பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது மஹிந்திரா மராஸ்ஸோ!

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில் மிகவும் செயல்திறன் மிக்க பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது மஹிந்திரா மராஸ்ஸோ!

இந்தியாவின் எம்பிவி கார் மார்க்கெட்டில் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. மாருதி எர்டிகா காரைவிட மேம்பட்ட இடவசதி, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட பட்ஜெட் குறைவாக இந்த கார் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மார்க்கெட்டுக்கு வந்த இந்த காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட்டு வந்தது.

பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது மஹிந்திரா மராஸ்ஸோ!

இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்ட எஞ்சின் தேர்வுகளுடன் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள மஹிந்திரா மராஸ்ஸோ கார். ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 1.5 லிட்டர் பிஎஸ்4 டீசல் எஞ்சின் பிஎஸ்6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வரும் என்பது உறுதியாக நம்பலாம்.

பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது மஹிந்திரா மராஸ்ஸோ!

இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பழையபடியே 121 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது மஹிந்திரா மராஸ்ஸோ!

மறுபுறத்தில் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் மஹிந்திரா மராஸ்ஸோ காரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த 1.5 லிட்டர் ஜி15 டர்போ பெட்ரோல் எஞ்சின்தான் மஹிந்திரா மராஸ்ஸோ காரில் வழங்கப்பட உள்ளது.

பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது மஹிந்திரா மராஸ்ஸோ!

அதாவது, சாங்யாங் கொரண்டு எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் மஹிந்திரா மராஸ்ஸோ வர இருப்பதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த எஞ்சின் 162 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். முதலில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும், பின்னர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் எதிர்பார்க்கப்படுகிறது.

பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது மஹிந்திரா மராஸ்ஸோ!

இதன்மூலமாக, மிகவும் சக்திவாய்ந்த எம்பிவி கார் மாடலாக நிலைநிறுத்தப்படுவதுடன், அதிக வாடிக்கையாளர்கள் வட்டத்தை பெறுவதற்கும் வழிவகுக்கும். ஆனால், பெட்ரோல் மாடல் எப்போது வரும் என்பது இன்னமும் புதிராகவே இருக்கிறது.

பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது மஹிந்திரா மராஸ்ஸோ!

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் தற்போது 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. பிஎஸ்6 மாடலிலும் இதே இருக்கை அமைப்புடைய தேர்வு வழங்கப்படும். அதேநேரத்தில், கூடுதல் வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது மஹிந்திரா மராஸ்ஸோ!

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் பிஎஸ்4 மாடலானது ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து ரூ.14.76 லட்சம் வரையிலான விலையில் கிடைத்து வந்தது. இதனைவிட பிஎஸ்6 மாடலின் விலை சற்று அதிகரிக்கப்பட்டு சந்தைக்கு கொண்டு வரப்படும் என்று நம்பலாம்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
The Mahindra Marazzo is expected to receive a new 1.5-liter petrol engine soon in India. The company is expected to introduce a 1.5-liter BS6-compliant petrol engine that will likely be derived from the SsangYong Korando.
Story first published: Monday, June 22, 2020, 12:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X