லெக்சஸ் எல்சி500எச் ஸ்போர்ட்ஸ் கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

லெக்சஸ் எல்சி500எச் ஸ்போர்ட்ஸ் கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

லெக்சஸ் எல்சி500எச் ஸ்போர்ட்ஸ் கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

டொயோட்டா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் லெக்சஸ் சொகுசு கார் நிறுவனம் இந்தியாவில் வலுவான சந்தையை பெறுவதற்காக பல புதிய மாடல்களை வரிசை கட்டி வருகிறது. தற்போது லெக்சஸ் நிறுவனம் இந்தியாவில் ஆர்எக்ஸ்450எச், எல்எஸ்500எச், என்எக்ஸ்300எச், இஎஸ்300எச், எல்எக்ஸ்450டீ மற்றும் எல்எக்ஸ்570டீ ஆகிய கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

லெக்சஸ் எல்சி500எச் ஸ்போர்ட்ஸ் கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த வரிசையில், தனது எல்சி500எச் என்ற புதிய ஸ்போர்ட்ஸ் கூபே ரக கார் மாடலை இன்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் வைத்து விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது மிகவும் வசீகரமான இரண்டு இருக்கைகள் கொண்ட ஸ்போர்ட்ஸ் கூபே ரக மாடலாக வந்துள்ளது.

லெக்சஸ் எல்சி500எச் ஸ்போர்ட்ஸ் கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

லெக்சஸ் எல்எஃப்ஏ கான்செப்ட் அடிப்படையிலான டிசைன் அம்சங்களுடன் இநத் கார் வந்துள்ளது. மிக பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு, அழகிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், எல்இடி பகல்வேளை விளக்குகள், 20 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் என கம்பீரமான ஸ்போர்ட்ஸ் கூபே மாடலாக காட்சி தருகிறது.

லெக்சஸ் எல்சி500எச் ஸ்போர்ட்ஸ் கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரில் 10.3 அங்குல திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த திரையை டச்பேடு மூலமாக கட்டுப்படுத்தும் வசதி அளிக்கப்படுகிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், டிரைவிங் மோடுகள், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, 10 விதமான நிலைகளில் ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதிகள் உள்ளன.

லெக்சஸ் எல்சி500எச் ஸ்போர்ட்ஸ் கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய லெக்சஸ் எல்சி500எச் கார் ஹைப்ரிட் மாடலாக வந்துள்ளது. இந்த காரில் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 300 பிஎச்பி பவரையும், 348 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கும் மின் மோட்டார் மற்றும் பெட்ரோல் எஞ்சின் இணைந்து அதிகபட்சமாக 354 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

லெக்சஸ் எல்சி500எச் ஸ்போர்ட்ஸ் கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரில் 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இவை 3 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகிய தொழில்நுட்பங்களை இணைத்து கொடுக்கப்பட்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வகையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெக்சஸ் எல்சி500எச் ஸ்போர்ட்ஸ் கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை மேனுவலாக மாற்றி இயக்கும்போது 10 ஸ்பீடு கியர்பாக்ஸ் போல செயல்படும். இந்த கியர்பாக்ஸ் வாயிலாக எஞ்சின் சக்தி பின்சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது.

லெக்சஸ் எல்சி500எச் ஸ்போர்ட்ஸ் கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டது. மணிக்கு 249 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது.

லெக்சஸ் எல்சி500எச் ஸ்போர்ட்ஸ் கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

வெளிநாடுகளில் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடலிலும் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்த எஞ்சின் 477 எச்பி பவரையும், 540 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. ஆனால், இந்தியாவில் இப்போதைக்கு இந்த வி8 எஞ்சின் தேர்வு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பில்லை.

லெக்சஸ் எல்சி500எச் ஸ்போர்ட்ஸ் கூபே கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

புதிய லெக்சஸ் எல்சி500எச் கார் ரூ.1.96 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கார் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.

More from DriveSpark

Article Published On: Friday, January 31, 2020, 12:33 [IST]
English summary
Japanese luxury car maker, Lexus has launched LC500h sports coupe car in India at an ex-showroom price of Rs 1.96 crore.
மேலும்... #லெக்சஸ் #lexus
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+