நவீன அம்சங்களுடன் புதிய லம்போர்கினி கார் ஷோரூம் பெங்களூரில் திறப்பு

அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய லம்போர்கினி நிறுவனத்தின் புதிய கார் ஷோரூம் பெங்களூரில் திறக்கப்பட்டு இருக்கிறது.

புதுப்பொலிவுடன் லம்போர்கினி கார் ஷோரூம் பெங்களூரில் திறப்பு

இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி கார் நிறுவனம் சூப்பர் கார் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக இருக்கிறது. லம்போர்கினி கார் வாங்குவது சாதாரண கார் பிரியர் முதல் பெரும் பணக்காரர்கள் வரை கனவாக இருந்து வருகிறது. இந்தியாவிலும் லம்போர்கினி கார்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

புதுப்பொலிவுடன் லம்போர்கினி கார் ஷோரூம் பெங்களூரில் திறப்பு

டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் ஆகிய மூன்று பெரு நகரங்களில் கார் ஷோரூம்களை லம்போர்கினி நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு டெல்லி, மும்பையை ஷோரூம்களை நவீன யுகத்திற்கு தக்கவாறு மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது.

புதுப்பொலிவுடன் லம்போர்கினி கார் ஷோரூம் பெங்களூரில் திறப்பு

இதைத்தொடர்ந்து, பெங்களூரிலும் அதிக சிறப்பம்சங்களுன் கூடிய புதிய கார் ஷோரூமை லம்போர்கினி திறந்துள்ளது. லம்போர்கினி நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்திய தலைமை செயல் அதிகாரி ஆர்டென்சி மற்றும் இந்தியப் பிரிவு தலைவர் ஷரத் அகர்வால் ஆகியோர் இந்த புதிய ஷோரூமை திறந்து வைத்தனர்.

புதுப்பொலிவுடன் லம்போர்கினி கார் ஷோரூம் பெங்களூரில் திறப்பு

பெங்களூரில் உள்ள லாவெல்லே சாலையில் செயின்ட் மார்க்ஸ் சர்ச் எதிர்புறத்தில் இந்த புதிய ஷோரூம் அமைந்துள்ளது. சுமார் 4,370 சதுர அடி பரப்பளவில் இந்த ஷோரூம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

லம்போர்கினி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான ஹொய்சாலா ஆட்டோமோட்டிவ் நிறுவனம் இந்த ஷோரூமை அமைத்து நிர்வகிக்க உள்ளது.

புதுப்பொலிவுடன் லம்போர்கினி கார் ஷோரூம் பெங்களூரில் திறப்பு

இந்த புதிய ஷோரூமில் லம்போர்கினி நிறுவனத்தின் அனைத்து கார்களும் விற்பனைக்கு கிடைக்கும். சில கார்கள் காட்சிப்படுத்தப்படத்துவதற்கான இடவசதியை பெற்றிருக்கிறது. இந்த ஷோரூம் திறப்பு விழாவின்போதே, ஹூராகென் எவோ ஸ்பைடர் சூப்பர் காரும் தென் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதுப்பொலிவுடன் லம்போர்கினி கார் ஷோரூம் பெங்களூரில் திறப்பு

அத்துடன், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் தங்களது சூப்பர் காரில் கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கான ஆக்செஸெரீகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

புதுப்பொலிவுடன் லம்போர்கினி கார் ஷோரூம் பெங்களூரில் திறப்பு

இதனை வாடிக்கையாளர்கள் நேரடியாக தேர்வு செய்து தங்களது புதிய கார் டெலிவிரி எடுக்கும்போதே, கஸ்டமைஸ் செய்யப்பட்டு பெறுவதற்கான வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

புதுப்பொலிவுடன் லம்போர்கினி கார் ஷோரூம் பெங்களூரில் திறப்பு

லம்போர்கினி நிறுவனத்தின் அவென்டேடார், ஹூராகென் மற்றும் உரூஸ் எஸ்யூவி சூப்பர் கார்கள் ரூ.3.10 கோடி முதல் ரூ.5.13 கோடி வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் இங்கு விற்பனைக்கு கிடைக்கும். தென் இந்தியாவில் உள்ள ஒரே ஷோரூம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுப்பொலிவுடன் லம்போர்கினி கார் ஷோரூம் பெங்களூரில் திறப்பு

இந்த புதிய ஷோரூம் திறப்பு விழாவில் பேசிய லம்போர்கினி இந்தியப் பிரிவு தலைவர் ஷரத் அகர்வால்," இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேலான விற்பனை தென் இந்தியாவிலிருந்துதான் வருகிறது. எனவே, பெங்களூர் ஷோரூமை மிக முக்கியமானதாக கருதுகிறோம்.

புதுப்பொலிவுடன் லம்போர்கினி கார் ஷோரூம் பெங்களூரில் திறப்பு

குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறை கேந்திரமாக செயல்படும் பெங்களூர், சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் இருந்து லம்போர்கினி கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர்," என்று தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Monday, January 13, 2020, 15:23 [IST]
English summary
Italian super car manufacturer, Lamborghini has just opened a new showroom at Lavelle Road in Bangalore. Spanning 4,370 square meters in size, the new Lamborghini dealership was inaugurated by Mr Matteo Ortenzi, and Mr Sharad Agarwal.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+