இவ்ளோ கம்மி விலையில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸா... நாமும் ஒன்றை வாங்கிக்கலாம் போலிருக்கே...

மஹிந்திரா நிறுவனம் அதன் மலிவு விலை ஆம்புலன்ஸை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இவ்ளோ கம்மி விலையில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸா... நாமும் ஒன்றை வாங்கிக்கலாம் போலிருக்கே... திக்கு முக்காட செய்த மஹிந்திரா!

கொரோனா பரவலின் அச்சத்திற்கு இடையிலும் நாடு லேசான தளர்வுகளின் மூலம் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. இருப்பினும், மக்கள் மத்தியில் வைரஸ்குறித்த அச்சம் ஓய்ந்தபாடில்லை. காரணம், நாட்டின் ஒரு சில மூலைகளில் கோவிட்-19 பரவலின் எண்ணிக்கை மிகக் கடுமையாக உயர்ந்துக் கொண்டே இருக்கின்றது. எனவே, மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த உபகரணங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

இவ்ளோ கம்மி விலையில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸா... நாமும் ஒன்றை வாங்கிக்கலாம் போலிருக்கே... திக்கு முக்காட செய்த மஹிந்திரா!

இந்நிலையில், நாட்டின் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா மலிவு விலை ஆம்புலன்ஸை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அதன் பிரபலமான மாடல்களில் ஒன்றான சுப்ரோ எனும் மாடலை தழுவி மஹிந்திரா அந்த ஆம்புலன்ஸை உருவாக்கியுள்ளது. எனவே, சுப்ரோ மாடலில் காணப்படுவதைப் போன்றே ஆம்புலன்ஸிலும் அதிக இட வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்ளோ கம்மி விலையில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸா... நாமும் ஒன்றை வாங்கிக்கலாம் போலிருக்கே... திக்கு முக்காட செய்த மஹிந்திரா!

கோவிட்-19 வைரஸ் இந்தியாவை ஆட்டிபடைக்க ஆரம்பித்த நாள் முதலிருந்தே நாட்டில் மருத்துவம் சார்ந்த உபகரணங்களின் பற்றாக்குறை தலை விரித்து ஆடத் தொடங்கியது. அதிலும் வென்டிலேட்டர் மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற மிக முக்கியமான சாதனங்களின் பற்றாக்குறை சற்றே கூடுதலாக இருந்து வருகின்றது. இன்றளவும் ஒரு சில மாநிலங்களில் போதியளவு ஆம்புலன்ஸ் இல்லாத சூழலே நிலவி வருகின்றது.

இவ்ளோ கம்மி விலையில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸா... நாமும் ஒன்றை வாங்கிக்கலாம் போலிருக்கே... திக்கு முக்காட செய்த மஹிந்திரா!

அந்தவகையில், தற்போது கொரோனா வைரசின் பிடியில் மிகக் கடுமையாக சிக்கித் தவித்து வரும் மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு உதவி புரியும் வகையிலேயே மஹிந்திரா நிறுவனம் இந்த மலிவு விலை ஆம்புலன்ஸை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக டீம் பிஎச்பி தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்ளோ கம்மி விலையில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸா... நாமும் ஒன்றை வாங்கிக்கலாம் போலிருக்கே... திக்கு முக்காட செய்த மஹிந்திரா!

கொரோனாவிற்கு எதிரான போரில் வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. ஏனெனில், அவை நிதியுதவியைச் செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், வென்டிலேட்டர், மாஸ்க், கண்ணாடி முகத்திரை உள்ளிட்ட ஏராளமான மருத்துவ உபகரணங்களையும் உற்பத்திச் செய்து வருகின்றது.

இவ்ளோ கம்மி விலையில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸா... நாமும் ஒன்றை வாங்கிக்கலாம் போலிருக்கே... திக்கு முக்காட செய்த மஹிந்திரா!

