மஹிந்திரா தார் காரை புக் செஞ்சிருக்கீங்களா! இதோ முதல் 500கார்கள் தயார்! எப்போது நம் கைகளுக்கு வரும்!

மஹிந்திரா நிறுவனத்தின் புதுமுக காரான தார் காரை புக்கிங் செய்தவர்களுக் குஷிப்படுத்தக்கூடிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மஹிந்திரா தார் காரை புக் செஞ்சிருக்கீங்களா... இதோ முதல் 500 கார்கள் தயார்..! எப்போது நம் கைகளுக்கு கிடைக்கும்?

நீண்ட கால எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மஹிந்திரா தார் காரின் அறிமுகம் கடந்த அக்டோபர் மாதம் 2ம் இந்தியாவில் அரங்கேறியது. முன்பெப்போதும் இல்லாத வகையிலான சிறப்பு வசதிகளுடன் இக்கார் களமிறங்கியிருக்கின்றது. எனவேதான் இந்தியர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும், டிமாண்டையும் தார் எஸ்யூவி பெற்று வருகின்றது.

மஹிந்திரா தார் காரை புக் செஞ்சிருக்கீங்களா... இதோ முதல் 500 கார்கள் தயார்..! எப்போது நம் கைகளுக்கு கிடைக்கும்?

ஆஃப் ரோடு பயணங்களுக்கு மட்டுமே உகந்த காராக விளங்கி வந்த இதனை அனைத்து விதமான பயன்பாட்டிற்கும் உபயோகித்துக் கொள்ளும் வகையில் மஹிந்திரா தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது, தினசரி மற்றும் குடும்ப பயணங்களுக்கு ஏற்ற வாகனமாக இரண்டாம் தலைமுறை தார் எஸ்யூவியை மஹிந்திரா வடிவமைத்துள்ளது.

மஹிந்திரா தார் காரை புக் செஞ்சிருக்கீங்களா... இதோ முதல் 500 கார்கள் தயார்..! எப்போது நம் கைகளுக்கு கிடைக்கும்?

இதனடிப்படையிலேயே ஏஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் எனும் இரு பிரிவுகளில் இது விற்பனைக்கு வந்துள்ளது. இதில், ஒன்று ஆஃப்ரோடு பயணத்தையும், மற்றொன்று தினசரி மற்றும் குடும்ப பயணங்களுக்கு ஏற்ற அம்சத்தில் இருக்கின்றது. இவ்வாறு பல்வேறு சிறப்பு வசதிகளை தார் பெற்றிருப்பதனாலயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் நான்கு நாட்களிலேயே 9 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கைப் பெற்றது.

மஹிந்திரா தார் காரை புக் செஞ்சிருக்கீங்களா... இதோ முதல் 500 கார்கள் தயார்..! எப்போது நம் கைகளுக்கு கிடைக்கும்?

தற்போதைய நிலவரப்படி, அதாவது, கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி 20 ஆயிரம் தார் எஸ்யூவி கார்களுக்கான புக்கிங்கை மஹிந்திரா பெற்றிருக்கின்றது. இது யாரும் எதிர்பார்த்திராத இமாலய அளவிலான வரவேற்பாகும். இந்த நிலையில்தான் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களைக் குஷிப்படுத்தும் விதமான ஓர் அறிவிப்பை மஹிந்திரா வெளியிட்டுள்ளது.

மஹிந்திரா தார் காரை புக் செஞ்சிருக்கீங்களா... இதோ முதல் 500 கார்கள் தயார்..! எப்போது நம் கைகளுக்கு கிடைக்கும்?

500 யூனிட் தார் எஸ்யூவி காரை டெலிவரி வழங்குவதற்காக தயார் நிலையில் வைத்திருப்பதாக அது கூறியுள்ளது. அண்மையில், மிக அதிக எண்ணிக்கையில் புக்கிங் குவிந்து வருவதால் குறிப்பிட்ட தார் வேரியண்டை உரிய வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி வழங்க கால தாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அது அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தது. இதற்கான காத்திருப்பு காலம் ஐந்து மாதங்களில் இருந்து 7 மாதங்களாக தற்போது உயர்ந்துள்ளது.

மஹிந்திரா தார் காரை புக் செஞ்சிருக்கீங்களா... இதோ முதல் 500 கார்கள் தயார்..! எப்போது நம் கைகளுக்கு கிடைக்கும்?

