பள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது!

புத்தம் புதிய மஹிந்திர தார் எஸ்யூவி கார் பள்ளத்தில் சிக்கியதைப் போல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது! பாத்தாருனா பதறிடுவாரு...

மஹிந்திரா நிறுவனத்தின் புதுமுக வாகனமாக தார் எஸ்யூவி இருக்கின்றது. இக்கார் முன்பெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், இதன் முந்தைய தலைமுறை வெறும் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ப அம்சங்களை மட்டுமே பெற்றிருந்தது.

பள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது! பாத்தாருனா பதறிடுவாரு...

ஆனால், புதிய தலைமுறை தார் எஸ்யூவி அவ்வாறில்லாமல் தினசரி மற்றும் குடும்ப பயணங்களுக்கு ஏற்ப வசதிகளைக்-கொண்ட காராக அறிமுகமாகியுள்ளது. எனவேதான் இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு நிலவி வருகின்றது. மிகத் தெளிவாகக் கூற வேண்டுமானால் பட்டையைக் கிளப்பும் வகையில் புக்கிங்கைப் பெற்று வருகின்றது.

பள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது! பாத்தாருனா பதறிடுவாரு...

இந்நிலையில், புத்தம் புதிய மஹிந்திரா தார் கார் குப்பைகளால் நிரம்பிய பள்ளம் ஒன்றில் சிக்கிக் கொண்டு, வெளியே வர முடியாமல் தவிப்பதைப் போன்ற காட்சிகள் இணையத்தில் வட்டமடிக்கத் தொடங்கியுள்ளது. இது டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட கார் என கூறப்படுகின்றது. இதுவே டெஸ்ட் டிரைவின்போது சாலையோர பள்ளத்தில் சிக்கியிருக்கின்றது.

பள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது! பாத்தாருனா பதறிடுவாரு...

இதனை மஹிந்திரா நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பான நியுவோ-ஸ்போர்ட் எனும்-காரைப் பயன்படுத்தியே இளைஞர்கள் மீட்டிருக்கின்றனர். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பெரிதும் ஆவலை ஏற்படுத்திய கார்களில் மஹிந்திரா தார் காரும் ஒன்று. எனவேதான் இக்கார்குறித்து வெளியாகும் அனைத்து தகவல்களும் அதிகளவில் ஈர்ப்பைப்-பெற்று வருகின்றது.

பள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது! பாத்தாருனா பதறிடுவாரு...

அந்தவகையிலேயே, டெஸ்ட் டிரைவ் தார் கார் பள்ளத்தில் சிக்கிய வீடியோ அதிகப்படியானோரால் பகிரப்பட்டு, தற்போது வைரலாகி வருகின்றது. இந்த சிக்கியதற்கான துள்ளியமான காரணம் தெரியவில்லை. கார் சிக்கியிருக்கும் விதத்தை வைத்து பார்க்கையில் யு-டர்ன் எடுக்கும்போது அது பள்ளத்தில் சிக்கியிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

பள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது! பாத்தாருனா பதறிடுவாரு...

மேலும், தார் கார் யு-டர்ன் எடுத்த இடம் குப்பைகளால் நிரம்பிய பள்ளம் ஆகும். எனவேதான் காரின் இடது பக்கம் அதன்மீது ஏறிய உடனேயே வீல்களை சிக்க வைத்திருக்கின்றது. தொடர்ந்து, இடது பக்கம் முழுமையாக பள்ளத்தில் சிக்கியதன்-காரணத்தினால், அக்கார் வெளியேற முடியாமல் திணறியது.

பள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது! பாத்தாருனா பதறிடுவாரு...

இந்த நிலையில்தான் மஹிந்திராவின் நியூவோஸ்போர்ட் கார் கொண்டு மஹிந்திரா தார் மீட்கப்பட்டது. அப்போது வலது பக்கத்தில் எடையைக் கூட்டும் விதமாக இரு இளைஞர்கள் காரின் வலது பக்கத்தில் ஏறி தொங்கியிருக்கின்றனர். இது காரின் வலது பக்கத்தின் எடையைக் கூட்டுவதோடு, டயருக்கு நல்ல பிடிமானத்தையும் வழங்கியது. ஆகையால், ஒரு சில முயற்சிகளிலேயே தார் மிக சுலபமாக வெளியேறியது.

பள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது! பாத்தாருனா பதறிடுவாரு...

மேலும், காரை மீட்கும்போது மிக நேர்த்தியாக கையாண்டதால் காருக்கு சிறிதளவும் சேதமடையவில்லை என தெரிகின்றது. ஆனால், காரின் அடிப்பகுதியில் என்னவாகியது என்பது தெரியவில்லை. இக்காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் சற்று அதிகம் என்பதால் அடிப்பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது என யூகிக்கப்படுகின்றது. தார் பள்ளத்தில் சிக்கிய வீடியோவைக் கீழே காணலாம்.

பள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது! பாத்தாருனா பதறிடுவாரு...

மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா இணையத்தில் மிகவும் ஆக்டிவான நபராக இருந்து வருகின்றார். இவர் வாகனம் சார்ந்து வெளியாகும் வீடியோ மற்றும் பதிவுகளுக்கு உடனடி பதிலைக் கொடுப்பதில் தவறுவதில்லை. இம்மாதிரியான சூழ்நிலையில் குப்பைகளால் சூழப்பட்ட பள்ளத்தில் மஹிந்திரா தார் சிக்கிய வீடியோவைக் கண்டால் என்ன ரியாக்ட் செய்வார் என்பதையே யூகிக்க முடியவில்லை.

பள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது! பாத்தாருனா பதறிடுவாரு...

Image Courtesy: Dr.Ajmal Karim

இருப்பினும், மஹிந்திரா தார் சிக்கியபோது அதை மீட்க மஹிந்திரா நியூவோ-ஸ்போர்ட் கார் உதவியதால், இந்த நிகழ்வைக் கண்டு அவர் பெறுமையடையவும் வாய்ப்பு உள்ளது. மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் ஆரம்பநிலை வேரியண்டின் விலை ரூ. 9.8 லட்சம் ஆகும். மேலும், உயர்நிலை மாடலின் விலை ரூ. 13.75 லட்சம் ஆகும். இக்கார், ஏஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் என இரு விதமான பிரிவுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

பள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது! பாத்தாருனா பதறிடுவாரு...

இதில், ஏஎக்ஸ் பிரிவானது முழுக்க ஆஃப்-ரோடு பயணத்திற்கான அம்சத்திலும், எல்எக்ஸ் வேரியண்ட் அதிக சொகுசு வசதிகளை உள்ளடக்கியதாகவும் இருக்கின்றது. தொடர்ந்து இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் தார் எஸ்யூவி விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, 2.0 லிட்டர் டர்போசார்ஜட் எம்ஸ்டேல்லியன் பெட்ரோல், 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் ஆகியவை ஆகும்.

பள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது! பாத்தாருனா பதறிடுவாரு...

இதில் பெட்ரோல் எஞ்ஜின் 150 பிஎசிபி மற்றும் 320 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது. இதேபோன்று, டீசல் எஞ்ஜின் 130 பிஎஸ் மற்றும் 300 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இவ்விரு எஞ்ஜின்களும் மேனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் வசதியுடனும் விற்பனைக்கு கிடைக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mahindra Thar Test Drive Vehicle Stuck In Garbage. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X