கார் திருட்டு வழக்கில் சிக்கிய திரை பிரபலம்! போலீஸின் அதிரடியில் அம்பலமான திருட்டு தொழிலின் புதுரூட்

காரை திருடவும், அதை விற்கவும் கொள்ளையர்கள் புது டெக்னிக்கை பயன்படுத்தியிருப்பது போலீஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்துடன், திரை பிரபலம் ஒருவர் சிக்கியிருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கார் திருட்டு வழக்கில் சிக்கிய திரை பிரபலம்! காவல்துறையின் அதிரடியில் கண்டுபிடிக்கப்பட்ட திருட்டு தொழிலின் புது ரூட்...

திருட்டு சம்பவங்கள் எப்போதுமே காவல்துறைக்கு பெரும் சவாலான ஒன்றாகவே இருந்து வருகின்றது. அதிலும், வாகன திருட்டு என்பது அவர்களுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. ஏனென்றால், கை வரிசையைக் காட்டும் கொள்ளையர்கள் முன்பெப்போதும் இல்லாத வகையில் புதிய தொழில்நுட்ப வசதிகளை தற்போதுக் கையாளத் தொடங்கியிருக்கின்றனர்.

கார் திருட்டு வழக்கில் சிக்கிய திரை பிரபலம்! காவல்துறையின் அதிரடியில் கண்டுபிடிக்கப்பட்ட திருட்டு தொழிலின் புது ரூட்...

அதுமட்டுமின்றி, திருடப்பட்ட வாகனங்களை உடனடியாக மாநிலம் விட்டு மாநிலம் கடத்துதல் மற்றும் உதிரி பாகங்களாக மாற்றி விற்பனைச் செய்தல் உள்ளிட்டவற்றை செய்து விடுகின்றனர். இதனால், திருடப்பட்ட வாகனத்தைக் கண்டுபிடிப்பதில் மிகுந்த சிக்கல் நிலவுகின்றது.

கார் திருட்டு வழக்கில் சிக்கிய திரை பிரபலம்! காவல்துறையின் அதிரடியில் கண்டுபிடிக்கப்பட்ட திருட்டு தொழிலின் புது ரூட்...

இந்நிலையில், விநோதமான திருட்டு சம்பவம் பற்றிய தகவல் இணையத்தின் வைரலாகி வருகின்றது. அதுகுறித்த ஈடி ஆட்டோ தளம் வெளியிட்ட தகவலின்படி, குறிப்பிட்ட பெரும் புள்ளிகள் இணைந்து காரை திருடி, புது டெக்னிக்கைப் பயன்படுத்தி அக்காரை செகண்ட் ஹேண்ட் சந்தையில் விற்பனைச் செய்து வந்தது தெரிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியா கேட்டிராத ஓர் தகவல் என்பதால் இது நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கார் திருட்டு வழக்கில் சிக்கிய திரை பிரபலம்! காவல்துறையின் அதிரடியில் கண்டுபிடிக்கப்பட்ட திருட்டு தொழிலின் புது ரூட்...

அதாவது, விபத்தில் சிக்கி சிதைந்து போகும் வாகனங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் அந்த திருட்டு கும்பல், அக்காரின் ஆவணங்களை சேகரிக்கத் தொடங்குவர். பின்னர், அதேமாதிரியான ஓர் வாகனத்தைத் தேர்வு செய்து அதை களவு செய்ய திட்டமிடுவர்.

திட்டமிட்டபடி வாகனம் களவு செய்யப்பட்ட பின்னர், அதன் சேஸிஸ் மற்றும் பதிவெண்களை கோக்குமாக்கு செய்து மாற்றுவர்.

கார் திருட்டு வழக்கில் சிக்கிய திரை பிரபலம்! காவல்துறையின் அதிரடியில் கண்டுபிடிக்கப்பட்ட திருட்டு தொழிலின் புது ரூட்...

இதன்பின்னர், முழுமையாக மாற்றம் செய்யப்பட்ட அந்த காரை செகண்ட் ஹேண்ட் சந்தையில் விற்று கொள்ளை லாபம். விபத்தில் உருக்குலைந்துபோன வாகனத்தின் ஆவணத்தைப் பெற கணிசமான தொகையை அதன் உரிமையாளர்களுக்கும் அவர்கள் வழங்கியுள்ளனர்.

கார் திருட்டு வழக்கில் சிக்கிய திரை பிரபலம்! காவல்துறையின் அதிரடியில் கண்டுபிடிக்கப்பட்ட திருட்டு தொழிலின் புது ரூட்...

பெரும்பாலும் விலையுயர்ந்த கார்களே இந்த கும்பலின் பிரதான தேர்வாக இருந்து வந்துள்ளது. சில நேரங்களில் வழக்கமான கார்களையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. ஆனால், குறைந்த விலை காரில் லாபம் மிக கம்மி என்பதால் உயர் ரக கார்களையே அவர்கள் அதிகம் களவு செய்து வந்துள்ளனர்.

கார் திருட்டு வழக்கில் சிக்கிய திரை பிரபலம்! காவல்துறையின் அதிரடியில் கண்டுபிடிக்கப்பட்ட திருட்டு தொழிலின் புது ரூட்...

