மணல் சரிவிலிருந்து விலையுயர்ந்த பென்ஸ் காரை மீட்ட தார்! அடங்கேப்பா சிலிர்க்க வைக்கும் திறன்! வீடியோ!

சரிவான மணல் பகுதியில் சிக்கிய பென்ஸ் காரை, மஹிந்திரா தார் கார் மீட்டெடுப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மணல் சரிவிலிருந்து விலையுயர்ந்த பென்ஸ் காரை மீட்ட தார்... அடங்கேப்பா சிலிர்க்க வைக்கும் திறன்! வீடியோ!

ஆஃப்-ரோட் மற்றும் சாகச பயணங்கள் வாகன ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான செயல் ஆகும். இது வேடிக்கையான ஒன்று. எனவேதான் வாகன ஆர்வலர்கள் தங்களின் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களை ஆஃப்-ரோடு சாகச பயணங்களுடன் செலவிடுகின்றனர். அதேசமயம், இது மிகவும் ஆபத்தான என்பதை நாம் கருத்திக் கொள்ள வேண்டும்.

மணல் சரிவிலிருந்து விலையுயர்ந்த பென்ஸ் காரை மீட்ட தார்... அடங்கேப்பா சிலிர்க்க வைக்கும் திறன்! வீடியோ!

இந்தியாவில் ஆஃப்-ரோடு பயணங்கள் தற்போதே பிரபலமடையத் தொடங்கியுள்ளது. இதன் காரணத்தினாலயே 4X4 திறன் கொண்ட வாகனங்களின் விற்பனை அண்மைக் காலங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அவ்வாறு, மிகவும் பிரபலமான 4X4 தொழில்நுட்பம் கொண்ட மஹிந்திரா தார் எஸ்யூவி கார், தன்னைவிட விலையிலும், உருவத்திலும் பெரிய கார் ஒன்றை சிக்கலில் இருந்து மீட்டெடுப்பதைப் போன்று காட்சிகள் வெளியாகியுள்ளன.

மணல் சரிவிலிருந்து விலையுயர்ந்த பென்ஸ் காரை மீட்ட தார்... அடங்கேப்பா சிலிர்க்க வைக்கும் திறன்! வீடியோ!

அந்த மிகப்பெரிய உருவம் கொண்ட கார் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எம்எல் கிளாஸ் மாடலாகும். இதுவே, மணல் பாதையில் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது சரிவு பகுதியில் முன்னேற முடியாமல் சிக்கியிருக்கின்றது. அப்போதே மஹிந்திரா தார் காரின் உரிமையாளர் பென்ஸ் கார் சிக்கலில் இருந்து தப்பிக்க உதவியிருக்கின்றார். இதுகுறித்த வீடியோவை லோகேஷ் ஸ்வாமி எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது.

மணல் சரிவிலிருந்து விலையுயர்ந்த பென்ஸ் காரை மீட்ட தார்... அடங்கேப்பா சிலிர்க்க வைக்கும் திறன்! வீடியோ!

இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நண்பர்கள் தங்களின் விலையுயர்ந்த கார்களில் சாகச பயணம் மேற்கொண்டபோதே இத்தகைய சூழல் நிலவியிருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம், தார் எஸ்யூவி காரை கடந்த சில தினங்களுக்கு முன்பே லேட்டஸ்ட் டிரெண்டிற்கு ஏற்ப அப்கிரேட் செய்து அறிமுகப்படுத்தியது.

மணல் சரிவிலிருந்து விலையுயர்ந்த பென்ஸ் காரை மீட்ட தார்... அடங்கேப்பா சிலிர்க்க வைக்கும் திறன்! வீடியோ!

இந்த அப்டேட்டினால், முன்னதாக வெறும் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மட்டுமே ஏற்ற வாகனமாக இருந்த தார், தற்போது குடும்பம், தினசரி என அனைத்து விதமான பயணங்களுக்கும் ஏற்ற வாகனமாக மாறியுள்ளது. எனவேதான் இந்தியர்கள் மத்தியில் இக்கார் அமோகமான வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது. ஆனால், வீடியோவில் இடம்பெற்றிருக்கும் தார் லேட்டஸ்ட் மாடல் கிடையாது. இது முந்தைய தலைமுறை மாடல் ஆகும்.

மணல் சரிவிலிருந்து விலையுயர்ந்த பென்ஸ் காரை மீட்ட தார்... அடங்கேப்பா சிலிர்க்க வைக்கும் திறன்! வீடியோ!

