம் வந்தவருக்கு தர்ம அடி! ஏன் தெரியுமா?

சூப்பர் கார் நடுவில் இருக்க இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஒற்றை நபரை தாக்குவது போன்ற வீடியோக் காட்சிகள் தற்போது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. வீடியோவில் இருக்கும் அந்த விலையுயர்ந்த காரானது லம்போர்கினி நிறுவனத்தின் கல்லர்டோ ஸ்பைடர் ஸ்போர்ட்ஸ் மாடல் ஆகும்.

யாரை குற்றம் சொல்லுவது... விலையுயர்ந்த சூப்பர் காரில் கெத்தாக வலம் வந்தவருக்கு தர்ம அடி! ஏன் தெரியுமா?

அதனை இயக்கி வந்ததன் காரணத்தினாலயே இளைஞர் பலர் சேர்ந்து, ஒற்றை நபரை சரமாரியாக தாக்கியிருக்கின்றனர். இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

இந்தியாவில் முன்பைக் காட்டிலும் சூப்பர் கார்களின் எண்ணிக்கை தற்போது சற்று அதிகரித்துக் காணப்படுகின்றது. அவை அரிதினும் அரிதாகவே சாலையில் தோன்றுகின்றன.

யாரை குற்றம் சொல்லுவது... விலையுயர்ந்த சூப்பர் காரில் கெத்தாக வலம் வந்தவருக்கு தர்ம அடி! ஏன் தெரியுமா?

ஆனால், சமீப காலமாக அவற்றின் தரிசனம் அதிகளவில் காணக் கிடைத்து வருகின்றது. குறிப்பாக, லாக்டவுண் ஆரம்பித்த காலத்திற்கு பின்னர் சூப்பர் கார்கள்குறித்த தகவல்கள் பல வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

அதிலும், அவை விபத்தைச் சந்திப்பது பற்றிய தகவல்கள் சற்று அதிமாகவே இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், தற்போது நாம் பார்க்கவிருக்கும் சம்பவம் விபத்தைக்குறித்தது அல்ல.

யாரை குற்றம் சொல்லுவது... விலையுயர்ந்த சூப்பர் காரில் கெத்தாக வலம் வந்தவருக்கு தர்ம அடி! ஏன் தெரியுமா?

சற்று அதிக வேகம் மற்றும் சத்தத்துடன் சென்றதன் காரணத்தினால் பொதுமக்கள் மற்றும் விலையுயர்ந்த காரின் உரிமையாளர் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைப் பற்றியதாகும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெகு நாட்களாக நாடே பூட்டபட்ட நிலையில் இருந்தது. இந்த நிலையில் இருந்து லேசான விடிவுகாலம் கிடைத்ததைப் போன்று, அண்மையில் வழங்கப்பட்ட தளர்வுகளின் காரணமாக மீண்டும் இந்தியா இயல்பு நிலைக்கு திரும் ஆரம்பித்துள்ளது.

யாரை குற்றம் சொல்லுவது... விலையுயர்ந்த சூப்பர் காரில் கெத்தாக வலம் வந்தவருக்கு தர்ம அடி! ஏன் தெரியுமா?

இதனை உறுதி செய்யும் வகையில் நாட்டின் முக்கிய சாலைகள் பல பிசியாக இயங்க ஆரம்பித்துள்ளன. இருப்பினும், அது முந்தைய காலத்தில் இருந்ததைப் போன்று பிசியானதாக இல்லை. எனவே, குறிப்பிட்ட சாலைகள் குறைந்த வாகனங்களுடனும், ஒரு சில சாலைகள் வெறிச்சேடியும் காணப்படுகின்றன.

யாரை குற்றம் சொல்லுவது... விலையுயர்ந்த சூப்பர் காரில் கெத்தாக வலம் வந்தவருக்கு தர்ம அடி! ஏன் தெரியுமா?

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ஒரு சில சூப்பர் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களின் திறனை சோதித்து வருகின்றனர். அந்தவகையில், அண்மையில் வாங்கப்பட்ட லம்போர்கினி கல்லர்டோ காரில் வலம் வந்தவரையே உள்ளூர் வாசிகள் சிலர் கடுமையாக தாக்கியிருக்கின்றனர்.

