பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் காரை இயக்கினால் என்ன ஆகும்! இதோ வீடியோ..! பாக்குறப்பவே ஒடம்பு ஒதறுதே!

வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் காரை இயக்கினால் என்னவாகும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இரு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் காரை இயக்கினால் என்ன ஆகும்! இதோ வீடியோ..! பாக்குறப்பவே ஒடம்பு ஒதறுதே!

வயதானவர்களைத் தவிர ஆஃப்-ரோடு பயணத்தை விரும்பாத நபர்களை காண்பது மிக அரிது. அதேசமயம், வயதானவர்களில் அனைவரையும்கூட நம்மால் இந்த பட்டியலில் சேர்த்துவிட முடியாது. ஏனெனில் சில முதியவர்கள்கூட ஆஃப்-ரோடு பயணத்தின்மீது அலாதியான பிரியம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால், இந்த ஆஃப்-ரோடு பயணங்கள் என்பது அதிக ஆபத்து நிறைந்தவையாக இருக்கின்றன.

பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் காரை இயக்கினால் என்ன ஆகும்! இதோ வீடியோ..! பாக்குறப்பவே ஒடம்பு ஒதறுதே!

இந்த விஷயம் இருப்பதினால்தான் என்னமோ பலர் இந்த சாகசத்தை விரும்புகின்றனர். இதுபோன்ற பயணத்திற்கு ஏற்றவையாக 4X4 தொழில்நுட்பம் அடங்கிய வாகனங்கள் இருக்கின்றன. ஆனால், அவைக் கூட சில நேரங்களில் பெரும் ஆபத்தில் சிக்க வைத்து விடுகின்றன. ஆம், இதை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் இரு வீடியோக்களைப் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் காரை இயக்கினால் என்ன ஆகும்! இதோ வீடியோ..! பாக்குறப்பவே ஒடம்பு ஒதறுதே!

இதில் நாம் முதலில் பார்க்கவிருப்பது மாருதி சுசுகி ஜிப்ஸி பற்றியதாகும். தற்போது இந்தியாவின் பெரும்பாலான மாநிலத்தில் பருவ மழை பொழிய ஆரம்பித்துள்ளது. இதனால், பெரும்பாலான ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது. இதன் விளைவாக பாதைகள் மற்றும் சாலைகளை ஆற்று நீர் மூழ்கடித்துள்ளன.

பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் காரை இயக்கினால் என்ன ஆகும்! இதோ வீடியோ..! பாக்குறப்பவே ஒடம்பு ஒதறுதே!

அவ்வாறு ஆற்று நீரால் மூழ்கடிக்கப்பட்ட பாதையையே மாருதி சுசுகி ஜிப்ஸி கடக்க முயல்கின்றது. ஆனால், நீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால், அந்த பாதையை கடக்க ஜிப்ஸி திணறுகின்றது. இதனால், சில நொடி துளிகள் ஆற்றுப்பாதையின் நடுப் பகுதியில் அந்த ஜிப்ஸி நேரிடுகின்றது. இம்மாதிரியான நேரத்தில் ஆற்று வெள்ளம் கூடுதலாக பெருக்கெடுக்க நேர்ந்தால் அது கூடுதலைச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும்.

பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் காரை இயக்கினால் என்ன ஆகும்! இதோ வீடியோ..! பாக்குறப்பவே ஒடம்பு ஒதறுதே!

ஆனால், அந்த நேரத்தில் ஆற்றில் சீரான நீரோட்டமே காணப்பட்டது. எனவேதான், அந்த ஜிப்ஸியும் மீண்டும் பாதுகாப்பாக அடுத்த கரையைத் தொட முடிந்தது. அதேசமயம், எடுத்த எடுப்பிலேயே அது அந்த கரையை அடையவில்லை என்பதை வீடியோவைப் பார்த்தா உங்களால் உணர்ந்திருக்க முடியும். அதிக முயற்சிக்கு பின்னரே ஜிப்ஸியால் அடுத்த கரையை எட்ட முடிந்தது.

பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் காரை இயக்கினால் என்ன ஆகும்! இதோ வீடியோ..! பாக்குறப்பவே ஒடம்பு ஒதறுதே!

இதற்கு காரின் அதி திறன் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. ஏனெனில், கார் அதிக திறனைக் கொண்டதாக இருந்தாலும், அதை சிறப்பாக இயக்கும் ஓட்டுனர் இருந்ததன் காரணத்திலானலயே அக்காரால் அங்கிருந்து சில சிரமங்களுக்கு பின்னர் கடக்க முடிந்தது.

