2020 மஹிந்திரா தார் எஸ்யூவியை ஓட்டிய பிரித்விராஜ்... காரை பற்றி என்ன சொல்றாருனு பாருங்க...

மலையாள பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரித்விராஜ் சுகுமாறன் மிக தீவிரமான கார் பிரியர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் அவர், புதிய அறிமுகமான 2020 மஹிந்திரா தார் எஸ்யூவியை ஓட்டி, அதன் பயண அனுபவத்தை பேட்டியாக கூறியுள்ளார். அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 மஹிந்திரா தாரை ஓட்டிய பிரித்விராஜ்... காரை பற்றி என்ன சொல்றாருனு பாருங்க...

புதிய தலைமுறை மஹிந்திரா தார் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு அதன் கவர்ச்சிக்கரமான தோற்றத்தால் வாடிக்கையாளர்கள் அத்தனை பேரையும் கவர்ந்திழுத்து வருகிறது. எந்த அளவிற்கு என்றால், பிரபல நடிகர் பிரித்விராஜ் ஓட்டி சென்று அதன் பயண அனுபவத்தை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடும் அளவிற்கு.

2020 மஹிந்திரா தாரை ஓட்டிய பிரித்விராஜ்... காரை பற்றி என்ன சொல்றாருனு பாருங்க...

மஹிந்திரா க்ரூப் சேர்மன் ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து பிரித்விராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய மஹிந்திரா தார் ஓட்ட வேண்டும். வடிவமைப்பு இன்னும் விவாதத்திற்கு வரக்கூடும், ஆனால் இது சிறப்பான உணர்விற்கான மீட்டரில் வானத்தை முட்டும் அளவிலான அதிக மதிப்பெண்களைக் கொண்ட ஒரு தயாரிப்பின் ஒரு நரகமாகும் என்பதை மறுப்பதற்கில்லை என தெரிவித்துள்ளார்.

2020 மஹிந்திரா தாரை ஓட்டிய பிரித்விராஜ்... காரை பற்றி என்ன சொல்றாருனு பாருங்க...

மேலும், விலையினை அவர்கள் (டீலர்கள்) சரியாக நிர்ணயம் செய்கிறார்கள் என்று நம்புகிறேன் எனவும் தெரிவித்து ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்துள்ள பிரத்விராஜ், இது கட்டண ஒப்புதல் அல்ல என்று தன்னோட இந்த விளக்கத்திற்கான காரணத்தையும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

2020 மஹிந்திரா தாரை ஓட்டிய பிரித்விராஜ்... காரை பற்றி என்ன சொல்றாருனு பாருங்க...

பிரிவித்ராஜ் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனரும் ஆவார். மலையாளம் தவிர்த்து தமிழ் படங்களிலும் நடித்துள்ளவரிடம் போர்ஷே 911 காப்ரியோ, பிஎம்டபிள்யூ இசட்4, போர்ஷே கேயெனே, ஆடி க்யூ7 மற்றும் முற்றிலும் கருப்பு நிறத்தில் லம்போர்கினி அவெண்டேட்டார் உள்ளிட்ட விலையுயர்ந்த கார்கள் பல உள்ளன.

2020 மஹிந்திரா தாரை ஓட்டிய பிரித்விராஜ்... காரை பற்றி என்ன சொல்றாருனு பாருங்க...

இதில் இத்தாலியன் ஸ்போர்ட்ஸ் காரான லம்போர்கினி அவெண்டேடாரின் பிரத்யேக நம்பர் ப்ளேட்டிற்காக மட்டும் ரூ.25 லட்சம் செலவு செய்து அதிர்ச்சியாக்கி இருந்தார். இதனால் இவர் தற்போது 2020 மஹிந்திரா தார் எஸ்யூவியை ஒட்டியிருப்பது பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.

2020 மஹிந்திரா தாரை ஓட்டிய பிரித்விராஜ்... காரை பற்றி என்ன சொல்றாருனு பாருங்க...

2020 தார் காரை பிரித்விராஜ் சொந்தமாக வாங்கிவிட்டாரா என்பது குறித்த தகவல் எதையும் பெற முடியவில்லை. மஹிந்திராவின் இந்த 2020 தயாரிப்பை பற்றி கூறவேண்மென்றால், நீளம், அகலம் மற்றும் வீல்பேஸ் என ஒட்டுமொத்தமாக இந்த 2020 எஸ்யூவி மாடல் அதன் முன்னோடியை காட்டிலும் நன்கு பெரியதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

2020 மஹிந்திரா தாரை ஓட்டிய பிரித்விராஜ்... காரை பற்றி என்ன சொல்றாருனு பாருங்க...

இதனால் உட்புற கேபினும் சவுகரியமானதாக சற்று பெரிய அளவில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை விட முக்கியமானதாக எல்எக்ஸ் சீரிஸ்களில் பின்புறத்தில் நேருக்கு நேர் முகம் பார்க்கும்படியான இருக்கைகள் பொருத்தப்படுகின்றன. இது அதிவேகத்தின்போது பயணிகளுக்கு சிறப்பான கண்ட்ரோலை வழங்க உதவியாக இருக்கும்.

2020 மஹிந்திரா தாரை ஓட்டிய பிரித்விராஜ்... காரை பற்றி என்ன சொல்றாருனு பாருங்க...

2020 மஹிந்திரா தார் எஸ்யூவியை 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளில் தேர்வு செய்யலாம். இதில் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 130 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனையும், டர்போ பெட்ரோல் என்ஜின் 150 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

2020 மஹிந்திரா தாரை ஓட்டிய பிரித்விராஜ்... காரை பற்றி என்ன சொல்றாருனு பாருங்க...

ட்ரான்ஸ்மிஷனிற்கு இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் என்ற இரு கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. ரூ.9.75 லட்சத்தில் இருந்து ரூ.13.5 லட்சம் வரையில் விலையினை எக்ஸ்ஷோரூமில் பெற்றுள்ள இந்த 2020 மஹிந்திரா தயாரிப்பை தற்போது பிரித்விராஜ் என நட்சத்திரங்கள் பலரும் புகழ்ந்து வருவதால், பழைய காரை விற்று புதிய காரை வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக புதிய தலைமுறை தார் விளங்கும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #auto news
English summary
Actor Prithviraj Sukumaran Drove The New Mahindra Thar; Hopes For Right Pricing
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X