குட்டையில் சிக்கிய விலையுயர்ந்த சொகுசு கார்... டஃபான சூழலை அசால்ட் செய்த மஹிந்திர தார்...

மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யூவி கார் அதைவிட பல மடங்கு விலையுயர்ந்த மற்றும் திறனுடைய காரை குட்டையில் இருந்து மீட்டெடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

குட்டையில் சிக்கிய விலையுயர்ந்த சொகுசு கார்... டஃபான சூழலை அசால்ட் செய்த மஹிந்திர தார்...

விலையுயர்ந்த கார் என்றாலே அதி திறன் மிக்கவை, எம்மாதிரியான சாவலான சாலையாக இருந்தாலும் சமாளித்துவிடும் இம்மாதிரியான பிம்பங்களே மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது. மக்களின் இந்த நம்பிக்கையில் அந்த விலையுயர்ந்த வாகனங்கள் மண்ணை அள்ளிப்போட்டு விடுகின்றன. அவ்வாறு, மிகச்சிறிய தண்ணீர் குட்டைக்குள் சிக்கிய விலையுயர்ந்த கார் பற்றிய தகவலைதான் நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கின்றோம்.

குட்டையில் சிக்கிய விலையுயர்ந்த சொகுசு கார்... டஃபான சூழலை அசால்ட் செய்த மஹிந்திர தார்...

லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த அதி திறனுடைய கார்களில் ஒன்று டிஸ்கவரி. இந்த எஸ்யூவி காரே குட்டைக்குள் மாட்டிக்கொண்டு வெளியேற முடியாமல் சிக்கியது. அந்த நேரத்தில் எளிய எஸ்யூவி கார்களில் ஒன்றாக இருக்கும் மஹிந்திரா தார் காரே தண்ணீரில் சிக்கிய டிஸ்கவரியை மீட்க உதவியிருக்கின்றது.

குட்டையில் சிக்கிய விலையுயர்ந்த சொகுசு கார்... டஃபான சூழலை அசால்ட் செய்த மஹிந்திர தார்...

மஹிந்திரா தார் எளிமையான எஸ்யூவி கார்களில் ஒன்றாக காணப்பட்டாலும், அது அதி திறன் மிக்க கார்களுக்கு இணையான சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கின்றது. எனவேதான் பல நேரங்களில் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிய வாகனங்களுக்கு உதவ இக்காரே கிரேன்களுக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

குட்டையில் சிக்கிய விலையுயர்ந்த சொகுசு கார்... டஃபான சூழலை அசால்ட் செய்த மஹிந்திர தார்...

ஆம், தன்னை விட பல மடங்கு உருவத்திலும், திறனிலும் உயர்ந்த கார், பேருந்து மற்றும் லாரி உள்ளிட்ட பல வாகனங்களை மஹிந்திரா தார் மீட்டெடுத்திருக்கின்றது. இந்த நிலையிலேயே லேண்ட் ரோவர் டிஸ்கவரியையும் அக்கார் மீட்டிருக்கின்றது. இதுகுறித்த தகவல் மற்றும் வீடியோவை லோகேஷ் சுவாமி எனும் யுட்யூப் தளம் வெளியிட்டுள்ளது. யுட்யூபில் வெளியாகிய இந்த வீடியோவினாலயே இச்சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

குட்டையில் சிக்கிய விலையுயர்ந்த சொகுசு கார்... டஃபான சூழலை அசால்ட் செய்த மஹிந்திர தார்...

சிறந்த ஆஃப்-ரோடு அம்சங்களை அதிகம் கொண்டிருக்கின்ற காரணத்தினாலயே லேண்ட் ரோவர் டிஸ்கவரி காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இதில் ஆஃப் ரோடு சாலைகளுக்கான வசதி மட்டுமின்றி பல சொகுசு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. எனவேதான், மிக அதிக விலையை இக்கார் கொண்டிருக்கின்றது. லேண்ட் ரோவர் டிஸ்கவரி எஸ்யூவி இந்தியாவில் ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.

