மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடல் விபரங்கள் கசிந்தது!
மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பிஎஸ்்-6 மாடல் குறித்த பல முக்கிய விபரங்கள் கசிந்துள்ளன. அதனை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

பிஎஸ்-6 விதி அமலுக்கு வருவதற்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், அதற்கு இணையான மாசு உமிழ்வு தரமுடைய மாடல்களை அறிமுகம் செய்வதில் மஹிந்திரா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடல் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

இதுவரை சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டுள்ள புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில்தான் பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுகளில் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, தற்போது விற்பனையில் இருக்கும் மாடலிலேயே பிஎஸ்-6 எஞ்சின் தேர்வில் வர இருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, தற்போது வழங்கப்படும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பிஎஸ்-6 டீசல் எஞ்சின் தேர்வுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் அடுத்த ஓரிரு வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவியின் 2.2 லிட்டர் பிஎஸ்-6 டீசல் எஞ்சினின் சக்தியை வெளிப்படுத்தும் திறனில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போது உள்ள 155 எச்பி பவரை வெளிப்படுத்தும் அதே செயல்திறனுடன் வர இருக்கிறது. மேலும், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் வர இருக்கிறது. ஏப்ரல் 1க்கு பிறகு டீசல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இருக்காது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவியின் டீசல் மாடலானது W5, W7, W9 மற்றும் W11 ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால், ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலில் மட்டுமே வர இருக்கிறதாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவியில் வழங்கப்பட்டு வந்த 2.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு கடந்த ஆண்டு மத்தியில் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டது. எனவே, தொடர்ந்து டீசல் மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடலின் விலை கணிசமாக உயர்த்தப்படும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில், சோதனை ஓட்டத்தில் இருக்கும் இரண்டாம் தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Via - ACI


Click it and Unblock the Notifications