யாரை குற்றம் சொல்லுவது... விலையுயர்ந்த சூப்பர் காரில் கெத்தாக வலம் வந்தவருக்கு தர்ம அடி! ஏன் தெரியுமா?

இந்த சம்பவம் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் அரங்கேயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கார் மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சீறிப் பாய்ந்து சென்றதாகவும், மிக அதிக சத்தத்தை எழுப்பியவாறு சென்றதும்தான் தாக்குதலுக்கு காரணம் என கூறுகின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள். இதுகுறித்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

யாரை குற்றம் சொல்லுவது... விலையுயர்ந்த சூப்பர் காரில் கெத்தாக வலம் வந்தவருக்கு தர்ம அடி! ஏன் தெரியுமா?

வீடியோவில், சூப்பர் காரை இயக்கி வந்த நபரை அதேப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், சில தூரங்களுக்கு முன்பே சூப்பர் காரை மடக்கிய இளைஞர்கள் கூட்டம், அதன் உரிமையாளரை காரை விட்டு இறங்குமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் மிகவும் ஆக்ரோஷத்துடன் செயல்பட்டதால் அக்காரின் உரிமையாளர் அங்கிருந்து தப்பித்துள்ளார்.

யாரை குற்றம் சொல்லுவது... விலையுயர்ந்த சூப்பர் காரில் கெத்தாக வலம் வந்தவருக்கு தர்ம அடி! ஏன் தெரியுமா?

அப்போது, அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் மட்டும் காரின் பின் பகுதியில் ஃபுட் போட் செய்தவாறு ஏறி வந்துள்ளார். இதனைப் பார்த்து உறைந்துபோன சூப்பர் கார் உரிமையாளரின் பெற்றோர்கள், ஆக்ரோஷமாக வந்த இளைஞர்களிடத்தில் இருந்து மகனைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அது தேல்வியையேச் சந்தித்தது.

யாரை குற்றம் சொல்லுவது... விலையுயர்ந்த சூப்பர் காரில் கெத்தாக வலம் வந்தவருக்கு தர்ம அடி! ஏன் தெரியுமா?

கூட்டமாக கூடிய அவர்கள், காரில் இருந்தவரை குண்டு கட்டாகத் தூக்கி வெளியே எடுத்துப்போட்டு தாக்கத் தொடங்கினர். இவையனைத்தும் சூப்பர் கார் உரிமையாளரின் வீட்டுக்கு மிக அருகிலேயே நடந்தவையாகும். எனவே, அவரது உறவினர் மற்றும் மனைவி என பலர் சூழ்ந்தனர். இருப்பினும், அவர்களின் வேண்டுகோளை காதில்கூட வாங்காத அக்கூட்டம் கடும் கோபத்துடன் அவர்களை தாக்கத் தொடங்கியது.

யாரை குற்றம் சொல்லுவது... விலையுயர்ந்த சூப்பர் காரில் கெத்தாக வலம் வந்தவருக்கு தர்ம அடி! ஏன் தெரியுமா?

இந்த தாக்குதல் சம்பவத்தில், காரை ஓட்டி வந்தவர் மட்டுமின்றி அவரின் உறவினர்கள் சிலரும் லேசான தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாகக் கூறப்படுகின்றது. தற்போது இந்த சம்பவம் காவல் நிலையம் வரைச் சென்றுள்ளது. இதுகுறித்த ஆய்வு செய்வதற்காக உத்தரவிட்டிருப்பதாக பெங்களூரு டிசிபி கூறியுள்ளார். ஆய்விற்கு பின்னர் யார் மீது குற்றம் இருக்கின்றதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

யாரை குற்றம் சொல்லுவது... விலையுயர்ந்த சூப்பர் காரில் கெத்தாக வலம் வந்தவருக்கு தர்ம அடி! ஏன் தெரியுமா?

