மஹிந்திரா பிஎஸ்-6 கார்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் ஆஃபர்... முழு விபரம்!

வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் விதமாக, சிறப்பு சேமிப்புச் சலுகைகளை மஹிந்திரா கார் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

 மஹிந்திரா கார்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் ஆஃபர்!

கொரோனா பாதிப்பிலிருந்து வர்த்தகத்தை மீட்டெடுக்கும் விதமாக, பல்வேறு ஆஃபர்களை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இந்த வரிசையில் மஹிந்திரா நிறுவனமும் பல டிஸ்கவுண்ட் ஆஃபர்களை தனது கார்களுக்கு அறிவித்துள்ளது. விலையில் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் என மஹிந்திரா கார்கள் மீது அதிகபட்சமாக ரூ.3.05 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

 மஹிந்திரா கார்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் ஆஃபர்!

மஹிந்திரா கேயூவி100 NXT

மஹிந்திராவின் விலை குறைவான எஸ்யூவி மாடலாக இருந்து வரும் கேயூவி100 NXT மாடலுக்கு ரூ.70,000 வரை டிஸ்கவுண்ட் பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.16,770 வரை நேரடி தள்ளுபடியாகவும், ரூ.28,750 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.4,000 வரை கார்ப்பரேட் போனசாகவும் பெறலாம். வேரியண்ட்டுக்கு தக்கவாறு டிஸ்கவுண்ட் மாறுபடும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு ரூ.69,500 வரை சேமிப்பு பெறும் வாய்ப்புள்ளது. இதன்படி, ரூ.30,000 விலையில் தள்ளுபடியாகவும், ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் அதிகபட்சமாக பெறலாம். கார்ப்பரேட் போனசாக ரூ.4,500 வரை வழங்கப்படுகிறது. வேரியண்ட்டிற்கு தக்கவாறு டிஸ்கவுண்ட் ஆஃபர் மாறுபடும்.

 மஹிந்திரா கார்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் ஆஃபர்!

மஹிந்திரா பொலிரோ

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிக்கு ரூ.14,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு உள்லது. இதில், ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.4,000 கார்ப்பரேட் போனசாகவும் வழங்கப்படும். வேரியண்ட்டிற்கு தக்கவாறு ஆஃபர் மாறுபடும்.

மஹிந்திரா பிஎஸ்-6 கார்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் ஆஃபர்!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவிக்கு ரூ.35,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்புள்ளது. ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவம், ரூ.5,000 கார்ப்பரேட் போனசாகவும் வழங்கப்படும். மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்5 வேரியண்ட்டிற்கு ரூ.29,000 நேரடி தள்ளுபடியும் உள்ளது.

மஹிந்திரா பிஎஸ்-6 கார்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் ஆஃபர்!

மஹிந்திரா எக்ஸ்யூவி500

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு அதிகபட்சமாக ரூ.49,000 வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதில் ரூ.40,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.9,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ஆஃபராகவும் பெற முடியும்.

மஹிந்திரா கார்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் ஆஃபர்!

மஹிந்திராவின் மிக உயர்ந்த விலை மாடலாக அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலுக்கு ரூ.3.05 லட்சம் வரை சேமிப்பு பெறும் வாய்ப்புள்ளது. இதில், ரூ.2.40 லட்சம் நேரடி தள்ளுபடியாகவும், ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.15,000 கார்ப்பரேட் போனசாகவும் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா கார்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் ஆஃபர்!

வரும் 31ந் தேதி வரை மஹிந்திரா கார்களை புக்கிங் செய்பவர்களுக்கு இந்த ஆஃபர்களை பெறும் வாய்ப்புள்ளது. இந்த ஆஃபர்கள் டீலர்களுக்கு டீலர் மாறுபடும் வாய்ப்புள்ளது. எனவே, அருகிலுள்ள மஹிந்திரா டீலரை தொடர்பு கொண்டு முழுமையான விபரங்களை பெற்றுக் கொள்ளவும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 14, 2020, 16:30 [IST]
English summary
Mahindra is offering huge discounts and special offers on select models in the brand's lineup. The flagship Alturas G4 premium-SUV is being offered with benefits of up to Rs 3.05 lakh during this month.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+