இதேபோன்றுதான் நாம் அடுத்ததாகக் காணவிருக்கும் வீடியோவிலும் பரபரப்பிற்கு குறைச்சலின்றி காட்சிகள் அமைந்திருக்கின்றன. இந்த வீடியோவில் மஹிந்திரா நிறுவனத்தின் தார் இடம்பெற்றிருக்கின்றது. இது லடாக்கின் மிகவும் கரடு முரடான ஆற்று பாதையைக் கடக்கும்போது எடுக்கப்பட்டதாகும்.

பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் காரை இயக்கினால் என்ன ஆகும்! இதோ வீடியோ..! பாக்குறப்பவே ஒடம்பு ஒதறுதே!

லடாக்கில் இருக்கும் சாலைகளில் வழக்கமான நாட்களில் பயணிப்பதே மிகுந்த கஷ்டமான ஒன்று. இதை வெளிக்காட்டும் இணையத்திலும், நம்முடைய தளத்திலும் பல்வேறு தகவல்கள் முன்பாக வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில், தற்போது நாம் பார்க்கவிருக்கும் லடாக்கின் ஆபத்தான பாதைகளைப் பற்றி வெளிப்படுத்தும் வகையிலேயே உள்ளது.

பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் காரை இயக்கினால் என்ன ஆகும்! இதோ வீடியோ..! பாக்குறப்பவே ஒடம்பு ஒதறுதே!

மஹிந்திரா தார், ஆற்றைக் கடப்பதற்காக கூரான கற்கள் நிறைந்த அக்கரடு, முரடான பாதையில் பயணிக்கின்றது. இதைத்தொடர்ந்து, ஆற்றையும் கடக்க முயற்சிக்கின்றது. ஆனால், ஆற்றில் பெருக்கெடுத்த நீரில் அதால் மேற்கொண்ட நகர முடியவில்லை. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், ஆற்று நீரில் தார் மிதக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் முன்னோக்கி நகர வேண்டிய தார், பின்னோக்கி மிதக்க ஆரம்பித்தது.

பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் காரை இயக்கினால் என்ன ஆகும்! இதோ வீடியோ..! பாக்குறப்பவே ஒடம்பு ஒதறுதே!

இந்த சூழ்நிலையையும் சாதமாக்கிக் கொண்ட தாரின் ஓட்டுனர், ரிவர்ஸ் கியரைப் போட்டு காரை பின்னோக்கிச் செலுத்த ஆரம்பித்தார். உண்மையைக் கூற வேண்டுமானால், மிகவும் ஆபத்தான சூழ்நிலையை மிக நேர்த்தியாகக் கையாண்டு ஆற்றைக் கடந்தார். இந்த யுக்தியை அவர் கையாளவில்லை என்றால் நிச்சயம் மிகப்பெரிய சிக்கலில் சிக்க நேரிட்டிருக்கும்.

பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் காரை இயக்கினால் என்ன ஆகும்! இதோ வீடியோ..! பாக்குறப்பவே ஒடம்பு ஒதறுதே!

மேற்கூறிய இரு சம்பவங்களை வைத்து பார்க்கையில் என்னதான் திறன்மிக்க கார்கள் இருந்தாலும், அதனை இயக்கும் ஓட்டுனர் அனுபவமிக்கவராக இருந்தால் மட்டுமே எந்த மாதிரியான ஆபத்தான சூழ்நிலையாக இருந்தாலும் அதில் இருந்து தப்பிக்க முடியும். இத்தகைய திறன் வாய்ந்தவர்களே அதிகளவில் ஆஃப்-ரோடு சாகச பயணத்தில் ஈடுபடுகின்றனர்.

அதேசமயம், என்னதான் வாகனம் ஓட்டுவதில் கைதேர்ந்தவர்களாக இருந்தாலும் சில நேரங்களில் ஆபத்தான சூழ்நிலையை சாகச பயணங்கள் ஏற்படுத்திவிடும். அதிலும், இதுபோன்று பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் காரை இயக்குவது முட்டாள்தனமான செயல் என்றே ஆட்டோத்துறைச் சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் காரை இயக்கினால் என்ன ஆகும்! இதோ வீடியோ..! பாக்குறப்பவே ஒடம்பு ஒதறுதே!

இது மிகவும் ஆபத்தானது. நீரின் வேகமான நீரோட்டம் மற்றும் உயர் அழுத்தம் அக்காரையே அடித்துச் செல்லும் தன்மைக் கொண்டிருக்கின்றது. இதில் இருந்து தப்பிப்பது என்பது சாத்தியமற்றது. எனவேதான் அதிக நீரோட்டம் உள்ள பகுதியில் வாகனத்தை இயக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mahindra Thar & Suzuki Gypsy River Crossing Video. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X