மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் ஆரம்பம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் ஆரம்பம்!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு வாடிக்கையாளர் மத்தியில் தொடர்ந்து சிறப்பான வரவேற்பு உள்ளது. ஆளுமையான டிசைன், போதுமான இடவசதி, செயல்திறன் மிக்க எஞ்சின், தொழில்நுட்ப வசதிகள் என அனைத்திலும் சிறந்த மதிப்பை.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் ஆரம்பம்!

இந்த சூழலில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் கடந்த 1ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதற்கு தக்கவாறு மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் எஞ்சின் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் ஆரம்பம்!

கெராோனா பிரச்னை காரணமாக, மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலின் வருகையில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், இப்போதுள்ள சூழலில் டீலர்கள் மூடப்பட்டுள்ளதால், சாமர்த்தியமாக கையாளும் வகையில் ஆன்லைன் முறையில் விற்பனை நடைமுறைகளை கார் நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் ஆரம்பம்!

அந்த வகையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடலுக்கு முன்பதிவு ஆன்லைன் மூலமாக துவங்கப்பட்டுள்ளது. ரூ.5,000 முன்பணம் செலுத்தி மஹிந்திரா இணையதளம் மூலமாக வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய முடியும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் ஆரம்பம்!

லாக் டவுன் முடிவுக்கு வந்த உடன் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் டெலிவிரி பணிகள் துவங்கப்படும். வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யும்போது குறிப்பிடப்படும் டீலர்கள் மூலமாக டெலிவிரி பெற முடியும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் ஆரம்பம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் 2.2 லிட்டர் எம்ஹாக்155 டீசல் எஞ்சின் தற்போது பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலானது 153 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் ஆரம்பம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலானது W5, W7, W7 AT, W9, W9 AT, W11(O) மற்றும் W11(O) AT ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். பிஎஸ்4 மாடல் வேரியண்ட்டுகளில் வழங்கப்பட்ட அதே வசதிகள் இந்த வேரியண்ட்டுகளிலும் தக்க வைக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் ஆரம்பம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் எல்இடி விளக்குகள், இரட்டை வண்ண அலாய் வீல்கள், எலெக்ட்ரிக சன்ரூஃப், ஃபாக்ஸ் லெதர் இன்டீரியர், பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சி்ஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் ஆரம்பம்!

இந்த எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரோல்ஓவர் மிட்டிகேஷன் ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் ஆரம்பம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் க்ரிம்சன் ரெட், வல்கனோ பிளாக், பியர்ல் ஒயிட், ஒபுலென்ட் பர்ப்புள், மிஸ்ட்டிக் காப்பர், மூன்டஸ்ட் சில்வர் மற்றும் லேக்சைடு பிரவுன் ஆகிய வண்ணத் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் ஆரம்பம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலின் டெலிவிரி வரும் மே 3ந் தேதி லாக் டவுன் முடிந்த பின்னர் துவங்கப்படும். எனவே, இந்த எஸ்யூவியை வாங்க திட்டமிட்டிருப்போர் இப்போதே முன்பதிவு செய்து கொள்வது நலம். டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் போன்ற மாடல்களுக்கு விலை அடிப்படையில் போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 27, 2020, 11:28 [IST]
English summary
Mahindra has started accepting bookings for the BS6-compliant XUV500 SUV in the Indian market. The new Mahindra XUV500 BS6 can be booked online at the brand's official website for an amount of Rs 5,000.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+