சத்தமில்லாமல் வந்த புதிய மஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 மாடல்... வியக்க வைக்கும் விலை பட்டியல்!
புதுப்பொலிவுடன் மிக சவாலான விலையில், மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விலை மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் நம்பர் 1 மாடலாக மஹிந்திரா பொலிரோ இருந்து வந்தது. இந்த நிலையில், காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் வருகையால் மஹிந்திரா பொலிரோவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. நம்பர் 1 இடத்தை இழந்தாலும், விற்பனையில் குறிப்பிடத்தக்க இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது பொலிரோ.

இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கும் நிலையில், பிஎஸ்6 எஞ்சின் பொருத்தப்பட்ட மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மேலும், வடிவமைப்பிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கும் நிலையில், பிஎஸ்6 எஞ்சின் பொருத்தப்பட்ட மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மேலும், வடிவமைப்பிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய மாடலில் ஃபேப்ரிக் இருக்கைகள், சிறிய மின்னணு திரை மூலமாக கார் ஓடிய தூரம், எரிபொருளில் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும், கதவுகள் திறந்திருப்பது குறித்த தகவல்களை பெறும் வசதியுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் வந்துள்ளது.

புதிய மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி 7 சீட்டர் ஆப்ஷனில் தொடர்ந்து கிடைக்கும். ஆக்ஸ் போர்ட் மற்றும் யுஎஸ்பி சப்போர்ட் செய்யும் மியூசிக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் எம்ஹாக் 75 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 75 பிஎச்பி பவரையும், 210 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

மஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 மாடலானது மூன்றே வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும். அதாவது, B4, B6 மற்றும் B6 (O) ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பல வேரியண்ட்டுகள் நீக்கப்பட்டுவிட்டன.

புதிய மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது. ஹை ஸ்பீடு அலர்ட், சீட் பெல்ட் வார்னிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்களும் உள்ளன.

புதிய மஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 மாடலின் பி4 வேரியண்ட்டிற்கு ரூ.7.76 லட்சம் விலையும், பி6 வேரியண்ட்டிற்கு ரூ.8.42 லட்சம் விலையும், பி6 ஆப்ஷனல் வேரியண்ட்டிற்கு ரூ.8.78 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஊரகப் பகுதிகளில் கொடுக்கும் பணத்திற்கு மதிப்புவாய்ந்த மாடலாக மஹிந்திரா பொலிரோ போற்றப்படுகிறது. எனவே, பிஎஸ்4 மாடலைவிட மிக குறைந்த விலை உயர்வுடன் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








