இந்தியர்களின் ஆவலை தூண்டி வரும் மலிவு விலை கார்களின் பட்டியல்... ரூ. 5 லட்சத்திற்கும் குறைவானவை..!

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் பட்ஜெட் விலையுடைய கார்களைப் பற்றிய தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இந்தியர்களின் ஆவலை தூண்டி வரும் மலிவு விலை கார்களின் பட்டியல்... ரூ. 5 லட்சத்திற்கும் குறைவானவை..!

வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இருந்தாலும், வல்லரசு நாடுகளுக்கு இணையாகவே வாகனங்களுக்கான விற்பனை நடைபெற்று வருகின்றது. மேலும், புதிய வாகனங்களுக்கு அதிக வரவேற்பு நிலவும் நாடுகளின் பட்டியலிலும் இந்தியா முன்னணியில் இருக்கின்றது. இதன்காரணமாகவே, இந்தியா ஓர் திறந்தவெளி வாகன சந்தை என்று அழைக்கப்படுகின்றது.

இந்தியர்களின் ஆவலை தூண்டி வரும் மலிவு விலை கார்களின் பட்டியல்... ரூ. 5 லட்சத்திற்கும் குறைவானவை..!

எனவே, உலக நாடுகள் பலவற்றில் இருக்கும் வாகன நிறுவனங்கள் தற்போது இந்தியாவை மையமாகக் கொண்டு களமிறங்கி வருகின்றன. இதற்கு அண்மையில் கால் தடம் பதித்த எம்ஜி மற்றும் கியா ஆகிய நிறுவனங்களே முக்கிய சான்று. இதுதவிர, பிஎஸ்ஏ, ஜிடபிள்யூஎம், செரி, ஜேஎல்ஆர், ஃபா ஹெய்மா மற்றும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களும் இந்தியாவில் கால் தடம் பதிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியர்களின் ஆவலை தூண்டி வரும் மலிவு விலை கார்களின் பட்டியல்... ரூ. 5 லட்சத்திற்கும் குறைவானவை..!

தற்போது உலகையே அச்சுறுத்தி கொரோனா வைரசே புதிய நிறுவனங்களின் அறிமுகத்திற்கு தடை கல்லாக அமைந்துள்ளது. வைரசால் நிலவி வரும் தடை காலம் முடிவுக்கு வந்த பின் இவை இந்தியாவில் ஒன்றன் பின் ஒன்றாக களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய நிறுவனங்களுக்கு மட்டுமின்றி கொரோனா வைரஸ் புதுமுக வாகனங்களின் அறிமுகத்திற்கும் முட்டுக் கட்டையாக அமைந்திருக்கின்றது.

இந்தியர்களின் ஆவலை தூண்டி வரும் மலிவு விலை கார்களின் பட்டியல்... ரூ. 5 லட்சத்திற்கும் குறைவானவை..!

எனவே, புதிய நிறுவனங்கள் எவ்வாறு இந்தியாவில் கால் தடம் பதிக்க முடியாமல் தவித்து வருகின்றனவோ, அதேபோன்று புதுமுக வாகனங்களும் இந்தியர்களின் கை சேர முடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்தியர்களின் ஆவலை தூண்டி வரும் மலிவு விலை கார்களின் பட்டியல்... ரூ. 5 லட்சத்திற்கும் குறைவானவை..!

அவ்வாறு, விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கும் 5 கார்களின் பட்டியலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். அதுவும், ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான விலையில் களமிறங்க இருக்கும் கார்களைப் பற்றிய தகவலைதான் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

இந்தியர்களின் ஆவலை தூண்டி வரும் மலிவு விலை கார்களின் பட்டியல்... ரூ. 5 லட்சத்திற்கும் குறைவானவை..!

டட்சன் ரெடி-கோ

தற்போது விற்பனையில் இருக்கும் டட்சன் ரெடி-கோ மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனைதான் அந்நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய காத்திருக்கின்றது. இது டட்சன் நிறுவனத்தின் ஆரம்பநிலை மாடலாகும். குறிப்பாக, பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தப்பட்ட எஞ்ஜினை முக்கிய அப்கிரேஷனாக ரெடி-கோ மாடலில் வழங்கியிருக்கின்றது டட்சன் நிறுவனம்.