இந்த நிலையில்தான் லக்னோ போலீஸார் அந்த கொள்ளை கும்பலையும் 30-க்கும் அதிகமான விலையுயர்ந்த கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர். அதேசமயம், இவர்களிடத்தில் 80க்கும் அதிகமான திருடப்பட்ட கார்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. ஆனால், தற்போது 30 கார்களை மட்டுமே அவர்களிடத்தில் இருந்து போலீஸார் மீட்டுள்ளனர்.

கார் திருட்டு வழக்கில் சிக்கிய திரை பிரபலம்! காவல்துறையின் அதிரடியில் கண்டுபிடிக்கப்பட்ட திருட்டு தொழிலின் புது ரூட்...

அதில், பெரும்பாலானவே உயர் ரக கார்களாகவே இருக்கின்றன. அதாவது நாட்டின் விலையுயர்ந்த கார் என போற்றப்படும் பிஎம்டபிள்யூ, பென்ஸ் ஆகியவற்றின் தயாரிப்புகளே மிக அதிகமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்துடன், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற வழக்கமான உயர் ரக கார்களும் அவர்களிடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கார் திருட்டு வழக்கில் சிக்கிய திரை பிரபலம்! காவல்துறையின் அதிரடியில் கண்டுபிடிக்கப்பட்ட திருட்டு தொழிலின் புது ரூட்...

இந்த கொள்ளைக் கும்பலுக்கு எப்படி விபத்து கார்கள் பற்றிய தகவல் கிடைக்கிறது மற்றும் அவர்கள் எப்படி அந்த கார்களின் ஆவணங்களைப் பெறுகின்றனர் என்ற பல கேள்வி எழும்பலாம். இதற்கான விடை பின்வருமாறு.

கொள்ளை கும்பலுக்கும் பிரபல தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது.

கார் திருட்டு வழக்கில் சிக்கிய திரை பிரபலம்! காவல்துறையின் அதிரடியில் கண்டுபிடிக்கப்பட்ட திருட்டு தொழிலின் புது ரூட்...

இந்த அதிகாரிகளே தங்களிடத்தில் வரும் விபத்தான வாகனங்கள் பற்றிய தகவலை கொள்ளையர்களுக்கு பகிர்ந்துள்ளனர்.

இதற்காக குறிப்பிட்ட தொகை அவர்களுக்கு கை மாற்றப்பட்டுமாம். இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான மொஹமத் ரிஷ்வான் (50) என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கார் திருட்டு வழக்கில் சிக்கிய திரை பிரபலம்! காவல்துறையின் அதிரடியில் கண்டுபிடிக்கப்பட்ட திருட்டு தொழிலின் புது ரூட்...

இவர் கொடுத்த தகவல் மற்றும் அவரிடத்தில் இருந்து கைப் பற்றப்பட்ட ஆவணங்களின்படி மேலும் பல முக்கிய பிரமுகர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதில், போஜ்பூரி திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் நசிர் கான் (42) அடங்குவார். இவர்களுடன் மேலும் 5 பேரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

கார் திருட்டு வழக்கில் சிக்கிய திரை பிரபலம்! காவல்துறையின் அதிரடியில் கண்டுபிடிக்கப்பட்ட திருட்டு தொழிலின் புது ரூட்...

இவர்களுடன் சேர்த்து கொள்ளை கும்பல் தலைவன் ரிஷ்வான் வெளியிட்ட தனியார் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் 11 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் மையமாகக் கொண்டு வாகனங்களைத் திருடி வந்துள்ளனர். மிக முக்கியமாக ஜம்மு மற்றும் காஷ்மீர், அசாம், உபி உள்ளிட்ட வட மாநிலங்களில்தான் இவர்கள் அதிகம் கை வரிசை காட்டியுள்ளனர்.

கார் திருட்டு வழக்கில் சிக்கிய திரை பிரபலம்! காவல்துறையின் அதிரடியில் கண்டுபிடிக்கப்பட்ட திருட்டு தொழிலின் புது ரூட்...

இதில் காரை களவாட மற்றும் அதனை செகண்ட் ஹேண்ட் சந்தையில் விற்பனைச் செய்ய உயர் ரக தொழில்நுட்ப கருவிகளை அவர்கள் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இது போலீஸாருக்கே ஷாக்களிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கார் திருட்டு வழக்கில் சிக்கிய திரை பிரபலம்! காவல்துறையின் அதிரடியில் கண்டுபிடிக்கப்பட்ட திருட்டு தொழிலின் புது ரூட்...

சமீபத்தில்கூட இதேபோன்றதொரு கொள்ளையன் பத்து மேற்பட்ட கார்களுடன் கைது செய்யப்பட்டிருந்தான்.

இதைத்தொடர்ந்தே, 30க்கும் மேற்பட்ட திருடப்பட்ட கார்களுடன் ஒருவர் சிக்கியிருக்கின்றார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்று திருட்டுகளைத் தவிர்க்கும் விதமாக நாட்டில் பல தொழில்நுட்ப கருவிகள் குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் திருட்டைத் தவிர்க்க மற்றும் திருடப்பட்ட வாகனங்களை எளிதில் கண்டறியவும் முடியும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 23, 2020, 17:29 [IST]
English summary
Lucknow Police Seize 80 Stolen High End Luxury Cars Worth Rs.30 Crore Details. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+