அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மஹிந்திரா- எளிய மாதத்தவணை திட்டங்கள் அறிவிப்பு

அரசாங்க ஊழியர்களுக்கான சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிப்புகளை மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

அரசு உழியர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மஹிந்திரா- எளிய மாதத்தவணை திட்டங்கள் அறிவிப்பு

ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் இந்தியாவில் வாகன விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதன் காரணமாக இந்த சூழலை தக்க வைத்து கொள்வதற்காக அதிரடி சலுகைகளையும் தள்ளுபடி அறிவிப்புகளையும் தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் விற்பனை மாடல்களுக்கு வழங்கி வருகின்றன.

அரசு உழியர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மஹிந்திரா- எளிய மாதத்தவணை திட்டங்கள் அறிவிப்பு

இவர்களது நோக்கம் முழுவதுமே வரப்போகும் தீபாவளி பண்டிகை நாட்களின் மீதுதான் உள்ளது. இந்த வகையில் தற்போது மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் வெவ்வேறு விதமான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளில் ரூ.11,500 வரையில் பணம் தள்ளுபடி மற்றும் குறைந்த வட்டி விகிதத்துடன் எளிய மாதத்தவணைகள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

அரசு உழியர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மஹிந்திரா- எளிய மாதத்தவணை திட்டங்கள் அறிவிப்பு

இதுமட்டுமின்றி பூஜ்ஜிய செயலாக்க & முன்தொகை கட்டணம் மற்றும் ரூ.7.25 சதவீதத்தில் இருந்து குறைந்த வட்டி விகிதங்களையும் இவர்கள் பெற முடியும் என மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசு உழியர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மஹிந்திரா- எளிய மாதத்தவணை திட்டங்கள் அறிவிப்பு

மேலும் இந்த பண்டிகை காலத்திற்கான சலுகைகளில், தனி பயன்பாட்டு வாகனங்களுக்கு லட்சத்திற்கு ரூ.799 என்ற மிக குறைந்த மாதத்தவணை தொகையுடன் அதிக காலத்திற்கு பணத்தை திருப்பி செலுத்தும் முறைகளும் அடங்குவதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசு உழியர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள மஹிந்திரா- எளிய மாதத்தவணை திட்டங்கள் அறிவிப்பு

மேலும் இந்நிறுவனம் உடனடி இஎம்ஐ வசதிகளுடன் நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து தொடர்பு இல்லாத கட்டண வசதியையும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சலுகைகளினால் மஹிந்திராவின் விற்பனை எந்த அளவிற்கு முன்னேற்றம் காணும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra introduces exclusive offers for Government employees
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X