இதுவே தன்னை விட விலையிலும், உருவத்திலும் பிரமாண்ட வாகனமாக இருக்கும் பென்ஸ் எம்எல் கிளாஸ் லக்சூரி எஸ்யூவி காரை மீட்டிருக்கின்றது. மணல் பாதையில் பயணிப்பதற்கு ஏற்ற டயர் மற்றும் அம்சங்களை இக்கார் பெறாத காரணத்தினாலயே சிக்கியிருக்கின்றது. அதேசமயம், பென்ஸ் காரை இயக்கிய ஓட்டுநருக்கும் போதியளவு ஆஃப்-ரோடு பயண அனுபவம் இல்லை என தெரியவந்துள்ளது. எனவேதான் அக்கார் மணல் சரிவில் சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மணல் சரிவிலிருந்து விலையுயர்ந்த பென்ஸ் காரை மீட்ட தார்... அடங்கேப்பா சிலிர்க்க வைக்கும் திறன்! வீடியோ!

பொதுவாக, விலையுயர்ந்த கார்கள் அனைத்திலும் அனைத்து விதமான சாலையையும் சமாளிக்கும் திறன் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல் காரிலும் பன்முக சாலைகளைச் சமாளிக்கும் திறன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது ஓட்டுநரின் கையிலேயே இருக்கின்றது. அதாவது, என்ன மாதிரியான சிறப்பு வசதிகளை வாகனங்கள் பெற்றிருந்தாலும் அதை கையாளும் ஓட்டுநரிடத்திலேயே அக்காரின் செயல்பாட்டு தன்மையும் இருக்கும்.

மணல் சரிவிலிருந்து விலையுயர்ந்த பென்ஸ் காரை மீட்ட தார்... அடங்கேப்பா சிலிர்க்க வைக்கும் திறன்! வீடியோ!

அந்தவகையில், பென்ஸ் காரை இயக்கியவருக்கு முன் அனுபவம் இல்லாததே அக்கார் முன்னேற முடியாமல் திணறியதற்கு காரணியாக அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி, அதன் டயர்கள் மணல் பரப்பில் இயங்குவதற்கான அமைப்பைக் கொண்டிராததும் இந்த நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது. ஆகையால், இரு தரப்பிலும் தவறு நடந்திருப்பதை நம்மால் உணர முடிகின்றது.

மணல் சரிவிலிருந்து விலையுயர்ந்த பென்ஸ் காரை மீட்ட தார்... அடங்கேப்பா சிலிர்க்க வைக்கும் திறன்! வீடியோ!

அதேசமயம், மஹிந்திரா தார் எஸ்யூவி கார் ஆஃப்-ரோடு பயணங்களுக்காக சில அம்சங்களைப் பெற்றிருப்பதையும் நம்மால் காண முடிகின்று. குறிப்பாக, அதன் டயர் மற்றும் எஞ்ஜின் திறன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், கணிசமாக அதன் வீல் பேஸும் உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய திறன்களை அக்கார் பெற்றிருந்த காரணத்தினாலாயே முதல் மூன்று முயற்சிகளிலேயே பென்ஸ் காரை அது மீட்டெடுத்து.

மணல் சரிவிலிருந்து விலையுயர்ந்த பென்ஸ் காரை மீட்ட தார்... அடங்கேப்பா சிலிர்க்க வைக்கும் திறன்! வீடியோ!

இதுபோன்று, வெளியேற முடியாமல் சிக்கி தவித்த வாகனங்களை தார் கார் மீட்பது முதல் முறையல்ல. முன்னதாக, இதேபோன்று பல்வேறு மீட்பு செயல்களுக்கு தார் கார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே பென்ஸ் கார் மீட்கப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.

மணல் சரிவிலிருந்து விலையுயர்ந்த பென்ஸ் காரை மீட்ட தார்... அடங்கேப்பா சிலிர்க்க வைக்கும் திறன்! வீடியோ!

மெர்சிடிஸ் பென்ஸ் கார் தற்போது இந்திய சந்தையில் ஜிஎல்இ எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இப்பெயர் மாற்றப்பட்டது. புதிய தோற்றம் மற்றும் சொகுசு வசதிகளுக்கான அப்டேட் வழங்கப்பட்டதை அடுத்து இப்பெயர் மாற்றமும் செய்யப்பட்டது. ஆகையால், எம்எல் என்ற பெயரில் பென்ஸ் காரைப் பார்ப்பது சற்று கடினம்.

மணல் சரிவிலிருந்து விலையுயர்ந்த பென்ஸ் காரை மீட்ட தார்... அடங்கேப்பா சிலிர்க்க வைக்கும் திறன்! வீடியோ!

இந்த கார்களில் சிடிஐ திறன் கொண்ட எஞ்ஜின்களை பென்ஸ் நிறுவனம் பயன்படுத்தியது. அந்தவகையில், 3.0 லிட்டர் டீசல் எஞ்ஜினில் கிடைக்கும் எம்எல் கிளாஸ், அதிகபட்சமாக 255 பிஎஸ் பவரையும், 619 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. மேலும், இது அனைத்து வீல்களும் இயங்கும் திறனைக் கொண்ட காராக இருக்கின்றது. இதுபோன்ற பல்வேறு சிறப்பு வசதிகளை உள்ளடக்கிய வாகனமே பென்ஸ் எம்எல் கிளாஸ் கார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mahindra Thar Rescue Mercedes Benz ML Class SUV. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X