மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடல் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்தன...

மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக மராஸ்ஸோ பிஎஸ்6 மாடலில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இனி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடல் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்தன...

வெளியாகியுள்ள இந்த தகவலில்படி பிஎஸ்6-க்கு மாற்றப்பட்டுள்ள மராஸ்ஸோ மாடல், எம்8 வேரியண்ட்டை கொண்டிருக்க போவதில்லை என்பது நமக்கு தெரிய வருகிறது. இதனால் இந்த புதிய கார், ஏழு இருக்கைகளை கொண்ட எம்2, எட்டு இருக்கைகளை கொண்ட எம்2, ஏழு இருக்கைகளை கொண்ட எம்4+, எட்டு இருக்கைகளை பெற்ற எம்4+, ஏழு இருக்கைகளுடன் எம்6+ மற்றும் எட்டு இருக்கை அமைப்புகளுடன் எம்6+ என 6 வேரியண்ட்களில் மட்டும் தான் அறிமுகமாகவுள்ளது.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடல் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்தன...

எனவே மராஸ்ஸோ மாடலின் டாப் வேரியண்ட்டாக வருகிற ஏப்ரல் மாதம் முதல் எம்6+ வேரியண்ட் தான் விற்பனையாகவுள்ளது. மேலும் மராஸ்ஸோ மாடலின் அனைத்து வேரியண்ட்களும் பிஎஸ்6 அப்டேட்டால் விலை அதிகரிப்பையும் பெறவுள்ளன.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடல் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்தன...

தற்சமயம் சந்தையில் விற்பனையாகி வரும் மராஸ்ஸோ மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லைட்ஸ், பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகள், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற தொழிற்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடல் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்தன...

மராஸ்ஸோ காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த என்ஜின் 121 பிஎச்பி ஆற்றலை பவர் மோடிலும், 98 பிஎச்பி பவரை எக்னாமி மோடிலும் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடல் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்தன...

ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.14.77 லட்சம் வரையில் மராஸ்ஸோ மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிஎஸ்6 அப்டேட்டால் இந்த கார் ரூ.15,000- ரூ.20,000 வரை விலை அதிகரிப்பை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடல் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்தன...

மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து சிறப்பாக விற்பனையாகி வரும் மாடல்களில் ஒன்றாக உள்ள மராஸ்ஸோ மாடல், கடந்த சில மாதங்களில் அதிகப்பட்சமாக 3,000 வரையிலும் விற்பனையை பதிவு செய்துள்ளது. மேலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முன்புற சக்கரங்கள் மூலம் இயங்கும் முதல் காராகவும் மராஸ்ஸோ விளங்குகிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடல் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்தன...

இதேபோன்று அதிகளவில் தொழிற்நுட்ப வசதிகளுடன் தார் எஸ்யூவி பிஎஸ்6 காரையும் இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டுவர மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடல் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்தன...

தயாரிப்பு நிறுவனம் வெளியிடுவதற்கு முன்பாகவே புதிய கார்கள் பற்றிய தகவல்கள் எவ்வாறு வெளியாகின்றன என்பது தெரியவில்லை. ஆனால் இவ்வாறு தகவல்கள் கசிந்தவுடனே எந்தவொரு தாமதமும் ஏற்படுத்தாமல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடுவது நல்லது. இல்லையெனில் காரை பற்றிய தவறான தகவல்கள் பரவக்கூடும்.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடல் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்தன...

மேலும் நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கு விரைவில் மராஸ்ஸோ பிஎஸ்6 மாடலை டெஸ்ட் ட்ரைவ் செய்யும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. தற்போதைய மராஸ்ஸோ மாடலை விட எந்தெந்த விதங்களில் இந்த பிஎஸ்6 கார் சிறந்தது என்பதை அறிய நமது தளத்துடன் இணைந்திருங்கள்.

Source: Rushlane

More from DriveSpark

Article Published On: Saturday, January 4, 2020, 18:27 [IST]
English summary
Mahindra Marazzo BS6 Model Specifications Leaked Ahead of Launch: Details
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+