உலக நாடுகளை மெர்சலாக்கிய இந்தியா! 8நாட்களில் தயாரான நடமாடும் டெஸ்ட் லேப்! இதுல இவ்ளே ஸ்பெஷல் இருக்கா

உலக நாடுகளுக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் அதிநவீன நடமாடும் பரிசோதனைக் கூடத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலக நாடுகளை மெர்சலாக்கிய இந்தியா! 8 நாட்களில் உருவான நடமாடும் பரிசோதனை மையம்... இதுல இவ்ளே ஸ்பெஷல் இருக்கா?

உலக நாடுகள் அனைத்தும் கண்ணுக்கே தெரியாத ஒற்றை வைரஸ் கொரோனாவிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றன. சீனாவின் வுஹான் நகரத்தில் காணப்பட்ட இந்த உயிர் கொல்லி வரைஸ் தற்போது உலக நாடுகள் பலவற்றில் பரவிக் காணப்படுகின்றது. இதனால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். பல வளர்ந்த நாடுகளூம்கூட வைரசின் கோர பிடியில் சிக்கி சிதைந்துக் கொண்டிருக்கின்றன.

உலக நாடுகளை மெர்சலாக்கிய இந்தியா! 8 நாட்களில் உருவான நடமாடும் பரிசோதனை மையம்... இதுல இவ்ளே ஸ்பெஷல் இருக்கா?

அந்தவகையில், கொரோனாவின் கொடூர பிடியில் சிக்கியிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கின்றது. ஆரம்பத்தில் ஆயிரக் கணக்கில் மட்டுமே காணப்பட்ட நோய் தொற்று, தற்போது லட்சத்தை எட்டியுள்ளது.

எனவே, நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் லாக்டவுண் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உலக நாடுகளை மெர்சலாக்கிய இந்தியா! 8 நாட்களில் உருவான நடமாடும் பரிசோதனை மையம்... இதுல இவ்ளே ஸ்பெஷல் இருக்கா?

அதிலும், வைரசின் தொற்று சற்று கூடுதலாகக் காணப்படும் தமிழகம், மஹாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் முன்பைக் காட்டிலும் தற்போது கட்டுப்பாடுள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதேசமயம், கொரோனா வைரசை அழிப்பதற்கான முயற்சிகளும் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

உலக நாடுகளை மெர்சலாக்கிய இந்தியா! 8 நாட்களில் உருவான நடமாடும் பரிசோதனை மையம்... இதுல இவ்ளே ஸ்பெஷல் இருக்கா?

அந்தவகையில், கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளும் நடமாடும் டெஸ்டிங் லேப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டிலேயே இதுமாதிரியான லேப் பயன்பாட்டுக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை அடக்கிய இந்த லேப் தற்போது டெல்லியில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

உலக நாடுகளை மெர்சலாக்கிய இந்தியா! 8 நாட்களில் உருவான நடமாடும் பரிசோதனை மையம்... இதுல இவ்ளே ஸ்பெஷல் இருக்கா?

இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கொடியசைத்து துவங்கி வைத்தார். நாட்டின் மூலை-முடுக்கெல்லாம் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் விதமாக இந்த நடமாடும் பரிசோதனை மையம் கொண்டுவரப்பட்டுள்ளது.

உலக நாடுகளை மெர்சலாக்கிய இந்தியா! 8 நாட்களில் உருவான நடமாடும் பரிசோதனை மையம்... இதுல இவ்ளே ஸ்பெஷல் இருக்கா?

இந்த நடமாடும் பரிசோதனை மையத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த ஆய்வகத்தை வொறொரு வாகனத்திற்கும் தூக்கி மாற்றிவிட முடியும் என்பதாகும். அதாவது, இந்த ஆய்வகம் தனி கன்டெய்னரைப் போன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், இதனை மற்ற எந்த சரக்கு வாகனத்தில் வேண்டுமானாலும் நிலை நிறுத்த முடியும். அல்லத வாகனமே இல்லாமல்கூட தனியாக நிறுத்த முடியும். எனவே, இதனை ரயில் போன்ற வாகனங்கள் மூலம் நாட்டின் பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைப்பது மிக சுலபம்.

உலக நாடுகளை மெர்சலாக்கிய இந்தியா! 8 நாட்களில் உருவான நடமாடும் பரிசோதனை மையம்... இதுல இவ்ளே ஸ்பெஷல் இருக்கா?

இதுமாதிரியான ஓர் பரிசோதனை மையத்தை இந்தியா உருவாக்கியிருப்பது உலக நாடுகள் மத்தியில் பெருமைப்பட கூட விஷயமாக உள்ளது. மேலும், இந்த பரிசோனை மையத்தில் மாதிரிகள் கொடுக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ரிசல்ட் கிடைத்து விடும் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாக உள்ளது. அதாவது, இதில் ரேபில்ட் ரெஸ்பான்ஸ் தொழில்நுட்பம் அடங்கிய பரிசோதனை கருவிகள் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இது மற்ற சோதனை மையங்களைக் காட்டிலும் அதி வேகத்தில் பரிசோதனை முடிவுகளை வழங்கும்.