குட்டையில் சிக்கிய விலையுயர்ந்த சொகுசு கார்... டஃபான சூழலை அசால்ட் செய்த மஹிந்திர தார்...

இது மஹிந்திரா தார் காரைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் ஆகும். ஆனால், இளைஞர்கள் நடத்திய பல பரீட்சையில் தார் மற்றும் சுசுகி ஜிப்ஸி கார்களால் செய்ய முடிந்த செயலை அதனால் செய்ய முடியவில்லை. ஆம், இளைஞர்கள் சிலர் தங்களின் கார்களை பல பரீட்சைச் செய்யும் விதமாக, சகதி நிறைந்த சிறிய குட்டைக்குள் இயக்கியிருக்கின்றனர்.

குட்டையில் சிக்கிய விலையுயர்ந்த சொகுசு கார்... டஃபான சூழலை அசால்ட் செய்த மஹிந்திர தார்...

அதில், மஹிந்திரா தார் மற்றும் சுசுகி ஜிப்ஸி உள்ளிட்ட சில கார்கள் அசால்டாக வெளியேறியநிலையில் லேண்ட் ரோவர் டிஸ்கவரி காரால் மட்டும் அந்த குட்டையைக் கடக்க முடியவில்லை. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், அந்த காரால் முன்னேறி செல்லவும் முடியவில்லை, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியும் வர முடியவில்லை. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே மஹிந்திரா தார் மூலம் கயிறு கட்டி அக்கார் மீட்கப்பட்டிருக்கின்றது.

குட்டையில் சிக்கிய விலையுயர்ந்த சொகுசு கார்... டஃபான சூழலை அசால்ட் செய்த மஹிந்திர தார்...

லேண்ட் ரோவர் டிஸ்கவரி காரில் அதி திறன் மிக்க எஞ்ஜின் இருக்கின்றது. இது நான்கு வீல்களுக்கும் இயங்கு சக்தியை வழங்கும் திறன் கொண்டதாகும். இருப்பினும், அதனால் அந்த மிக சிறிய குட்டையைக்கூட கடக்க முடியவில்லை. இதற்கு பல்வேறு காரணங்களை நம்மால் கூற முடியும். முதலில், சிறந்த ஓட்டுநர் அக்காரை இயக்காமல் இருந்ததே மிக முக்கியமான காரணமாக உள்ளது.

குட்டையில் சிக்கிய விலையுயர்ந்த சொகுசு கார்... டஃபான சூழலை அசால்ட் செய்த மஹிந்திர தார்...

மஹிந்திரா தார் மற்றும் சுசுகி ஜிப்ஸி ஆகியவற்றின் திறனுக்கு எந்த விதத்திலும் சலைத்தது அல்ல லேண்ட் ரோவர் டிஸ்கவரி. இதுமட்டுமின்றி, தார் காரில் அதிக பிடிமானத்தை வழங்கும் ஆஃப்டர் மார்க்கெட் டயர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதுவும், அக்காரின் சிறந்த திறன் வெளிப்பாட்டிற்கு முக்கியமான காரணமாக உள்ளது. ஆனால், இந்த மாதிரியான மாற்றங்கள் எதுவும் டிஸ்கவரியில் மேற்கொள்ளப்படவில்லை.

இதுவும், அக்கார் சகதியில் சிக்க முக்கிய காரணமாக இருக்கின்றது. மேலும், பிற கார்களைப் போன்று அதிக வேகத்தில் குட்டைக்குள் இறங்காமல் மிகவும் குறைந்த வேகத்தில் இறங்கியதும் சிக்கலுக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. டிஸ்கவரி மிகவும் விலையுயர்ந்த கார் என்பதால் சேதத்தைத் தவிர்க்கவே அதன் உரிமையாளர் மிகப் பொறுமையாக இறக்கினார். அதுவே, அக்கார் தோல்வியடைவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mahindra Thar Rescued Land Rover Discovery Video. Read In Tamil.
Story first published: Tuesday, August 18, 2020, 15:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X