இந்தியர்களின் ஆவலை தூண்டி வரும் மலிவு விலை கார்களின் பட்டியல்... ரூ. 5 லட்சத்திற்கும் குறைவானவை..!

இந்த புதிய தரத்திலான ரெடி-கோ மாடலை அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தும் விதமாக அந்நிறுவனம் டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டீசர் வீடியோவில் ரெடி-கோ மாடலின் புதுப்பித்தல் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தியர்களின் ஆவலை தூண்டி வரும் மலிவு விலை கார்களின் பட்டியல்... ரூ. 5 லட்சத்திற்கும் குறைவானவை..!

அதாவது, புத்தம் புதிய ஸ்போர்ட்டி லுக்கிலான ஹெட்லேம்ப், எல் வடிவத்திலான டிஆர்எல்கள் மற்றும் புத்தம் புதிய பம்பர் உள்ளிட்டவை அப்கிரேட் செய்யப்பட்டிருப்பதை அந்த வீடியோ காட்டுகின்றது.

இதுமட்டுமின்றி, காரின் கேபின், கிரில், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் என அனைத்தும் புதுமுக தோற்றத்திற்கு ஏற்பவாறு அப்டேட் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்தியர்களின் ஆவலை தூண்டி வரும் மலிவு விலை கார்களின் பட்டியல்... ரூ. 5 லட்சத்திற்கும் குறைவானவை..!

புதுப்பித்தலைப் பெற்று களமிறங்கும் டட்சன் ரெடிகோ 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்கு வரவிருக்கின்றது. இவையிரண்டும் பிஎஸ்-6 தரத்திலானவை ஆகும். இவ்விரு கார்களும் இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான விலையிலேயே விற்பனைக்கு வரவிருக்கின்றது. இதன் அறிமுகம் இன்னும் ஓரிரு மாதங்களில் அரங்கேறிவிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியர்களின் ஆவலை தூண்டி வரும் மலிவு விலை கார்களின் பட்டியல்... ரூ. 5 லட்சத்திற்கும் குறைவானவை..!

புதிய தலைமுறை மாருதி சுசுகி செலிரியோ

மாருதி சுசிகி நிறுவனம் கடந்த ஆறு வருடங்களுக்கு பட்ஜெட் விலை வாகனமாக செலிரியோ மாடலை அறிமுகம் செய்தது. தற்போது வரை இந்த மாடலின் முதல் தலைமுறை வெர்ஷனே விற்பனயில் இருக்கின்றது. இதனை மாருதி சுசுகி நிறுவனம் இப்போது அடுத்த தலைமுறைக்கு லெவலுக்கு அப்கிரேட் செய்திருக்கின்றது. இந்த புதிய தலைமுறை செலிரியோவில் தற்போதைய நவீன யுகத்திற்கு அம்சங்கள் சில சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இந்தியர்களின் ஆவலை தூண்டி வரும் மலிவு விலை கார்களின் பட்டியல்... ரூ. 5 லட்சத்திற்கும் குறைவானவை..!

குறிப்பாக, வெளி மற்றும் உட்புற தோற்றம், எல்இடி மின் விளக்கு, அலாய் வீல்கள், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை அடுத்த தலைமுறை வெர்ஷனுக்கு ஏற்பவாறு அப்கிரேட் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த காரில் பிஎஸ்-6 தரத்திலான 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரும் இந்தியாவில் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான விலையில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வரும் விழாக் காலங்களில் ஏதேனும் ஒன்றில் இந்த கார் அறிமுகமாகிவிடலாம் என கூறப்படுகின்றது.

இந்தியர்களின் ஆவலை தூண்டி வரும் மலிவு விலை கார்களின் பட்டியல்... ரூ. 5 லட்சத்திற்கும் குறைவானவை..!

ஹூண்டாய் ஏஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு எப்போதும் தனி மவுசுதான். அதிலும், சிறிய ரக எஸ்யூவி-க்கு கூடுதல் வரவேற்பு காணப்படுகின்றது. இதன்காரணமாகவே, வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் அதிகம் எஸ்யூவி கார்களை களமிறக்கி வருகின்றன.

