இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை

யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்து, சர்வதேச அளவில் இந்தியாவிற்கு மிகப்பெரிய கௌரவத்தை மஹிந்திரா நிறுவனம் பெற்று கொடுத்துள்ளது.

இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை

இந்தியாவை சேர்ந்த வாடிக்கையாளர்கள் தற்போது கார்களில் இடம்பெற்றிருக்கும் பாதுகாப்பு வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர். அத்துடன் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய அரசும் கார்களில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவதை தொடர்ச்சியாக கட்டாயமாக்கி வருகிறது.

இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை

எனவே 'மேட் இன் இந்தியா' கார்கள் தற்போது பாதுகாப்பானவையாக மாறி வருகின்றன. 'மேட் இன் இந்தியா' கார்கள் பாதுகாப்பானவை கிடையாது என்ற பேச்சு முன்பு சர்வதேச அரங்கில் இருந்து வந்தது. ஆனால் தற்போது அந்த குறை தவிடி பொடியாகி வருகிறது. இதற்கு டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களுக்குதான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை

குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பு, கார்களை மோதல் சோதனைக்கு (Crash Test) உட்படுத்தி, அவற்றின் பாதுகாப்பு தரத்தை கண்டறிந்து அறிவித்து வருகிறது. இதில், அதிகபட்சமாக 5 ஸ்டார்களை ஒரு கார் முழுமையாக பெற்றால் அது மிகப்பெரிய விஷயம். இதுவரை 2 'மேட் இன் இந்தியா' கார்கள் மட்டுமே குளோபல் என்சிஏபி நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளன.

இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை

அவை இரண்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள்தான். டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) ஆகியவைதான் அந்த இரண்டு கார்கள். இதில், குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார்களை பெற்ற முதல் 'மேட் இன் இந்தியா' கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான்தான் பெற்றது.

இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை

அதன்பின்பு டாடா அல்ட்ராஸ் காருக்கும் அந்த பெருமை வெகு சமீபத்தில் கிடைத்தது. இதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியா தலைநிமிர்ந்தது. 'மேட் இன் இந்தியா' கார்கள் பாதுகாப்பு இல்லாதவை என்ற வாதத்தை இதன் மூலமாக டாடா மோட்டார்ஸ் அடித்து நொறுக்கியது. டாடா அல்ட்ராஸ் காருக்கு குளோபல் என்சிஏபி அமைப்பு 5 ஸ்டார்களை வழங்கி ஒரு சில நாட்கள் மட்டுமே ஆகின்றன.

இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை

அதற்குள்ளாக இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படும் வகையில் மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. ஆம், மூன்றாவதாக ஒரு 'மேட் இன் இந்தியா' காரும் குளோபல் என்சிஏபி அமைப்பின் கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார்களை முழுமையாக ஸ்கோர் செய்து அசத்தியுள்ளது. இம்முறை இந்தியாவிற்கு கௌரவம் தேடி தந்திருக்கும் நிறுவனம் மஹிந்திரா.

இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை

குளோபல் என்சிஏபி அமைப்பின் க்ராஷ் டெஸ்ட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) கார், 5 ஸ்டார்களை முழுமையாக வசப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார்களை முழுமையாக பெற்ற மூன்றாவது இந்திய கார் என்ற கௌரவம் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காருக்கு கிடைத்துள்ளது.

இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை

மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரானது, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக மாடல் ஆகும். இந்திய மார்க்கெட்டில் டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 போட்டியிட்டு வருகிறது. தற்போது குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார்களை பெற்றிருப்பதன் மூலமாக அதன் மதிப்பு உயரும்.

இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் இந்திய மார்க்கெட்டில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதலே அதன் பாதுகாப்பு அம்சங்களை மஹிந்திரா நிறுவனம் அழுத்தமாக கூறி வருகிறது. உண்மையில் அதன் செக்மெண்ட்டில் 7 ஏர்பேக்குகளுடன் கிடைக்கும் ஒரே ஒரு கார் மஹிந்திரா எக்ஸ்யூவி300 மட்டுமே.

இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை

எக்ஸ்யூவி300 காரின் டாப் எண்ட் ட்ரிம்மில் 7 ஏர்பேக்குகளை மஹிந்திரா வழங்குகிறது. இதுதவிர டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (Tyre Pressure Monitoring System - TPMS), 5 பயணிகளுக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளையும் எக்ஸ்யூவி300 காரில் மஹிந்திரா நிறுவனம் வழங்குகிறது.

இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை

மேலும் க்ரூஸ் கண்ட்ரோல், டிராக்ஸன் கண்ட்ரோல், ஏபிஎஸ் + இபிடி, நான்கு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக், ஆண்டி-ரோல்ஓவர் புரோடெக்ஸன், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம், ஐசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ், பார்க்கிங் கேமரா, ஸ்பீடு அலர்ட்ஸ் மற்றும் ஹில் ஹோல்டு என போதும் போதும் என்று சொல்லுமளவிற்கு எக்ஸ்யூவி300 காரில் பாதுகாப்பு வசதிகளை மஹிந்திரா வாரி வழங்கியுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் மொத்தம் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதில், 1.2 லிட்டர்-3 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அதே சமயம் 1.5 லிட்டர்-4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.

இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை

பாராட்டத்தக்க பாதுகாப்பு வசதிகள் மற்றும் சிறப்பான பெர்ஃபார்மென்ஸை வழங்க கூடிய இன்ஜின்கள் உள்ளிட்ட காரணங்களால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 மிகவும் பிரபலமான மாடலாக திகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் அதன் புகழ் மேலும் பெருகும் வகையிலான செய்தி வெளிவந்துள்ளது.

இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை

உண்மையில் பெரியர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில், சிறப்பான ஸ்கோரை பெற்றதன் மூலம் நெக்ஸான், அல்ட்ராஸ் ஆகிய 2 கார்களையும் எக்ஸ்யூவி300 கார் வீழ்த்தியுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. பெரியர்களுக்கான பாதுகாப்பில் மொத்தம் 17 புள்ளிகளில் 16.42 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் மொத்தம் 49 புள்ளிகளில் 37.44 புள்ளிகளையும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 பெற்றுள்ளது.

இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை

ஆனால் டாடா அல்ட்ராஸ் கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 16.13 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 29 புள்ளிகளையும் மட்டுமே பெற்றிருந்தது. அதே சமயத்தில் டாடா நெக்ஸான் காரானது பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 16.06 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 25 புள்ளிகளையும் மட்டுமே பெற்றிருந்தது.

இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை

இதன் மூலம் மிகவும் பாதுகாப்பான மேட் இன் இந்தியா கார் என்ற பெருமையை மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் தன்வசப்படுத்தியுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி300, 8.3 லட்ச ரூபாய் (எக்ஸ்ஷோரூம்) என்ற மலிவான ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இது கொடுக்கும் பணத்திற்கு வொர்த் ஆன கார் என்பதில் துளி கூட சந்தேகம் வேண்டாம்.

மஹிந்திரா மற்றும் டாடா உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் இன்னும் பாதுகாப்பான கார்களை தயாரித்து, சர்வதேச அரங்கில் இந்தியாவின் புகழை மென்மேலும் பரப்ப, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் வாழ்த்துக்கள்!!

More from DriveSpark

Article Published On: Tuesday, January 21, 2020, 20:03 [IST]
English summary
Mahindra XUV300 Compact SUV Gets 5-Star Safety Rating From Global NCAP. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+