லேடி காகா - லம்போர்கினி கூட்டணி... எதுக்காகனு தெரிஞ்சா நிச்சயம் பாராட்டுவீங்க... இதுக்குக்கூட தனி மனசு வேணுங்க

லேடி காகா-வும், சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினியும் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான காரணத்தை இப்பதிவில் காணலாம்.

லேடி காகா - லம்போர்கினி கூட்டணி... எதுக்காகனு தெரிஞ்சா நிச்சயம் பாராட்டுவீங்க... இதுக்குக்கூட தனி மனசு வேணுங்க!!

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகி லேடி காகா (Lady Gaga)-வும், உலக புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினியும் கை கோர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் இணைந்து கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டோர்களுக்கு உதவுவதற்காகவே இணைந்திருக்கின்றனர்.

லேடி காகா - லம்போர்கினி கூட்டணி... எதுக்காகனு தெரிஞ்சா நிச்சயம் பாராட்டுவீங்க... இதுக்குக்கூட தனி மனசு வேணுங்க!!

அதவாது, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர்களுக்கு ஆதரவளிப்பதற்காக இவர்கள் சேர்ந்திருக்கின்றனர். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் நிதி திரட்டி வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர்.

லேடி காகா - லம்போர்கினி கூட்டணி... எதுக்காகனு தெரிஞ்சா நிச்சயம் பாராட்டுவீங்க... இதுக்குக்கூட தனி மனசு வேணுங்க!!

கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த காலத்தில் உலகின் அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் அவற்றால் இயன்ற உதவிகளை வழங்கின. இந்தியாவில் ஜம்பவான் நிறுவனமான டாடா குழுமம் செய்த உதவிகளை அளவிடவே முடியாது. எண்ணற்ற உதவிகளை அது வழங்கியது.

லேடி காகா - லம்போர்கினி கூட்டணி... எதுக்காகனு தெரிஞ்சா நிச்சயம் பாராட்டுவீங்க... இதுக்குக்கூட தனி மனசு வேணுங்க!!

இதேபோன்று, மஹிந்திரா மற்றும் ஹீரோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நிதியுதவியை வாரி வழங்கின. இம்மாதிரியான சூழ்நிலையில் தற்போது லம்போர்கினி நிறுவனம், லேடி காகாவுடன் இணைந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிக் கரம் நீட்டும் விதமாக நிதி திரட்ட ஆரம்பித்திருக்கின்றனர்.

லேடி காகா - லம்போர்கினி கூட்டணி... எதுக்காகனு தெரிஞ்சா நிச்சயம் பாராட்டுவீங்க... இதுக்குக்கூட தனி மனசு வேணுங்க!!

நிதி திரட்டும் இப்பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. இது டிசம்பர் 16 வரை நடைபெற உள்ளது. ஆமேஸ் (Omaze) இயங்கு தளத்தின் வாயிலாக காகாவின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தகுந்தது. இதில், பங்கு கொள்வதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என கூறப்படுகின்றது. இருப்பினும், பிற நிதி மற்றும் விளம்பரங்களின் மூலம் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்கான பணம் திரட்டப்பட்டு வருகின்றது.

லேடி காகா - லம்போர்கினி கூட்டணி... எதுக்காகனு தெரிஞ்சா நிச்சயம் பாராட்டுவீங்க... இதுக்குக்கூட தனி மனசு வேணுங்க!!

இதில் கிடைக்கும் பெரும்பாலான பங்கு லேடி காகாவின் பார்ன் திஸ் வே அறக்கட்டளைக்கு (Born This Way Foundation) வழங்கப்பட இருக்கின்றது. இத்துடன், டுகெதர் ரைசிங் என்ற அமைப்பிற்கும் அவர்கள் உதவ திட்டமிட்டிருக்கின்றனர். எனவே இவர்களின் முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றது. மேலும், இந்த நிகழ்வில் பங்கு கொள்வோரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து ‘911' ஆல்பத்தில் லேடி காகா பயன்படுத்திய லம்போர்கினி காரை பரிசாக வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

லேடி காகா - லம்போர்கினி கூட்டணி... எதுக்காகனு தெரிஞ்சா நிச்சயம் பாராட்டுவீங்க... இதுக்குக்கூட தனி மனசு வேணுங்க!!

லேடி காகா மற்றும் லம்போர்கினி ஆகிய இருவருக்கும் உலகளவில் ரசிகர்கள் ஏராளம் என்பதால் இவர்களின் முயற்சியின்மூலம் பெரும் தொகை நிதியாக திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த முடிவுகள் நிகழ்ச்சியின் கடைசி நாளான வருகின்ற 16ம் தேதி அன்றே தெரியவரும். இந்த திரட்டும் முயற்சிக்கு இணையவாசிகள் மத்தியிலும் பேராதரவு கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Luxury Car Maker Lamborghini & Lady Gaga Partnered For Raise Funds To Help Impacted Covid-19 People. Read In Tamil
Story first published: Tuesday, December 15, 2020, 7:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X