மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் விபரம்!

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலின் வேரியண்ட்டுகள் விபரம் வெளியாகி இருக்கின்றன. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் விபரம்!

கடந்த 2002ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி இந்தியர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாடலாக விளங்குகிறது. இரு தசாப்தங்களை நெருங்கி வரும் இவ்வேளையிலும், இந்த எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பும், விற்பனையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையும் பதிவு செய்து வருகிறது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் விபரம்!

இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டதாக மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி மேம்படுத்தப்பட்டு விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த புதிய பிஎஸ்6 மாடலின் வேரியண்ட்டுகள் விபரம் இப்போது வெளியாகி இருக்கிறது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் விபரம்!

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலானது S5, S7, S9 மற்றும் S11 ஆகிய 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதில், S5 வேரியண்ட்டானது 7 சீட்டர் மற்றும் 9 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் விபரம்!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலின் S7, S9 மற்றும் S11 ஆகிய வேரியண்ட்டுகள் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கும். மேலும், விலை உயர்ந்த வேரியண்ட்டான S11 மாடலின் இரண்டாவது வரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் கொண்ட மாடலாகவும் கிடைக்கும்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் விபரம்!

விலை குறைவான S5 வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏசி சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர், ரியர் பார்க்கிங் சென்சார்கள், மைக்ரோ ஹைப்ரிட் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் விபரம்!

விலை உயர்ந்த S11 வேரியண்ட்டில் அலாய் வீல்கள், 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, ஃபாக்ஸ் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், படூல் விளக்குகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் விபரம்!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியின் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 138 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். விலை குறைவான S5 வேரியண்ட்டில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும், இதர வேரியண்ட்டுகளில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இடம்பெறாது என்று தெரிகிறது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலின் வேரியண்ட் விபரம்!

தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின், வசதிகள், அதிகம் பேர் பயணிக்கும் வசதி, சிறந்த க்ரவுண்ட் க்ளியரன்ஸ் போன்றவை இந்த எஸ்யூவிக்கு பெரும் சந்தையை வழங்கி இருக்கிறது. அதனை இந்த பிஎஸ்6 மாடலும் தக்க வைக்கும் என்று நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 9, 2020, 11:13 [IST]
English summary
The Mahindra Scorpio has been one of India's all-time best selling SUVs right from the time of its inception since 2002. Over the years, the SUV has gone through a lot of changes and recently Mahindra & Mahindra has revealed the technical specifications of the BS6 compliant Scorpio on the company website.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+