உலக நாடுகளை மெர்சலாக்கிய இந்தியா! 8 நாட்களில் உருவான நடமாடும் பரிசோதனை மையம்... இதுல இவ்ளே ஸ்பெஷல் இருக்கா?

இந்த நடமாடும் பரிசோதனை மையத்தை நாட்டின் பல முக்கிய நிறுவனங்கள் மற்றும் துறைகள் இணைந்து தயாரித்திருக்கின்றன. அந்தவகையில், பயோடெக்னாலஜி துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், ஆந்திரபிரதேஷ் மெட் டெக் ஷோன் மற்றும் விசாகப்பட்டினத்தை மையமாகக் கொண்டு நாட்டில் மருத்துவ சாதனங்களின் உற்பத்தியை ஊக்குவித்து வரும் மற்றுமொரு நிறுவனம் என பல நிறுவனங்களின் கூட்டணியிலேயே இந்த லேப் உருவாக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை மெர்சலாக்கிய இந்தியா! 8 நாட்களில் உருவான நடமாடும் பரிசோதனை மையம்... இதுல இவ்ளே ஸ்பெஷல் இருக்கா?

இந்த லேப்பை உருவாக்கியதில் மற்றுமொரு சிறப்பு விஷயம் என்னவென்றால் இதனை வெறும் 8 நாட்களுக்கு உள்ளாகவே மேற்கூறிய அனைத்து நிறுவனங்களும் இணைந்து உருவாக்கியிருக்கின்றது. இது கொரோனா எதிரான போரில் நாம் மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய சாதனை ஆகும்.

உலக நாடுகளை மெர்சலாக்கிய இந்தியா! 8 நாட்களில் உருவான நடமாடும் பரிசோதனை மையம்... இதுல இவ்ளே ஸ்பெஷல் இருக்கா?

அதேசமயம், இந்த பரிசோதனை மையத்தின் மூலம் கொரோனா மட்டுமின்றி மற்றும் சில கொடிய நோய்களான டிபி மற்றும் பாலியல் வியாதிகள் உள்ளிட்டவைகுறித்த பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகின்றது. இதற்கான சகல வசதிகளும் அந்த பரிசோதனைக் கூடத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், கொரோனா சற்றே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.

உலக நாடுகளை மெர்சலாக்கிய இந்தியா! 8 நாட்களில் உருவான நடமாடும் பரிசோதனை மையம்... இதுல இவ்ளே ஸ்பெஷல் இருக்கா?

அதேசமயம், ஒரு நாளில் 50 கொரோனா பரிசோதனையை மட்டுமே இந்த ஆய்வகத்தில் மேற்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், இதர பரிசோதனைகளை 200 வரை செய்ய முடியுமாம். இவற்றை ஒட்டுமொத்தமாக 500 மாற்றும் முயற்சியில் தயாரிப்பு குழு ஈடுபட்டு வருகின்றது. அதாவது, 8 மணி நேர ஷிஃப்டில் இவையனைத்தும் செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உலக நாடுகளை மெர்சலாக்கிய இந்தியா! 8 நாட்களில் உருவான நடமாடும் பரிசோதனை மையம்... இதுல இவ்ளே ஸ்பெஷல் இருக்கா?

என்ஏபிஎல் (National Accreditation Board for Testing and Calibration Laboratories) சான்று பெற்ற இந்த ஆய்வகத்திற்கு ஐ-லேப் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் 50 யூனிட்டுகள் நாட்டின் கிராம மற்றும் மருத்துவமனை வசதி இல்லாத பகுதிகளில் பயன்படுத்துவதற்காக அனுப்பப்பட உள்ளன.

உலக நாடுகளை மெர்சலாக்கிய இந்தியா! 8 நாட்களில் உருவான நடமாடும் பரிசோதனை மையம்... இதுல இவ்ளே ஸ்பெஷல் இருக்கா?

அவை, வைரஸ் அறிகுறி தென்படுபவர்கள் மற்றும் பிற வியாதியால் அவதிக்குள்ளாகி வருபவர்களுக்கு உரிய பரிசோதனையை வழங்க இருக்கின்றது. குறிப்பாக, கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையைக் கணிசமாக குறைக்க இந்த நடமாடும் லேப்கள் உதவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Made In India Mobile Lab For Covid-19 Testing Launched By Minister Harsh Vardhan. Read in Tamil.
Story first published: Saturday, June 20, 2020, 12:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X