சிங்கம் பட பாணியில் ஸ்டண்ட்! அடவாடி சாகசம் செய்த போலீசுக்கு ஆப்பு வைத்த காவல்துறை... என்னனு தெரியுமா
சிங்கம் திரைப்பட பாணியில் ஆபத்தான ஸ்டண்டை மேற்கொண்ட காவல் துணை ஆய்வாளருக்கு, சொந்த காவல்துறையே தண்டனை வழங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக இளைஞர்கள் சிலர் தேவையற்ற ஸ்டண்டுகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக, டிக் டாக், விகோ போன்ற சமூக வலைதள ஆப்புகளில் ஒரு ரூபாய்க்குகூட லாபமில்லாத லைக்குகளைப் பெற வேண்டியே பலர் சாகசங்களைச் செய்து வருகின்றனர். சில நேரங்களில் கண்டிக்கத்தக்க ஸ்டண்டுகளிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

அவ்வாறு, தேவையற்ற ஸ்டண்டுகளை மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு பாடம் புகட்டும் விதமாக போலீஸார், குறிப்பிட்ட இளைஞர்கள் (ஸ்டண்ட்டில் ஈடுபடுபவர்கள்) மீது கடுமையான நடவடிக்கை எடுக்கின்றனர். ஸ்டண்ட் என்பது அதனை மேற்கொள்பவர்க்கும், சக மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது.

இதன்காரணமாகவே, போலீஸார் அதனை மேற்கொள்ளும் இளைஞர்கள்மீது கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, இளைஞர்களின் செயல் மற்றவர்களை எக்காரணத்தைக் கொண்டும் தூண்டிவிடக்கூடாது என்பதற்காக உடனடி அதிரடி நடவடிக்கையில் அவர்கள் இறங்கிவிடுகின்றனர்.

ஆனால், நாம் இங்கு பார்க்கவிருக்கும் சம்பவம் சற்றே வித்தியாசமான மற்றும் தலைகீழான சம்பவம் ஆகும். ஆம், இந்த சம்பவத்தில் காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர் தேவையற்ற ஸ்டண்டில் ஈடுபட்ட காரணத்திற்காக அதே காவல்துறையால் தண்டிக்கப்பட்டுள்ளார்.

அதாவது, சட்டத்தைக் காக்க வேண்டிய காவல் பணியாளர் ஒருவரே விதிமீறி ஆபத்தான ஸ்டண்டுகளை ஓடும் காரில் செய்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறிய இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவரின் காவல் துணை ஆய்வாளரின் பெயர் மனோஜ் யாதவ் என கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுக்க கொரோனா வைரஸ் அலை ஓயாமல் அடித்துக் கொண்டிருக்கின்ற வேலையில், போலீஸ்காரரின் இந்த கண்டிக்கத்தக்க வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகத் தொடங்கியிருக்கின்றது. ஆனால், இது எப்போது எடுக்கப்பட்ட வீடியோ என்ற உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இருப்பினும், காவலர்மீது உரிய நடவடிக்கை எடுக்கும் விதமாக மத்திய பிரதேச காவல்துறை அவருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
காவலர் மேற்கொண்டிருக்கும் ஸ்டண்ட்டானது சிங்கம் ஹிந்தி டப்பிங் படத்தில் அஜய் தேவ்கன் மேற்கொண்ட முக்கியமான ஸ்டண்டுகளில் ஒன்று.

இதைத் தான் மீண்டும் காட்சியாக்கும் விதமாக இரு ஹோண்டா அமேஸ் கார்களை இயக்கியவாறு, அதன்மீது சீருடைஅணிந்த யாதவ் ஆக்சனில் ஈடுபட்டவாறு வீடியோவை எடுத்துள்ளார்.
பொதுவாக திரைப்படங்களில் இதுபோன்ற காட்சிகளை உருவாக்கும்போது உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் காட்சிப்பதிவு செய்யப்படும்.
ஆனால், காவலர் மனோஜ் யாதவ் மேற்கொண்ட சாகசத்தின்போது எந்தவொரு பாதுகாப்பு கருவியும் பயன்படுத்தப்படவில்லை. காவலரின் இந்த வீடியோ மற்ற இளைஞர்களைத் தூண்டிவிடக்கூடாது என மத்திய பிரதேச காவல்துறையினர், அந்த காவலருக்கு உடனடி அதிரடி தண்டனை வழங்கியிருக்கின்றது.

காவலரின் இந்த விநோத ஸ்டண்டிற்காக பயன்படுத்தப்பட்ட ஹோண்டா அமேஸ் கார்கள் இரண்டும் தற்போது போலீஸ் வசம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார்கள் யாருடையது என்பதுகுறித்த முழுமையான தகவலும் வெளியாகவில்லை.

இந்த வீடியோ தற்போது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகின்றது.
இதுபோன்ற ஸ்டண்ட் வீடியோக்கள் பல இணையத்தில் உலா வந்த வண்ணம் இருக்கின்றன.

அவ்வாறு, உலா வரும் வீடியோக்கள் பல மாதங்கள் இடைவெளி முன்னர் எடுக்கப்பட்டதாக இருந்தாலும் போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தவறுவதில்லை. அவ்வாறு பல புள்ளிங்கோ இளைஞர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையிலேயே காவல் துணை ஆய்வாளர் மனோஜ் யாதவ் மீது மத்திய பிரதேச காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அபராதத்தைப் போன்று துறை ரீதியாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை. இருப்பினும், வீடியோ வைரலானதைத் தொடர்ந்து மனோஜ் யாதவ் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சாகர் பகுதி ஐஜி அணில் ஷர்மா, யாதவின் உயர் அதிகாரியிடம் பரிந்துரைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications








