அட்ராசக்கை... இந்த விலையில் வருகிறதா மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார்?

மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அட்ராசக்கை... இந்த விலையில் வருகிறதா மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார்?

எலெக்ட்ரிக் கார் சந்தை சூடுபிடித்துள்ள நிலையில், இந்த சந்தையில் துவக்கத்திலேயே துண்டு போட்டுவிட அனைத்து கார் நிறுவனங்களும் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில், இந்த சந்தையில் நாட்டின் முன்னோடி நிறுவனமான மஹிந்திரா தொடர்ந்து எலெக்ட்ரிக் கார் மாடல்களை வரிசை கட்ட திட்டமிட்டுள்ளது.

அட்ராசக்கை... இந்த விலையில் வருகிறதா மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார்?

இதற்கு சரியான தளமாக ஆட்டோ எக்ஸ்போவை பயன்படுத்திக் கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, மஹிந்திரா கேயூவி100 மற்றும் எக்ஸ்யூவி300 எஸ்யூவி மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை பொது பார்வைக்கு கொண்டு வர இருக்கிறது.

அட்ராசக்கை... இந்த விலையில் வருகிறதா மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார்?

இந்த நிலையில், கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவியை மிக சவாலான விலையில் நிலைநிறுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ கூறுகையில்,"எலெக்ட்ரிக் கார் சந்தையின் போக்கை மாற்றும் வகையில் ரூ.9 லட்சத்திற்குள் புதிய மாடலை களமிறக்க திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

அட்ராசக்கை... இந்த விலையில் வருகிறதா மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார்?

அது கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவிதான் என்பதும், இதனை மிக குறைவான விலையில் கொண்டு வருவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளது உறுதியாகி இருக்கிறது.

அட்ராசக்கை... இந்த விலையில் வருகிறதா மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார்?

வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை ரூ.12 லட்சம் விலையில் அறிமுகம் செய்ய இருப்பதாக மாருதி சுஸுகி தெரிவித்து வரும் நிலையில், மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி மிக குறைவான விலையில் நிறுத்தப்பட்டால், அது மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும்.

அட்ராசக்கை... இந்த விலையில் வருகிறதா மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார்?

மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 40kW மின்மோட்டார் பயன்படுத்தப்படும். இந்த காரின் பேட்டரியும், மின் மோட்டாரும் இணைந்து 53 பிஎச்பி பவரையும் 120 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிங்கிள் ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

அட்ராசக்கை... இந்த விலையில் வருகிறதா மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார்?

இந்த காரில் 15.9kWh திறன் வாய்ந்த லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்படும். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 முதல் 140 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். அதாவது, நகர்ப்புற பயன்பாட்டிற்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

அட்ராசக்கை... இந்த விலையில் வருகிறதா மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார்?

சாதாரண மாடலைவிட எலெக்ட்ரிக் கேயூவி100 எஸ்யூவி வடிவமைப்பில் சில குறிப்பிடத்தக்க மாறுதல்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது. க்ரில் அமைப்பு, ஏர்டேம் அமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும். இதேபோன்று, பின்புறத்திலும் சிறிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

அட்ராசக்கை... இந்த விலையில் வருகிறதா மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார்?

உட்புறத்திலும் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். பேட்டரி ரேஞ்ச் உள்ளிட்ட முக்கியத் தகவல்களை காட்டும் வகையில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் மின்னணு திரை அமைப்பு கொடுக்கப்படும்.

அட்ராசக்கை... இந்த விலையில் வருகிறதா மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார்?

இந்த காரின் பேட்டரியை வீட்டு சார்ஜர் மூலமாக முழுமையாக சார்ஜ் ஏற்றுவதற்கு 5 மணி 45 நிமிடங்களும், ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 55 நிமிடங்களிலும் சார்ஜ் ஏற்ற முடியும். இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.

Source: ET Auto

More from DriveSpark

Article Published On: Friday, January 10, 2020, 10:50 [IST]
English summary
Mahindra Electric is planning to launch a sub-9 lakh electric car in the Auto Expo as it aims to expand its portfolio to newer segments.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+