பனோராமிக் சன்ரூஃப் உடன் இந்தியாவின் முதல் மஹிந்திரா தார்... இந்த தோற்றத்தில் பார்த்துள்ளீர்களா..?

மாடிஃபைடு கார்களை விரும்புவோருக்கு பிடித்த விதத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடல் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபைடு தார் கார் பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

பனோராமிக் சன்ரூஃப் உடன் இந்தியாவின் முதல் மஹிந்திரா தார்... இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

கஸ்டமைஸ்ட் மாற்றங்களாக இந்த தார் மாடல் தனது தனித்துவமான முரட்டுத்தனமான தோற்றத்தையும், ஆஃப்-ரோடு ஏற்றதான திறன்களையும் இழந்துள்ளது. இதற்கு முன்னரும் மஹிந்திரா தார் மாடல் பல்வேறு கஸ்டமைஸ்ட் நிறுவனங்களால் மாடிஃபைடு செய்யப்பட்டுள்ளது.

பனோராமிக் சன்ரூஃப் உடன் இந்தியாவின் முதல் மஹிந்திரா தார்... இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

இதில் ஒவ்வொன்றும் அந்த கஸ்டமைஸ்ட் நிறுவனங்களின் கை வண்ணத்தில் இருந்தன. இந்த தார் மாடல் ஹார்ட்டாப் வெர்சனிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடலில் நாம் கவனிக்கத்தக்க விஷமாக இந்திய சந்தையில் எந்த தார் மாடலிலும் இல்லாத பனோராமிக் சன்ரூஃப் இந்த மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பனோராமிக் சன்ரூஃப் உடன் இந்தியாவின் முதல் மஹிந்திரா தார்... இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

இந்த மாடிஃபைடு மாற்றங்களை தார் மாடலில் கொண்டு வந்துள்ள கஸ்டமைஸ்ட் நிறுவனத்தின் பெயர் பேக்யார்டு கஸ்டம்ஸ் ஜம்மு ஆகும். இந்நிறுவனம் இந்த கஸ்டமைஸ்ட் தார் மாடலுக்கு ரிப்பர் என பெயர் வைத்துள்ளது. இதன் முன்புறத்தில் வழக்கமான க்ரில் அமைப்பின் டிசைன் சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

பனோராமிக் சன்ரூஃப் உடன் இந்தியாவின் முதல் மஹிந்திரா தார்... இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

ஹெட்லேம்ப் அதே வட்டவடிவில் தான் இருந்தாலும், அதன் அமைப்பில் ப்ரோஜெக்டர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் முன்புறத்தில் 9500 எல்பிஎஸ் எலக்ட்ரிக் வின்ச் உடன் உள்ள ஆஃப்-ரோடு பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கஸ்டம் பம்பரும் எல்இடி ஃபாக் விளக்குகளுக்கான ஹௌசிங்கை கொண்டுள்ளது.

பனோராமிக் சன்ரூஃப் உடன் இந்தியாவின் முதல் மஹிந்திரா தார்... இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

பக்கவாட்டு பகுதி பார்க்கும்போது இந்த கஸ்டமைஸ்ட் மாடல் வழக்கமான மாடலை காட்டிலும் சற்று உயரத்தை அதிகமாக பெற்றிருப்பது தெரிய வருகிறது. இதற்கு காரணம், சங்கியர் தோற்றத்திலான டயர்கள் மற்றும் சக்கரங்களை கொண்ட 3.5 இன்ச் லிஃப்ட் கிட் ஆகும்.

பனோராமிக் சன்ரூஃப் உடன் இந்தியாவின் முதல் மஹிந்திரா தார்... இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

இவற்றுடன் ஸ்டாக் சஸ்பென்ஷனும் ஆர்க் சிஎஃப்எல் யூனிட்களுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஹார்ட் டாப் தோற்றத்திற்கு மாறியுள்ள இந்த எஸ்யூவி மாடலின் இந்த படங்களின் மூலம் பார்க்கும்போது காரை நேர்த்தியான தோற்றத்திற்கு மாற்ற பேக்யார்ட் கஸ்டம்ஸ் நிறுவனம் தீவிரமாக பணியாற்றிருப்பது தெரிய வருகிறது.

பனோராமிக் சன்ரூஃப் உடன் இந்தியாவின் முதல் மஹிந்திரா தார்... இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

இதன் மேற்கூரையில் ரூஃப் ரெயில்களும் ஹம்மர் போன்ற விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. சக்கர ஆர்ச்சுகள் கஸ்டமைஸ்ட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. பின்புற இருக்கை வரிசையை சுற்றிலும் உள்ள பெரிய அளவிலான கண்ணாடிகள் கேபினிற்கு கூடுதலான வெளிச்சத்தை வழங்கும்.

பனோராமிக் சன்ரூஃப் உடன் இந்தியாவின் முதல் மஹிந்திரா தார்... இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

பின்புறத்தில் டெயில்கேட்டில் ஸ்பேர் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. டெயில்லைட்கள் எல்இடி தரத்திலும், பம்பர் ஆஃப்-ரோடிற்கு ஏற்ற விதத்திலும் வழங்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் பக்கெட் வடிவிலான இருக்கைகள், தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் அப்கிரேட் ஆடியோ செட்அப் உள்ளிட்டவை உள்ளன. இதில் இருக்கைகள் சிவப்பு-கருப்பு கலவையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பனோராமிக் சன்ரூஃப் உடன் இந்தியாவின் முதல் மஹிந்திரா தார்... இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

இந்த கஸ்டமைஸ்ட் தார் மாடலில் மிகவும் கவரும் அம்சமாக பனோராமிக் சன்ரூஃப் உள்ளது. இதன் காற்றோட்டமான உட்புற கேபின் காருக்கு ப்ரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. இந்திய சந்தையில் உள்ள தார் மாடலில் பனோராமிக் போன்ற வசதிகள் எதுவும் வழங்கபடவில்லை. இதனால் இந்த தார் தான் இந்தியாவிலேயே பனோராமிக் சன்ரூஃப் பெற்ற முதல் மாடல் ஆகும்.

பனோராமிக் சன்ரூஃப் உடன் இந்தியாவின் முதல் மஹிந்திரா தார்... இந்த தோற்றத்தில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்...

சுமார் ஒன்றை மாத காலமாக இதன் கஸ்டமைஸ்ட் பணிகளில் ஈடுப்பட்டு வந்த பேக்யார்டு கஸ்டம்ஸ் நிறுவனம் இந்த மாடிஃபைடு மாற்றங்களுக்கு ரூ.4.5 லட்சம் வரையில் செலவழித்துள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் தார் மாடலை பெற விரும்புவோர் பேக்யார்டு கஸ்டம்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்.

More from DriveSpark

Article Published On: Monday, May 25, 2020, 21:30 [IST]
English summary
Meet India’s first Mahindra Thar with a ‘panoramic sunroof’
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+