20 வருட பயணத்தை நிறைவு செய்தது லோட்டஸ் எக்ஸிகே ஸ்போர்ட்ஸ்கார்... ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது...

சூப்பர் கார் & பைக் தயாரிப்பு நிறுவனமான லோட்டஸ் அதன் ஸ்போர்ட்ஸ்கார் ஆன எக்ஸிகேவின் 20 வருட கால விற்பனை பயணத்தை கொண்டாடும் வகையில் புதிய ஸ்பெஷல் எடிசனை சந்தைக்கு கொண்டுவரவுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

20 வருட பயணத்தை நிறைவு செய்தது லோட்டஸ் எக்ஸிகே ஸ்போர்ட்ஸ்கார்... ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது...

ஒரிஜினல் எக்ஸிகே சீரிஸ் 1 மாடலின் அடிப்படையில் உருவாகும் இந்த ஸ்பெஷல் எடிசன் காரானது இந்த வருடத்திற்குள்ளாக சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும். ஸ்போர்ட்ஸ் கார் உலகில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய எக்ஸிகேவை கொண்டாடுவதற்கு இந்த 20வது ஆண்டுவிழாவிற்கான எடிசன் சரியான தேர்வாக இருக்கும் என லோட்டஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

20 வருட பயணத்தை நிறைவு செய்தது லோட்டஸ் எக்ஸிகே ஸ்போர்ட்ஸ்கார்... ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது...

தற்போதைய ஒரிஜின்ல் எக்ஸிகே காரை போன்று இந்த ஸ்பெஷல் எடிசனும் காரின் நிறத்தில் மேற்கூரை, பக்கவாட்டு ஏர் இண்டேக்குகள் மற்றும் பின்புற ஸ்பாய்லர் மட்டுமின்றி பின்புற சக்கரங்களுக்கு முன்புறத்தில் கருப்பு நிறத்தில் சுறாவின் துடுப்பு வடிவிலான பாதுகாப்பானையும் பெற்றுள்ளது.

20 வருட பயணத்தை நிறைவு செய்தது லோட்டஸ் எக்ஸிகே ஸ்போர்ட்ஸ்கார்... ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது...

முன்புற ஸ்பாய்லர் பேனல் மற்றும் பின்புற ஹேட்ச் உள்ளிட்டவை கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான எக்ஸிகே ஸ்போர்ட் 410 காரில் கூடுதல் தேர்வாகவே வழங்கப்பட்டு வருகிறது. மற்ற காஸ்மெட்டிக் மாற்றங்களாக எடைக்குறைவான ஃபார்க்டு அலாய் சக்கரங்கள் மற்றும் நைட்ரான் 3-வழி அட்ஜெஸ்டபிள் டேம்பர்கள் உள்ளன.

20 வருட பயணத்தை நிறைவு செய்தது லோட்டஸ் எக்ஸிகே ஸ்போர்ட்ஸ்கார்... ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது...

இதில் டேம்பர்களை ட்ரைவிங் சூழ்நிலைக்கு ஏற்றவாறு முழுவதும் அட்ஜெஸ்ட் செய்ய முடியும். லோட்டஸ் நிறுவனம் எக்ஸிகே சீரிஸ் 1 காருக்கு வழங்கப்பட்ட க்ரோம் ஆரஞ்ச், லேசர் ப்ளூ மற்றும் கலிப்ஸோ ரெட் என்ற மூன்று நிறத்தேர்வுகளை அப்படியே இந்த ஸ்பெஷல் எடிசனிற்கு வழங்கியுள்ளது.

20 வருட பயணத்தை நிறைவு செய்தது லோட்டஸ் எக்ஸிகே ஸ்போர்ட்ஸ்கார்... ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது...

இருப்பினும் மாடர்ன் தொடுதலை விருப்புவோருக்காக சஃப்ரோன் மஞ்சள், மோட்டார்ஸ்போர்ட் கருப்பு மற்றும் ஆர்ட்டிக் சில்வர் என்ற நிறங்களிலும் இந்த ஸ்பெஷல் எடிசன் விற்பனை செய்யப்படவுள்ளது.

20 வருட பயணத்தை நிறைவு செய்தது லோட்டஸ் எக்ஸிகே ஸ்போர்ட்ஸ்கார்... ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது...

மொத்த தோற்ற அளவில் ஒரிஜினல் எக்ஸிகே காரை ஒத்திருக்கும் இந்த ஸ்பெஷல் எடிசனில் பின்புற பம்பர் மற்றும் பக்கவாட்டு இண்டிகேட்டர்கள் உள்ளிட்டவை உடன் உள்ள 20 லோகோவை கொண்ட பின்பக்க ஸ்பாய்லர் தான் இது 20ஆம் வருடத்திற்கான ஸ்பெஷல் எடிசன் என்பதை வெளிக்காட்டுகிறது.

20 வருட பயணத்தை நிறைவு செய்தது லோட்டஸ் எக்ஸிகே ஸ்போர்ட்ஸ்கார்... ஸ்பெஷல் எடிசன் வெளிவருகிறது...

உட்புறத்தில் ஸ்பெஷல் எடிசன் என்பதற்காக அல்காண்ட்ரா இருக்கைகளில் 20வது ஆண்டுவிழாவிற்கான லோகோ தையல் இடப்பட்டும், டேஸ்போர்டில் தகடு வடிவிலும் வழங்கப்பட்டுள்ளது. மற்றப்படி ப்ளூடூத் இணைப்புடன் உள்ள டிஏபி ரேடியோ, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் அல்காண்ட்ரா ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Monday, June 29, 2020, 12:33 [IST]
English summary
Lotus Exige 20th Anniversary Special Edition Revealed
மேலும்... #லோட்டஸ் #lotus
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+