Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 3 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹாலோஜன், ஹெச்ஐடி வேஸ்ட்... எல்இடி ஹெட்லைட்தான் பெஸ்ட்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...
ஹாலோஜன் மற்றும் ஹெச்ஐடி ஹெட்லைட்களை விட எல்இடி ஹெட்லைட்கள் ஏன் சிறந்தவை? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

வாகனங்களில் பல வகையான ஹெட்லைட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஹாலோஜன் மற்றும் எல்இடி ஹெட்லைட்களைதான் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் உபயோகிக்கின்றன. இவை இரண்டில் ஹாலோஜன் ஹெட்லைட்கள் மிக நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளன. புதிதாக ஒரு வாகனத்தை நீங்கள் வாங்கினால், அதில் பெரும்பாலும் ஹாலோஜன் ஹெட்லைட்தான் வழங்கப்பட்டிருக்கும்.

ஹாலோஜன் ஹெட்லைட்கள் விலை குறைந்தவை என்பதே இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. ஆனால் சமீப காலமாக எல்இடி ஹெட்லைட்கள் மிகவும் வேகமாக பிரபலமாகி வருகின்றன. வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவதால், பெரும்பாலான முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள், எல்இடி ஹெட்லைட்களை வழங்க தொடங்கியுள்ளன.

'லைட் எமிட்டிங் டையோடு' என்பதன் சுருக்கம்தான் எல்இடி (Light Emitting Diode - LED). வழக்கமான ஹாலோஜன் ஹெட்லைட்களை பயன்படுத்துவதை காட்டிலும், எல்இடி ஹெட்லைட்கள் மூலமாக உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன? என்பதைதான் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

பெரும்பாலான வாகனங்களில் ஹாலோஜன் ஹெட்லைட்கள்தான் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், அவை திறன் மிகுந்தவை கிடையாது. ஹாலோஜன் ஹெட்லைட்கள் நுகரும் ஆற்றலின் பெரும்பகுதி, ஒளியாக மாற்றப்படுவதற்கு மாறாக வீணாக எரிந்து விடும். இதன் விளைவாக ஹாலோஜன் பல்புகளை அதிகபட்சமாக 1,000 மணி நேரம் வரை மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஹாலோஜன் பல்புகளின் விலை குறைவாக இருக்கலாம். ஆனால் அவற்றை அடிக்கடி மாற்றி கொண்டே இருக்க வேண்டும். அதே சமயம் எல்இடி பல்புகள் இதற்கு அப்படி நேர் எதிரானவை. எல்இடி பல்புகளின் ஆயுட்காலம் சுமார் 15,000 மணி நேரங்கள். ஹாலோஜன் பல்புகளை விட எல்இடி பல்புகள் விலை உயர்ந்தவைதான். ஆனால் அவற்றின் ஆயுட்காலம் அதிகம்.

எனவே அடிக்கடி பல்புகளை மாற்ற வேண்டிய தேவை இருக்காது. எனவே நீங்கள் அதிகமாக செலவழிக்கும் தொகை ஈடு செய்யப்பட்டு விடும். அத்துடன் எல்இடி பல்புகளை உங்கள் வாகனத்தில் பொருத்துவதும் எளிமையானதுதான். மெக்கானிக்கின் உதவி இல்லாமலேயே, நவீன எல்இடி ஹெட்லைட்களை பொருத்தி விட முடியும். அந்த அளவிற்கு எளிமையானது.

உங்கள் வாகனத்தில் ஹெட்லைட்டை வெற்றிகரமாக பொருத்துவதற்கு 20 நிமிடங்கள் முதல் சுமார் 1 மணி நேரம் வரை மட்டுமே ஆகும். இதன் மூலம் உங்கள் பொன்னான நேரம் சேமிக்கப்படுவதுடன், லேபர் சார்ஜ் போன்ற தேவையற்ற செலவுகளையும் தவிர்க்கலாம். அத்துடன் ஹாலோஜன் பல்புகளை விட எல்இடி பல்புகள் பிரகாசமானவை.

எல்இடி பல்புகள் கிட்டத்தட்ட ஹெச்ஐடி (HID - High Intensity Discharge) பல்புகளை போல் பிரகாசமானவைதான். ஆனால் உங்கள் பார்வையையோ அல்லது எதிரே வரும் வாகன ஓட்டுனர்களின் பார்வையையோ பாதிக்க கூடிய அளவிற்கு பிரகாசமானவை கிடையாது. எனவே எல்இடி ஹெட்லைட்கள் இருந்தால் அதிக பிரகாசம் கிடைப்பதுடன், நீங்கள் பாதுகாப்பாகவும் வாகனம் ஓட்டலாம்.

அதிக பிரகாசம் வேண்டும் என்பதற்காக, பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் திறனில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் எல்இடி ஹெட்லைட்களில் கிடையாது. அத்துடன் எல்இடி லைட்கள் முழு பிரகாசத்தையும் உடனடியாக எட்டி விடும். ஆனால் ஹாலோஜன் அல்லது ஹெச்ஐடி லைட்கள் முழு பிரகாசத்தை வழங்குவதற்கு ஒரு சில வினாடிகள் ஆகும்.

எனவே உங்கள் வாகனத்தின் டெயில்லைட்களில் எல்இடி பல்புகள் வழங்கப்பட்டிருந்தால், நீங்கள் பிரேக் பிடிக்கும்போது, உங்கள் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் உடனடியாக அதனை பார்த்து விடுவார்கள். இதன் மூலம் விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படும். ஆனால் ஹாலோஜன் அல்லது ஹெச்ஐடி பல்புகளாக இருந்தால் பார்ப்பதற்கு ஒரு சில வினாடிகள் ஆகலாம்.