இந்நிலையில், தாக்குதலுக்கு ஆளான சூப்பர் காரின் உரிமையாளர், அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், சிசிடிவி வீடியோக்கள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், நான் வேகமாக போனதை ஏதாவது ஒரு வீடியோவிலாவது உறுதிப்படுத்துங்கள். அந்த கூட்டம் என்னையும், எனது உறவினர் மற்றும் தந்தையும் கடுமையாக தாக்கியிருக்கின்றது. நான் வேகமாகவும் சென்றதாகவும், அப்போது அதிகம் சத்தம் வந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதுதான் அவர்களுக்கு பிரச்னையா? என்று கேள்வியை அதில் எழுப்பியிருந்தார்.

தொடர்ந்து, "ஒரு வேலை நான் ஆபத்தான முறையில் காரை இயக்கியிருந்தாலோ, அதில் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தாலோ அவர்களை நானே மருத்துவமனையில் சேர்த்து உரிய நஷ்டத்தை வழங்கியிருப்பேன். ஆனால், நான் வேகமாக இயக்கவும், யாருக்கும் ஆபத்தை ஏற்படுத்தவில்லை" என தரப்பு கருத்தை முன் வைத்துள்ளார்.

யாரை குற்றம் சொல்லுவது... விலையுயர்ந்த சூப்பர் காரில் கெத்தாக வலம் வந்தவருக்கு தர்ம அடி! ஏன் தெரியுமா?

அதேசமயம், தாக்குதலில் மேற்கொண்டவர்களில் சிலர், சூப்பர் கார் உரிமையாளர் பல முறை அக்காரில் அதி வேகத்தில் வந்ததாகவும், அப்போது காதை கிழிக்கின்ற அளவிற்கு சத்தத்தை எழுப்பியவாறு சென்றதாகவும் குற்றம் சாட்டினர். இதனை உறுதிப்படுத்தும் வகையில், அந்த இளைஞர் பெங்களூருவின் ஆர்டி நகர் சாலையில் திடீர் திடீரென அதிக வேகத்தில் பறப்பது போன்ற காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

யாரை குற்றம் சொல்லுவது... விலையுயர்ந்த சூப்பர் காரில் கெத்தாக வலம் வந்தவருக்கு தர்ம அடி! ஏன் தெரியுமா?

அவ்வாறு அதி வேகமாக கார் பறக்கும்போது ஒரு சிலர் அலறி சாலையை விட்டு ஓடுவதையும் அந்த வீடியோவில் காண முடிகின்றது.

இந்த சம்பவம் குறித்து இளைஞர்கள் புகார் கொடுத்ததைப் போன்றே, சூப்பர் காரின் உரிமையாளரும் காவல்நிலையத்தில் புகாரை வழங்கியிருக்கின்றார்.

யாரை குற்றம் சொல்லுவது... விலையுயர்ந்த சூப்பர் காரில் கெத்தாக வலம் வந்தவருக்கு தர்ம அடி! ஏன் தெரியுமா?

இதுபோன்ற சம்பவங்கள் பெங்களூருவில் அரங்கேறுவது முதல் முறையல்ல. சமீபத்தில் ஹெப்பா பகுதியில் செயின் ஸ்நேட்சிங்கில் ஈடுபட்ட இளைஞரை, பொதுமக்கள் சிலர் விரட்டிச் சென்று பிடித்தனர். மேலும், அவருக்கு தர்ம அடியையும் பரிசாக வழங்கினர். தாக்குதலில், தான் கடுமையான பாதிக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் திருடன் புகார் வழங்கியதை அடுத்து போலீஸார் ஒரு சிலரை கைது செய்தனர்.

யாரை குற்றம் சொல்லுவது... விலையுயர்ந்த சூப்பர் காரில் கெத்தாக வலம் வந்தவருக்கு தர்ம அடி! ஏன் தெரியுமா?

இந்த சம்பவம் சில மாதங்களுக்கு முன்பே கர்நாடகாவில் அரங்கேறியிருந்தது. இந்தநிலையிலேயே அத்துமீறலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் ஒருவர்மீது ஒருவர் புகாரை வழங்கியிருக்கின்றனர். இதில் எந்த மாதிரியான நடவடிக்கையைப் போலீஸார் கையாள இருக்கின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
lamborghini gallardo spyder owner thrashed in bangalore. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X