இந்த நிலையில்தான் தங்களின் உதவியை மேலும் வலுப்படுத்தும் விதமாக மஹிந்திரா நிறுவனம் இந்த சிறிய ரக ஆம்புலன்ஸை அறிமுகம் செய்துள்ளது. அதற்கு ரூ. 6.94 லட்சம் என்ற மலிவு விலையையும் அது நிர்ணயித்துள்ளது. இது மும்பை எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இது ஆரம்பநிலை விலையாகும்.

இவ்ளோ கம்மி விலையில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸா... நாமும் ஒன்றை வாங்கிக்கலாம் போலிருக்கே... திக்கு முக்காட செய்த மஹிந்திரா!

இந்த சுப்ரோ ஆம்புலன்ஸ் தற்போது இரு வேரியண்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, எல்எக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய இரு வேரியண்டுகளில் அது களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இவையனைத்தும் பிஎஸ்-6 தர எஞ்ஜினால் இயங்குபவையாகும்.

இவ்ளோ கம்மி விலையில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸா... நாமும் ஒன்றை வாங்கிக்கலாம் போலிருக்கே... திக்கு முக்காட செய்த மஹிந்திரா!

இத்தகைய வாகனத்தின் முதல் பேட்ச் தயாரிப்புகள்தான் தற்போது கோவிட்-19க்கு எதிராக போராடும் விதமாக மஹாராஷ்டிரா அரசுக்கு மஹிந்திரா நிறுவனம் டெலிவரி வழங்கியிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 12 யூனிட்டுகள் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவையனைத்தும், வைரஸ் தாக்கம் அதிகம் காணப்படும் பகுதியான மும்பையில் சிறப்பு பணியாற்றுவதற்காக களமிறக்கப்பட்டுள்ளன.

இவ்ளோ கம்மி விலையில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸா... நாமும் ஒன்றை வாங்கிக்கலாம் போலிருக்கே... திக்கு முக்காட செய்த மஹிந்திரா!

இந்த ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் மஹிந்திராவின் டிஐ எஞ்ஜின் திறன் கொண்டவையாகும். இது 47 எச்பி மற்றும் 100 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆம்புலன்ஸ்களுக்கு இரண்டு வருடங்கள் அல்லது 60,000 கிமீட்டர்கள் என்ற வாரண்டியை மஹிந்திரா நிறுவனம் வழங்கியருப்பதாக கூறப்படுகின்றது.

இவ்ளோ கம்மி விலையில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸா... நாமும் ஒன்றை வாங்கிக்கலாம் போலிருக்கே... திக்கு முக்காட செய்த மஹிந்திரா!

இதுமட்டுமின்றி, இந்த ஆம்புலன்ஸில் உயிர் காக்கும் உண்ணத கருவிகளான ஆக்சிஜன் சிலிண்டர், மெடிக்கல் கிட் பாக்ஸ், மடக்கி வைக்கக்கூடிய ஸ்ட்ரெட்சர், தீயணைப்பு கருவி, அறிவிப்பு கருவி என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், மிக முக்கியமான அம்சமாக தீ விபத்து ஏற்பட்டாலும் எளிதில் தீப்பிடிக்காத திறன் ஆம்புலன்ஸின் இன்டீரியர் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்ளோ கம்மி விலையில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸா... நாமும் ஒன்றை வாங்கிக்கலாம் போலிருக்கே... திக்கு முக்காட செய்த மஹிந்திரா!

இது ஓர் 'B' டைப் ஆம்புலன்ஸ் ஆகும். அப்படியென்றால் சிறிய தோற்றமுடை ஆம்புலன்ஸ் ஆகும். அதாவது, மும்பையின் அதிகளவு வாகன நெரிசலை எளிதாக சமாளிப்பதற்காக சுப்ரோவிற்கு இந்த சிறிய ரக தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், நோயாளியுடன் சேர்த்து ஐந்து பேர் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை மஹிந்திரா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Ambulances Put Into Service In Mumbai: Will Help In The Fight Against COVID-19 In State. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X