இந்தியர்களின் ஆவலை தூண்டி வரும் மலிவு விலை கார்களின் பட்டியல்... ரூ. 5 லட்சத்திற்கும் குறைவானவை..!

அந்தவகையில், ஹூண்டாய் ஏஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி காரும் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது. இந்த காரின் தோற்றம் மற்றும் அதில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் அனைத்தும் இந்தியர்கள் மத்தியில் அதிக ஆவலைத் தூண்டியிருக்கின்றது.

இந்தியர்களின் ஆவலை தூண்டி வரும் மலிவு விலை கார்களின் பட்டியல்... ரூ. 5 லட்சத்திற்கும் குறைவானவை..!

இதனை ஹூண்டாய் நிறுவனம் கே1 பிளாட்பாரத்தில் வைத்து உற்பத்திச் செய்திருக்கின்றது. இதே பிளாட்பாரத்தில்தான் சேன்ட்ரோ உள்ளிட்ட கார்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

பட்ஜெட் விலையில் எதிர்பார்க்கப்படும் இந்த காரில், 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் இடம்பெறலாம் என கூறப்படுகின்றது. இதே எஞ்ஜின்தான் சேன்ட்ரோ காரிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 69 பிஎஸ் மற்றும் 99 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது.

இந்தியர்களின் ஆவலை தூண்டி வரும் மலிவு விலை கார்களின் பட்டியல்... ரூ. 5 லட்சத்திற்கும் குறைவானவை..!

புதுப்பிக்கப்பட்ட ஹூண்டாய் சேன்ட்ரோ

ஹூண்டாய் நிறுவனம் புதுமுக மைக்ரோ எஸ்யூவி காரை மட்டுமின்றி புதுப்பிக்கப்பட்ட சேன்ட்ரோ காரையும் இந்தியாவில் களமிறக்க இருக்கின்றது. இந்த கார் தற்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வரும் வேகன்-ஆர் போன்ற ஒரு சில புகழ்வாய்ந்த மாடல்களுக்கு போட்டியாக களமிறங்க இருக்கின்றது.

இந்தியர்களின் ஆவலை தூண்டி வரும் மலிவு விலை கார்களின் பட்டியல்... ரூ. 5 லட்சத்திற்கும் குறைவானவை..!

இந்த காரில் 1.1 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு பெட்ரோல் எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியர்களின் ஆவலை தூண்டி வரும் மலிவு விலை கார்களின் பட்டியல்... ரூ. 5 லட்சத்திற்கும் குறைவானவை..!

டாடா எச்பிஎக்ஸ்

கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம் வழங்கி, அனைவரின் எதிர்பார்பையும் தூண்டுவித்த மாடல்களில் ஒன்றாக டாடாவின் எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி கார் இருக்கின்றது. இந்த காரின் உற்பத்தி ஏற்கனவே ஆரம்பித்துவிட்டநிலையில், இதனை இந்தியர்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இதன் அறிமுகத்திற்கு கொரோனா வைரஸ் முட்டுக் கட்டையாக அமைந்துள்ளது.

இந்தியர்களின் ஆவலை தூண்டி வரும் மலிவு விலை கார்களின் பட்டியல்... ரூ. 5 லட்சத்திற்கும் குறைவானவை..!

இந்த கார் இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் கேயூவி100 மற்றும் மாருதி சுசுகி இக்னிஸ் உள்ளிட்ட கார்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இருக்கின்றது.

இந்த கூற்றிற்கு ஏற்ப டாடா நிறுவனம் புதிய எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி காரை, அதன் 2.0 டிசைன் மொழியில் வைத்து உருவாக்கியிருக்கின்றது.

இந்தியர்களின் ஆவலை தூண்டி வரும் மலிவு விலை கார்களின் பட்டியல்... ரூ. 5 லட்சத்திற்கும் குறைவானவை..!

எனவே, இந்த காரில் பல தொழில்நுட்பங்கள் அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டி உள்ளிட்ட ஏராளமான வசதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இத்துடன், இந்த காரும் இந்தியாவில் ரூ. 5 என்ற பட்ஜெட் விலையில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது.

Most Read Articles
English summary
Low-Priced Cars With High Expectations Of Less Than Rs. 5 Lakhs. Read In Tamil.
Story first published: Tuesday, May 5, 2020, 18:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X