லம்போர்கினியின் புதிய வி10 சூப்பர்கார்!! உலகளவில் அடுத்த வாரம் வெளியாகிறது!

லம்போர்கினி வி10 சூப்பர் காரின் டீசர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

லம்போர்கினியின் புதிய வி10 சூப்பர்கார்!! உலகளவில் அடுத்த வாரம் வெளியாகிறது!

இத்தாலிய ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி அதன் வி10 சூப்பர் காரின் தோற்றத்தையும், காரை பற்றிய விபரங்களையும் அதிகாரப்பூர்வமாக அடுத்த வாரம் வெளியிடவுள்ளது. லம்போர்கினியின் அடுத்த ரேசிங் காரான இதனை பற்றிய எந்த விபரமும் தற்போதுவரை கிடைக்கவில்லை.

லம்போர்கினியின் புதிய வி10 சூப்பர்கார்!! உலகளவில் அடுத்த வாரம் வெளியாகிறது!

இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் படங்களில் இந்த லம்போர்கினி கார் மறைப்பால் மூடப்பட்டு காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான லம்போர்கினி நிறுவனத்தின் பதிவில் பந்தய களத்தில் (ரேஸ் ட்ராக்) இருந்து சாலை வரை அனைத்திற்கும் புதிய வி10 லம்போர்கினி என குறிப்பிடப்பட்டுள்ளது.

லம்போர்கினியின் புதிய வி10 சூப்பர்கார்!! உலகளவில் அடுத்த வாரம் வெளியாகிறது!

அதுமட்டுமில்லாமல் நவம்பர் 18ஆம் தேதி 4 மணியளவில் கார் அறிமுகப்படுத்தப்படவுள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த லம்போர்கினி ரேசிங் காருக்கு போட்டியாக விளங்கவுள்ள ஃபெராரியின் எஸ்எஃப்90 இதற்கு அடுத்த நாள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

லம்போர்கினியின் புதிய வி10 சூப்பர்கார்!! உலகளவில் அடுத்த வாரம் வெளியாகிறது!

பொது சாலைக்கும் ஏற்றவாறு வி10 சூப்பர் கார் கொண்டுவரப்படுவதால், இதனை லம்போர்கினி நிறுவனம் எவ்வாறு வடிவமைத்திருக்கும் என்பதை உணரலாம். இந்த வகையில் இதன் ஹெட்லைட்கள், லம்போர்கினியின் செயல்திறன் மாடலான பின்சக்கர ட்ரைவிங் சிஸ்டத்தை கொண்ட ஹூராகன் எவோவில் இருந்து பெறப்பட்டுள்ளது.

லம்போர்கினியின் புதிய வி10 சூப்பர்கார்!! உலகளவில் அடுத்த வாரம் வெளியாகிறது!

கடந்த சில மாதங்களாக லம்போர்கினி நிறுவனம் ஹூராகனின் சில வேரியண்ட்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தி வருகிறது. ஊரடங்குகள் இல்லாமல் இருந்ததால் அவை வந்திருக்க வாய்ப்புகள் குறைவே. ஏனெனில் அவற்றின் இடத்தை வி10 சூப்பர்காரின் வேரியண்ட்கள் பிடித்திருக்கும்.

லம்போர்கினியின் புதிய வி10 சூப்பர்கார்!! உலகளவில் அடுத்த வாரம் வெளியாகிறது!

ட்ராக்கிற்காக தயாரிக்கப்பட்டு பொது சாலைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் வி10 குறிப்பிட்ட எண்ணிக்கைகளில் மட்டுமே விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த டீசரின் மூலம் பார்த்தோமேயானால், இது ஹூராகன் எவோ எஸ்டிஒ (சூப்பர் ட்ரோஃபியோ ஓமரோகாட்டா) ஸ்பெஷல் எடிசன் காராக இருக்கலாம் என தோன்றுகிறது.

லம்போர்கினியின் புதிய வி10 சூப்பர்கார்!! உலகளவில் அடுத்த வாரம் வெளியாகிறது!

தற்சமயம் உள்ள ஹூராகன் சூப்பர் ட்ரோஃபியோ எவோ கார், 4-சக்கர ட்ரைவ் ஹூராகன் பெர்ஃபார்மன்ஸ் காரை போல் இல்லாமல் பின்சக்கர ட்ரைவ் ரேசிங் காராக விளங்கி வருகிறது. ரியர் விங்கிற்கு கூடுதலாக இந்த காரில் மேற்கூரை ஸ்கூப் வழங்கப்படுகிறது.

இதன் காற்றியக்கவியலுக்கான பாகங்கள் ஹூராகன் பெர்ஃபார்மன்ஸ் காரை காட்டிலும் பெரியதாக, அப்கிரேட்டாக உள்ளன. இதுதான் விரைவில் பந்தய கார்களின் அசல் பின்சக்கர ட்ரைவிற்கு மாற்றப்பட்ட ஒரு மாதிரியாக இருக்கும் என்று தெரிகிறது.

Most Read Articles

English summary
Lamborghini teases upcoming V10 super car, to be unveiled on November 18
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X