சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..

மஹிந்திரா நிறுவனம் மராஸ்ஸோ பிஎஸ்6 மாடல்களை தொழிற்சாலையில் இருந்து டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணியினை துவங்கியிருக்கலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..

மஹிந்திரா நிறுவனம் இதுவரை பிஎஸ்6 மராஸ்ஸோ மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தவில்லை. இந்த எம்பிவி காரின் அறிமுகம் வரும் பண்டிக்கை காலத்தில் இருக்கலாம் என கூறப்படுகிறது.

சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..

ஆனால் இதற்கிடையில் தற்போது வெளிவந்துள்ள 2020 ஜூலை மாதத்திற்கான விற்பனை நிலவரத்தில் 20 மராஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்வது என்பது தற்போது முற்றிலும் முடியாத காரியம்.

சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..

இதனால் விற்பனையாகியுள்ள 20 மராஸ்ஸோ கார்களும் அதன் பிஎஸ்6 வெர்சன்களாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேநேரம் மஹிந்திரா ப்ராண்ட் இந்த எஸ்யூவி கார்களை வெளிநாட்டு சந்தைக்களுக்கு ஏற்றுமதி செய்திருக்கவும் வாய்ப்புண்டு.

சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..

ஏனெனில் இந்நிறுவனம் மராஸ்ஸோவை நேபாளம், பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா உள்பட சில ஆப்ரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்து வருகிறது. இவற்றில் பெரும்பான்மையான நாடுகள் இன்னமும் பிஎஸ்4 வாகனங்களுக்கு அனுமதியினை வழங்கி வருகின்றன.

சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி மாடல் இரண்டு வருடங்களுக்கு முன்னர் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் அறிமுகமானது. தற்சமயம் பிஎஸ்4 தரத்தில் உள்ள இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 121 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..

இதே ஆற்றலை அளவை தான் பிஎஸ்6 தரத்திலும் இந்த என்ஜின் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வும் இந்த எம்பிவி காருக்கு கொடுக்கப்படலாம்.

சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..

இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 162 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மராஸ்ஸோ தற்சமயம் 8-இருக்கை மற்றும் 7-இருக்கை என்ற இருக்கை அமைப்புகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் கேப்டன் இருக்கைகள் இரண்டாவது வரிசையில் உள்ளன.

சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..

இத்தகைய அமைப்புகளில் பிஎஸ்6 அப்கிரேடினால் எந்த மாற்றமும் கொண்டுவரப்பட போவதில்லை என்றாலும், ட்ரிம் நிலைகளில் வேறுபடும் வசதிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம். பிஎஸ்4 மராஸ்ஸோவின் விலை தற்சமயம் ரூ.9.99- ரூ.14.76 லட்சம் என்ற அளவில் உள்ளது. இதன் புதிய பிஎஸ்6 வெர்சனின் விலை நிச்சயம் சற்று அதிகரிக்கப்படும்.

சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..

சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வந்த இந்த பிஎஸ்6 கார் இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தையில் அறிமுகமாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அதற்குள்ளாக கடந்த ஜூலை மாதத்தில் இதன் சில யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது இதன் அறிமுகத்தை இன்னும் நெருக்கமாக்கி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 5, 2020, 7:30 [IST]
English summary
Mahindra Marazzo BS6 Dispatch Commences In India; Launch Soon
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+