மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் அறிமுகம்... கொண்டாடுவதற்கு இரண்டு விஷயங்கள்!

வாடிக்கையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் பிஎஸ்6 டீசல் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. விலை, சிறப்பம்சங்கள் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் அறிமுகம்... கொண்டாடுவதற்கு இரண்டு விஷயங்கள்!

கடந்த ஆண்டு துவக்கத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகவும் சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுகள், பிரிமீயம் அம்சங்களுடன் வந்ததால், வாடிக்கையாளர் மத்தியில் சிறப்பான தேர்வாக உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் அறிமுகம்... கொண்டாடுவதற்கு இரண்டு விஷயங்கள்!

இந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல் எஞ்சினுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. சிறிய அளவிலான விலை ஏற்றத்துடன் பெட்ரோல் மாடல் வந்த நிலையில், பிஎஸ்6 டீசல் மாடல் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் அறிமுகம்... கொண்டாடுவதற்கு இரண்டு விஷயங்கள்!

ஊரடங்கு அமலில் இருந்தாலும் வாடிக்கையாளர்களின் காத்திருப்புக்கு முடிவு கட்டும் விதத்தில், எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் பிஎஸ்6 டீசல் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. W4, W6, W8 மற்றும் W8(O) ஆகிய வேரியண்ட்டுகளில் தொடர்ந்து விற்பனைக்கு கிடைக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் அறிமுகம்... கொண்டாடுவதற்கு இரண்டு விஷயங்கள்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் பிஎஸ்6 டீசல் மாடலின் விலை ஏற்றம் செய்யப்படாமல், பழைய விலையிலேயே வந்துள்ளதும், டீசல் மாடலை எதிர்பார்த்து காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருவதாக அமைந்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் அறிமுகம்... கொண்டாடுவதற்கு இரண்டு விஷயங்கள்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பபிஎஸ்6 டீசல் மாடல் வேரியண்ட்டுகளுக்கு ரூ.8.69 லட்சம் முதல் ரூ.12.69 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் அறிமுகம்... கொண்டாடுவதற்கு இரண்டு விஷயங்கள்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் பிஎஸ்6 தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 114.5 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் அறிமுகம்... கொண்டாடுவதற்கு இரண்டு விஷயங்கள்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் மாடலில் க்ரோம் வில்லைகளுடன் கூடிய அழகான க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், பனி விளக்குகள் வரை நீளும் எல்இடி விளக்கு அமைப்பு, பெரிய ஏர் இன்டேக் அமைப்பு, ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை கவரும் வகையில் அமைந்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் அறிமுகம்... கொண்டாடுவதற்கு இரண்டு விஷயங்கள்!

உட்புறமும் மிகவும் பிரிமீயமாக இருக்கிறது. இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட், கீ லெஸ் என்ட்ரி, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிஎஸ்6 டீசல் அறிமுகம்... கொண்டாடுவதற்கு இரண்டு விஷயங்கள்!

இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட்டுகள் ஆகியவையும் உள்ளன. மேலும், குளோபல் என்சிஏபி அமைப்பின் க்ராஷ் டெஸ்ட்டில் இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 16, 2020, 11:18 [IST]
English summary
Mahindra had launched the XUV300 compact SUV in India last year in the month of February. Towards the end of 2019, the company updated the petrol version of the XUV300 to meet the BS6 norms with a slight hike in the price. Mahindra has now upgraded the diesel engine of the compact SUV to meet the BS6 emission norms. The car will still be offered in four variants - W4, W6, W8, and W8(O).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+