மஹிந்திரா கார்களுக்கு சிறப்பு கடன் திட்டம்!

வாடிக்கையாளர்களை கவரும் வகையில், மஹிந்திரா கார்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

மஹிந்திரா கார்களுக்கு சிறப்பு கடன் திட்டம்!

தேசிய பொது முடக்கத்தின் மூலமாக கொரோனா ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. நிலைமை நீடித்தால், பொருளாதாரம் பெரிய அடிவாங்கிவிடும் நிலை உள்ளது. இதனால், பொருளாதார நெருக்கடிகளை தவிர்த்துக் கொள்வதற்கு, கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு மக்களும், நிறுவனங்களும் தள்ளப்பட்டுள்ளன.

மஹிந்திரா கார்களுக்கு சிறப்பு கடன் திட்டம்!

ஆட்டோமெபைல் துறையும் கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில், கார் நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு கடன் திட்டங்களை அறிவித்து வருகின்றன.

மஹிந்திரா கார்களுக்கு சிறப்பு கடன் திட்டம்!

இந்த நிலையில், எஸ்யூவி தயாரிப்பில் பிரபலமான மஹிந்திரா கார் நிறுவனம் பல புதிய கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. இது பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்க திட்டமிடுவோருக்கு நெருக்கடிகளை தவிர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

மஹிந்திரா கார்களுக்கு சிறப்பு கடன் திட்டம்!

மஹிந்திரா காரை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு ரூ.899 என்ற மாதத் தவணை திட்டத்தை தேர்வு செய்து கடன் பெறும் வாய்ப்பு உள்ளது. அடுத்து வாகனத்தின் ஆன்ரோடு விலையில் 80 சதவீதம் வரை கடன் பெறும் வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது.

மஹிந்திரா கார்களுக்கு சிறப்பு கடன் திட்டம்!

அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை திரும்ப செலுத்தும் கால அவகாசத்துடன் கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. முதல் 6 மாதங்களுக்கு 50 சதவீதம் குறைவான மாதத் தவணை திட்டங்களும் உள்ளன.

மஹிந்திரா கார்களுக்கு சிறப்பு கடன் திட்டம்!

மேலும், காரின் எக்ஸ்ஷோரூம் விலையில் 10 சதவீதம் வரை ஆக்சஸெரீகளுக்கும் கடன் பெறும் திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது புதிதாக கார் வாங்குவோர் பொருளாதார நெருக்கடியால் கூடுதல் ஆக்சஸெரீகளை தவிர்க்க வேண்டியது இருக்காது.

மஹிந்திரா கார்களுக்கு சிறப்பு கடன் திட்டம்!

மாதச் சம்பளதாரர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தக வாகன உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் தக்கவாறு, தகுதியின் அடிப்படையில் பல்வேறு சிறப்பு கடன் திட்டங்கள் உள்ளதாகவும் குறிப்படப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா கார்களுக்கு சிறப்பு கடன் திட்டம்!

கடந்த இரு மாதங்களில் அறிவிக்கப்பட்ட சிறப்பு கடன் திட்டங்களுடன் சேர்த்து, இந்த புதிய கடன் திட்டங்களையும் வாடிக்கையாளர்கள் பெறலாம் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை அருகாமையிலுள்ள மஹிந்திரா டீலரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 30, 2020, 14:30 [IST]
English summary
Mahindra has announced new set of finance schemes for its customers.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+