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே முன்னதாக புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு தார் காரை விரைவில் டெலிவரி வழங்க இருப்பதாக அது கூறியுள்ளது. இதற்காக முதல் 500 யூனிட் தார் எஸ்யூவி கார்களை அது தயார் செய்து வைத்திருக்கின்றது. இதனை வரும் வாரத்திலேயே டெலிவரி கொடுக்க இருப்பதாக மஹிந்திரா கூறியுள்ளது.

மஹிந்திரா தார் காரை புக் செஞ்சிருக்கீங்களா... இதோ முதல் 500 கார்கள் தயார்..! எப்போது நம் கைகளுக்கு கிடைக்கும்?

இக்காரின் நம்பர் 1 மாடலின் டெலிவரி கடந்த 1ம் தேதி வழங்கப்பட்டது. இந்நிலையிலேயே அடுத்தடுத்த வாகனங்களை டெலிவரி வழங்கும் பணியில் மஹிந்திரா நிறுவனம் களமிறங்கியுள்ளது. மேலும், புக்கிங் செய்தவர்களுக்கு விரைந்து காரை டெலிவரி வழங்க வேண்டும் என்பதற்காக உற்பத்தி திறனைக் கூட்டுவதற்கான முயற்சியிலும் மஹிந்திரா ஈடுபட்டு வருகின்றது.

மஹிந்திரா தார் காரை புக் செஞ்சிருக்கீங்களா... இதோ முதல் 500 கார்கள் தயார்..! எப்போது நம் கைகளுக்கு கிடைக்கும்?

தற்போது மஹிந்திரா நிறுவனம் தார் எஸ்யூவி காரை மாதம் ஒன்றிற்கு 2 ஆயிரம் யூனிட்டுகளை உற்பத்தி செய்யும் திறனிலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதனை 3,000 யூனிட்டுகளாக உயர்த்த இருக்கின்றது மஹிந்திரா. வரும் ஜனவரி மாதத்திற்குள் இந்த இலக்கை எட்டிவிடுவோம் என அது கூறியிருக்கின்றது.

மஹிந்திரா தார் காரை புக் செஞ்சிருக்கீங்களா... இதோ முதல் 500 கார்கள் தயார்..! எப்போது நம் கைகளுக்கு கிடைக்கும்?

இவ்வாறு உற்பத்தி பணியை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மஹிந்திரா நிறுவனம், மறு பக்கம் புக்கிங் செயல்பாட்டிற்கு தற்காலிக தடையை விதித்துள்ளது. எதிர்பார்த்திராத அளவில் புக்கிங் கிடைத்ததே காரணம் என அது கூறியுள்ளது. ஏஎக்ஸ் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் முதல் மூன்று ஆரம்பநிலை வேரியண்டுகளுக்கான புக்கிங்கையே அது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

மஹிந்திரா தார் காரை புக் செஞ்சிருக்கீங்களா... இதோ முதல் 500 கார்கள் தயார்..! எப்போது நம் கைகளுக்கு கிடைக்கும்?

எந்த வேரியண்டிற்கு புக்கிங் நடைபெறுகின்றது, எந்த வேரியண்டின் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை பட்டியலாகக் கீழே பார்க்கலாம்.

தார் MT 4x4 இருக்கைகள் 4S / 6S விலை புக்கிங் நிலவரம்
AX Petrol STD Soft Top 6S ₹9.80 Lakh Closed
AX Petrol Soft Top 6S ₹10.65 Lakh Closed
AX Diesel Soft Top 6S ₹10.85 Lakh Closed
AXO Petrol 4S Convertible ₹10.90 Lakh Open
AXO Diesel 4S Convertible ₹12.10 Lakh Open
AXO Diesel 4S Hard Top ₹12.20 Lakh Open
தார் MT 4x4 4 இருக்கைகள் விலை புக்கிங் நிலவரம்
LX Petrol Hard Top ₹12.49 Lakh Open
LX Diesel Convertible Top ₹12.85 Lakh Open
LX Diesel Hard Top ₹12.95 Lakh Open
தார் AT 4x4 4 இருக்கைகள் விலை புக்கிங் நிலவரம்
LX Petrol Convertible Top ₹13.45 Lakh Open
LX Petrol Hard Top ₹13.55 Lakh Open
LX Diesel Convertible Top ₹13.65 Lakh Open
LX Diesel Hard Top ₹13.75 Lakh Open
Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Thar First 500 Units Ready To Deliver. Read In Tamil.
Story first published: Saturday, November 7, 2020, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X