மஹிந்திரா இஎக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கான்செப்ட் அறிமுகம்!!

மஹிந்திரா இ-எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் கார் இன்று ஆட்டோ எக்ஸ்போவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள், படங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா இஎக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கான்செப்ட் அறிமுகம்!

எலெக்ட்ரிக் கார் சந்தையில் மிக வலுவான இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் குறைவான விலை மின்சார எஸ்யூவி மாடலாக இ-கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவியை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்த மஹிந்திரா, மற்றொரு எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலையும் இன்று பொது பார்வைக்கு கொண்டு வந்தது.

மஹிந்திரா இஎக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கான்செப்ட் அறிமுகம்!

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் பிரிமீயம் தேர்வாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 வாடிக்கையாளர்களிடம் தனி முத்திரை பதித்துள்ளது. இந்த எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் அடிப்படையிலான எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடலையும் மஹிந்திரா இன்று பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

மஹிந்திரா இஎக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கான்செப்ட் அறிமுகம்!

மஹிந்திரா இ-எக்ஸ்யூவி300 என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் கார் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா இஎக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கான்செப்ட் அறிமுகம்!

சாதாரண மாடலிலிருந்து எலெக்ட்ரிக் மாடலை வேறுபடுத்தும் விதத்தில், டிசைனில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் க்ரில் அமைப்பு முற்றிலும் மாறுபட்டுள்ளது. டெயில் லைட் க்ளஸ்ட்டர் டிசைன் ஒன்றாக இருந்தாலும், சில மாறுதல்களுடன் வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது. இது கான்செப்ட் மாடலாக இருப்பதால், தயாரிப்பு நிலை மாடலில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

மஹிந்திரா இஎக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கான்செப்ட் அறிமுகம்!

இந்த காரில் 30.2kWh பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்படும் இந்த காரின் பேட்டரி, மின் மோட்டார் இணைந்து 127 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 10 வினாடிகளில் எட்டிவிடும்.

மஹிந்திரா இஎக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கான்செப்ட் அறிமுகம்!

இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை பெற முடியும். டாடா நெக்ஸான், எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

மஹிந்திரா இஎக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கான்செப்ட் அறிமுகம்!

புதிய மஹிந்திரா இ-எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ரூ.14 லட்சம் ஆரம்ப விலையில் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்ப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2020, 19:11 [IST]
English summary
Mahindra has unveiled the all-new e-XUV300 Electric SUV concept at the ongoing Auto Expo 2020
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+