இவங்களுக்கு இதே வேலையா போச்சு... சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! ஏன்னு தெரியுமா?

இணையத்தில் வெளியாகிய தகவலை அடுத்து சீன நிறுவனத்தை நெட்டிசன்கள் சிலர் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! காரணம் தெரிஞ்சா நீங்களும் கூட சேர்ந்து திட்டுவீங்க! இவங்களுக்கு இதே வேலையா போச்சு!

ஃபோர்டு நிறுவனத்தின் மிக முக்கியமான மாடல்களில் ஒன்றாக எஃப்-150 மாடல் இருக்கின்றது. இது ஓர் பிக்-அப் டிரக் ரக வாகனம் ஆகும். இந்த தனி சிறப்பு வாய்ந்த காரை ஃபோர்டு நிறுவனம் ஒரு சில வெளிநாடுகளில் மட்டுமே விற்பனைச் செய்து வருகின்றது. இக்கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்காதது இதற்கு ஓர் உதாரணம்.

சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! காரணம் தெரிஞ்சா நீங்களும் கூட சேர்ந்து திட்டுவீங்க! இவங்களுக்கு இதே வேலையா போச்சு!

இக்காருக்கு உலகம் நாடுகள் பலவற்றில் நல்ல வரவேற்பு நிலவுவதால், இதே மாடலில் மின்சார வெர்ஷனை அறிமுகப்படுத்த ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ மற்றும் தகவல்கள் மிக சமீபத்திலேயே வெளியாகின. இந்நிலையில், ஃபோர்டு நிறுவனத்தின் சிறப்பு வாய்ந்த பிக்-அப் டிரக்கை சீன நிறுவனம் ஒன்று காப்பியடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! காரணம் தெரிஞ்சா நீங்களும் கூட சேர்ந்து திட்டுவீங்க! இவங்களுக்கு இதே வேலையா போச்சு!

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஃபோட்டான் (Foton). இந்நிறுவனமே ஃபோர்டு எஃப்-150 மாடலைத் தழுவி டா ஜியாங் ஜன் (Da Jiang Jun) என்ற மாடலை உருவாக்கியுள்ளது. இதற்கு ஆங்கிலத்தில் பிக் ஜெனரல் (Big General) என அர்த்தம் ஆகும். செப்டம்பர் 26ம் தேதி சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற உள்ள ஆட்டோ கண்காட்சிக்காக இந்த காரை ஃபோட்டான் நிறுவனம் தயார் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! காரணம் தெரிஞ்சா நீங்களும் கூட சேர்ந்து திட்டுவீங்க! இவங்களுக்கு இதே வேலையா போச்சு!

இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வெளிவந்த உடன் நெட்டிசன்கள் அனைவரும் ஃபோட்டான் நிறுவனத்தை வறுத்தெடுக்க தொடங்கியுள்ளனர். இக்கார், ஃபோர்டு நிறுவனத்தின் எஃப்-150 மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அச்சு பிசுகாமல் இரு கார்களும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! காரணம் தெரிஞ்சா நீங்களும் கூட சேர்ந்து திட்டுவீங்க! இவங்களுக்கு இதே வேலையா போச்சு!

இதற்காக ஒரு சிலர் வரைபடத்தை வரையே ஆரம்பித்துவிட்டனர். இந்த வரைப்படத்தின் மூலம் இரு கார்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை அவர்கள் கலையத் தொடங்கியிருக்கின்றனர். மேலும், ஒரு சிலர் சீன நிறுவனத்தின் இந்த செயலுக்கு உரிய பாடம் புகட்ட வேண்டும் என கூறி, நீதிமன்றத்தில் இதுகுறித்த புகார் அளிக்குமாறு ஃபோர்டு நிறுவனத்திற்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! காரணம் தெரிஞ்சா நீங்களும் கூட சேர்ந்து திட்டுவீங்க! இவங்களுக்கு இதே வேலையா போச்சு!

எனவே, சீன நிறுவனம் ஃபோட்டான் தற்போது நெட்டிசன்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு ஆளாகியிருக்கின்றது. போட்டான் பிக் ஜெனரல் காரில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜட் 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின், 2.0 லிட்டர் மற்றும் 2.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆகிய தேர்வுகளை வழங்கப்பட இருக்கின்றது.

சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! காரணம் தெரிஞ்சா நீங்களும் கூட சேர்ந்து திட்டுவீங்க! இவங்களுக்கு இதே வேலையா போச்சு!

ஆனால், ஃபோர்டு நிறுவனத்தின் எஃப்-150 மாடலில் ட்வின் சிலிண்டர் கொண்ட 3.5 லிட்டர் வி6 எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் ஃபோர்டு-ஃபோட்டான் இரு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் இடையே எஞ்ஜின் மட்டுமே மிகப் பெரிய வித்தியாசத்தில் காணப்படுகின்றது.

சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! காரணம் தெரிஞ்சா நீங்களும் கூட சேர்ந்து திட்டுவீங்க! இவங்களுக்கு இதே வேலையா போச்சு!

மற்றபடி, உருவம் மற்றும் டிசைன் உள்ளிட்டவற்றில் இரு கார்களும் இரட்டையர்களைப் போலவே காட்சியளிக்கின்றன. குறிப்பாக முகப்பு பகுதி கிரில் முதல் பின் பக்க கேரியர் அமைப்பு வரை அப்படியே காப்பியடிக்கப்பட்டிருப்பது எந்த மறைவுமின்றி தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி, முன் பக்க ஹெட்லேம்ப், பனி விளக்கு, காரின் உயரம், நீளம் மற்றும் அகலம் ஆகிய அனைத்தும்கூட டிப்பி காப்பி அடிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் மயிரிழையில் மட்டுமே நம்மால் வித்தியாசங்களைக் காண முடிகின்றது.

சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! காரணம் தெரிஞ்சா நீங்களும் கூட சேர்ந்து திட்டுவீங்க! இவங்களுக்கு இதே வேலையா போச்சு!

இந்த காப்பியடிக்கப்பட்ட காரையே ஃபோட்டான் நிறுவனம் விரைவில் உலக நாடுகள் சிலவற்றில் விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. குறிப்பாக, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இதனைக் களமிறக்க ஃபோட்டான் திட்டமிட்டுள்ளது. எனவே ஃபோட்டான் பிக் ஜெனரல் காரின் அறிமுகம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! காரணம் தெரிஞ்சா நீங்களும் கூட சேர்ந்து திட்டுவீங்க! இவங்களுக்கு இதே வேலையா போச்சு!

சீன நிறுவனம் இதுபோன்று பிற நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காப்பியடித்து வாகனங்களை உருவாக்குவது புதிதல்ல. முன்னதாக பல்வேறு நிறுவனங்களின் முக்கியமான தயாரிப்புகளை சீன நிறுவனங்கள் காப்பியடித்து தயாரித்து இருக்கின்றன. அதில், நம் நாட்டு டாடா தயாரிப்பு முதல் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு வரை அடங்கும். இதுபோன்று காப்பியடித்து உருவாக்கப்பட்ட தயாரிப்புகளுக்காக பல முறை நீதிமன்றங்களால் சீன நிறுவனங்கள் பாடம் கற்றிருக்கின்றன. இருப்பினும், இந்த செயலை கைவிடாமல் ஒரு சில நிறுவனங்கள் தொடர்கதையாக மேற்கொண்டு வருகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Latest Chinese Copycat Car Is Foton Da Jiang Jun. Read In Tamil.
Story first published: Friday, September 25, 2020, 19:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X