சோலார் மேற்கூரையுடன் அறிமுகமான மஹிந்திரா ட்ரியோ மின்சார ஆட்டோ... சார்ஜ் ஸ்டேஷனே தேவையில்லை..!

மஹிந்திரா நிறுவனம் அதன் ட்ரியோ மின்சார ஆட்டோவை சோலார் மேற்கூரையுடன் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சோலார் மேற்கூரையுடன் அறிமுகமான மஹிந்திரா ட்ரியோ மின்சார ஆட்டோ... சார்ஜ் ஸ்டேஷனே தேவையில்லை..!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மிக முக்கியமான வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்ரியோ என்ற எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது.

சோலார் மேற்கூரையுடன் அறிமுகமான மஹிந்திரா ட்ரியோ மின்சார ஆட்டோ... சார்ஜ் ஸ்டேஷனே தேவையில்லை..!

தற்போது, இந்த மின்சார ஆட்டோவில் மிக முக்கியமான அம்சமாக சோலார் மேற்கூரையை கூடுதலாக இணைத்துள்ளது. இதனால், இந்த மின்சார ஆட்டோ சார்ஜிங் நிலையத்தின் உதவியின்றியே சூரிய ஒளியை மட்டுமே பயன்படுத்தி, தேவையான சார்ஜை சேகரித்துக்கொள்ளும் திறனைப் பெற்றிருக்கின்றது.

சோலார் மேற்கூரையுடன் அறிமுகமான மஹிந்திரா ட்ரியோ மின்சார ஆட்டோ... சார்ஜ் ஸ்டேஷனே தேவையில்லை..!

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக குறிப்பிட்ட வாகனங்களை அறிமுகம் செய்தது.

அந்தவகையில், இந்த புதிய எலெக்ட்ரிக் ஆட்டோவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இது மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரப்படலாம் என்ற தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.

சோலார் மேற்கூரையுடன் அறிமுகமான மஹிந்திரா ட்ரியோ மின்சார ஆட்டோ... சார்ஜ் ஸ்டேஷனே தேவையில்லை..!

இந்நிலையிலேயே, அண்மையில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் சோலார் மேற்கூரை பொருந்திய எலெக்ட்ரிக் ஆட்டோவை காட்சிப்படுத்தியது மஹிந்திரா. இதேபோன்று பல்வேறு எதிர்கால மின்சார வாகனங்களையும் அது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

சோலார் மேற்கூரையுடன் அறிமுகமான மஹிந்திரா ட்ரியோ மின்சார ஆட்டோ... சார்ஜ் ஸ்டேஷனே தேவையில்லை..!

ஆனால், அவையனைத்தைக் காட்டிலும் அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் ஆட்டோ ட்ரியோ அநேகரிடம் இருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கு மஹிந்திரா நிறுவனம் ட்ரியோ 2.0 என்ற பெயரை வைத்திருக்கின்றது.

சோலார் மேற்கூரையுடன் அறிமுகமான மஹிந்திரா ட்ரியோ மின்சார ஆட்டோ... சார்ஜ் ஸ்டேஷனே தேவையில்லை..!

இந்த அடுத்த தலைமுறை மின்சார ஆட்டோ அதன் முந்தை தலைமுறையைக் காட்டிலும் பல மடங்கு சிறந்ததாகும். குறிப்பாக, இந்த ஆட்டோ குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக முழுக்க முழுக்க உள்ளூரிலேயே வைத்து தயாரித்துள்ள மஹிந்திரா.

ஆனால், இதற்கான பேட்டரி போன்ற ஒரு சிலவற்றை மட்டும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

சோலார் மேற்கூரையுடன் அறிமுகமான மஹிந்திரா ட்ரியோ மின்சார ஆட்டோ... சார்ஜ் ஸ்டேஷனே தேவையில்லை..!

குறிப்பிட்ட நடவடிக்கைகளால் இந்த ஆட்டோ புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளது. குறிப்பாக அதிக இடவசதிகொண்ட இருக்கை மற்றும் கதவுகள் ட்ரியோ எலெக்ட்ரிக் ஆட்டோவிற்கு வேற லெவல் தோற்றத்தை வழங்குகின்றது. இந்த ஆட்டோவின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக நாடு முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்களை நிறுவ மஹிந்திரா முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.

சோலார் மேற்கூரையுடன் அறிமுகமான மஹிந்திரா ட்ரியோ மின்சார ஆட்டோ... சார்ஜ் ஸ்டேஷனே தேவையில்லை..!

இதனை நடப்பாண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் செய்து முடிக்க அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே இந்த ஆட்டோ ஒரு முழுமையான சார்ஜில் 130 கிமீ வரை ரேஞ்ஜை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. தற்போது, 2.0 வெர்ஷனில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் அது 60-70 கிமீ கூடுதலான ரேஞ்ஜை வழங்கும் வகையில் மாறியிருக்கின்றது. இதனால், ஒட்டுமொத்தமாக அடுத்த தலைமுறை ட்ரியோ 200 கிமீ வரை ஒரே சார்ஜில் செல்லும்.

சோலார் மேற்கூரையுடன் அறிமுகமான மஹிந்திரா ட்ரியோ மின்சார ஆட்டோ... சார்ஜ் ஸ்டேஷனே தேவையில்லை..!

இத்துடன், கூடுதல் அம்சமாக வழங்கப்பட்டுள்ள சோலார் ரூஃப் 30 கிமீ பயணத்தில் பேட்டரிக்கு தேவையான முழு சார்ஜை வழங்குவிடும். ஆனால், இதற்கு முழுமையான சூரிய ஒளி தேவைப்படுகின்றது. ஒரு வேளை மேகமூட்டத்துடன் இருக்கும் சாலையில் ஆட்டோ சென்றால் இது பயனளிக்காது.

சோலார் மேற்கூரையுடன் அறிமுகமான மஹிந்திரா ட்ரியோ மின்சார ஆட்டோ... சார்ஜ் ஸ்டேஷனே தேவையில்லை..!

இதுபோன்ற சூழ்நிலையில் சார்ஜிங் நிலையங்களில் தேவையான சார்ஜை ஏற்றிக்கொள்ள வேண்டும். இதன்படி, பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் தேவைப்படும்.

மஹிந்திரா நிறுவனம் சோலார் ரூஃப் தேர்வை ஆப்ஷனலாக வழங்க உள்ளது. ஆகையால், இதை வேண்டாம் என நினைக்கும் வாடிக்கையாளர்கள் அதனை நீக்கிவிட்டு அதற்கான விலையையும் குறைத்த வழங்கப்பட உள்ளது.

சோலார் மேற்கூரையுடன் அறிமுகமான மஹிந்திரா ட்ரியோ மின்சார ஆட்டோ... சார்ஜ் ஸ்டேஷனே தேவையில்லை..!

இதுபோன்று, வணிக ரீதியாக இயங்கும் வாகனங்களில் மின்சார மாடலை அறிமுகம் செய்வதில் மஹிந்திரா தீவிரம் காட்டி வருகின்றது. அதன்படியே இந்த ட்ரியோ சோலாார் மின்சார ஆட்டோ தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Unveils Treo Electric Rickshaw 2.0 With Solar Roof. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X