உயிர் காப்பான் தோழன்... மீண்டும் ஒரு தரமான அறிவிப்பை வெளியிட்ட மஹிந்திரா... சந்தோஷத்தில் மக்கள்..!

கொரோனாவிற்கு எதிரான போரில் கூடுதல் பங்களிக்கும் விதமாக தரமான அறிவிப்பை மஹிந்திரா குழுமம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உயிர் காப்பான் தோழன்... மீண்டும் ஒரு தரமான அறிவிப்பை வெளியிட்ட மஹிந்திரா... சந்தோஷத்தில் மக்கள்..!

கொரோனா வைரசுக்கு எதிரான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இந்த போரில் எப்படியாவது வெற்றிப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக அனைத்துத்துறை சார்ந்த நிறுவனங்களும் பெரும் உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதில், வாகனத்துறை சார்ந்து இயங்கும் நிறுவனங்களின் பங்கு இன்றியமையாததாக இருக்கின்றது.

உயிர் காப்பான் தோழன்... மீண்டும் ஒரு தரமான அறிவிப்பை வெளியிட்ட மஹிந்திரா... சந்தோஷத்தில் மக்கள்..!

அதிலும், வாகன உற்பத்தியை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் தற்போது வரை உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், மஹிந்திரா நிறுவனம் முன்னதாக நிதியுதவி, பாதுகாப்பு கவசங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு உதவிகளை செய்தது.

உயிர் காப்பான் தோழன்... மீண்டும் ஒரு தரமான அறிவிப்பை வெளியிட்ட மஹிந்திரா... சந்தோஷத்தில் மக்கள்..!

இதைத்தொடர்ந்து, உயிர் காக்கும் கருவியான வெண்டிலேட்டர்கள் மற்றும் பாதுகாப்பு கவசங்களான கையுறை, முகமூடிகள் உள்ளிட்டவற்றையும் அது தயாரித்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது இலவச ஆம்புலன்ஸ் சேவையையும் அது அறிவித்துள்ளது. இந்த சேவைக்காக மஹிந்திரா குழுமத்தின்கீழ் இயங்கும் மஹிந்திரா லாகிஸ்டிக்ஸ் லிமிடெட்டின் (எம்எல்எல்) வாகனங்களை அது பயன்படுத்த இருக்கின்றது.

உயிர் காப்பான் தோழன்... மீண்டும் ஒரு தரமான அறிவிப்பை வெளியிட்ட மஹிந்திரா... சந்தோஷத்தில் மக்கள்..!

இந்த சிறப்பு சேவை மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் அது உதவி செய்ய இருக்கின்றது. வைரசுக்கு எதிரான போரில் கூடுதல் பங்கினை அளிக்கும் விதமாக இந்த இலவச அவசர வாகன சேவையை மஹிந்திரா நிறுவனம் தொடங்கியிருக்கின்றது.

அவசர வாகன சேவையான இது ஏற்கனவே தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதாக அது தகவல் தெரிவித்துள்ளது.

உயிர் காப்பான் தோழன்... மீண்டும் ஒரு தரமான அறிவிப்பை வெளியிட்ட மஹிந்திரா... சந்தோஷத்தில் மக்கள்..!

இந்த சேவை ஆரம்பகட்டமாக தொடங்கப்பட்டிருப்பதால் சைபராபாத், சங்கரெட்டி மற்றும் ரச்சகொண்ட உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் மஹிந்திரா செய்து வருகின்றது. இதில், சில மின்சார வாகனங்களையும் பயன்படுத்த இருப்பதாக மஹிந்திரா அறிவித்துள்ளது. குறிப்பாக, இந்த சேவைக்காக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்போவதில்லை அது தெரிவித்துள்ளது. ஆகையால், முழுக்க முழுக்க கட்டணமில்லா சேவையாகவே இது இயக்கப்பட இருக்கின்றது.

உயிர் காப்பான் தோழன்... மீண்டும் ஒரு தரமான அறிவிப்பை வெளியிட்ட மஹிந்திரா... சந்தோஷத்தில் மக்கள்..!

மேலும், மக்கள் இந்த சேவையை 24*7 என எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையில் கணிசமான வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட இருப்பதால் ஒரு சிலருக்கு முன்னுரிமையின் அடிப்படையில் முக்கியத்துவம் வழங்கப்பட இருக்கின்றது.

உயிர் காப்பான் தோழன்... மீண்டும் ஒரு தரமான அறிவிப்பை வெளியிட்ட மஹிந்திரா... சந்தோஷத்தில் மக்கள்..!

குறிப்பாக, வயது மூத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனியாக வாழும் பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட இருப்பதாக எம்எல்எல் தெரிவித்துள்ளது.

தற்போது, ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் நிலவுவதால் வாகன போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆள் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்கின்றது.

உயிர் காப்பான் தோழன்... மீண்டும் ஒரு தரமான அறிவிப்பை வெளியிட்ட மஹிந்திரா... சந்தோஷத்தில் மக்கள்..!

இந்நிலையில், உயிர் காப்பான் தோழன் என்பதை நிரூபிக்கும் வகையில் மஹிந்திரா நிறுவனம், ஆபத்தில் வாடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு சிறப்பு உதவியை வழங்க இருக்கின்றது.

ஆகையால், அவசர வாகனமான 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கிடைக்காத சூழ்நிலையில் மஹிந்திரா நிறுவனத்தின் இந்த சேவையை எப்போது வேண்டுமானால் பொதுமக்கள் தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

உயிர் காப்பான் தோழன்... மீண்டும் ஒரு தரமான அறிவிப்பை வெளியிட்ட மஹிந்திரா... சந்தோஷத்தில் மக்கள்..!

அதேசமயம், இந்த வாகனம் கொரோன தொற்றுடையவர்களை மட்டுமே கையாள இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை, வாகனம் மற்றும் ஓட்டுநர்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது.

அது, பயனருக்கும் பொருந்தும். அதாவது, ஒவ்வொரு முறையும் நோயாளியைக் கையாளும் முன்பு மற்றும் பின்பு, வாகனத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட இருக்கின்றன.

உயிர் காப்பான் தோழன்... மீண்டும் ஒரு தரமான அறிவிப்பை வெளியிட்ட மஹிந்திரா... சந்தோஷத்தில் மக்கள்..!

இது கொரோனா தொற்றுடையவர்களைக் கையாளும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசமாக செயல்படும். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பணியாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உறை உடை மற்றும் கையுறைகள் வழங்கப்பட இருக்கின்றன.

இந்த சிறப்பு சேவை தெலுங்கானாவில் மட்டும் தொடங்கப்பட்டிருக்கும்நிலையில், கூடிய விரைவில் இந்தியாவின் மற்ற நகரங்களிலும் அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா அறிவித்துள்ளது. மஹிந்திராவின் இந்த முயற்சிக்கு மக்கள் பாராட்டையும், வரவேற்பையும் ஒருசேர தெரிவித்து வருகின்றனர்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Logistics Launches Emergency Cab Services For Free COVID-19 Patients. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X