சாலையில் மிதக்கும் சொர்க்கத்தை வாங்கிய பிரபல நடிகர்... இந்த காரின் விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க

சாலையில் மிதக்கும் சொர்க்கத்தின் கப்பல் என போற்றப்படும் வெல்ஃபயர் லக்சுரி எம்பிவி ரக காரை பிரபல நடிகர் ஒருவர் வாங்கியிருக்கின்றார். அவர் யார் மற்றும் அக்காரின் விலை என்ன என்பது பற்றிய தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

சாலையில் மிதக்கும் சொர்க்கத்தை வாங்கிய பிரபல நடிகர்... இந்த காரின் விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

கடந்த சில நாட்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா, உல்லாச கப்பல்களுக்கு இணையான அம்சங்களைக் கொண்ட கியா கார்னிவல் எம்பி காரை வாங்கியிருந்தார். இந்த காரில் சொகுசு விடுதிகளான நட்சத்திர ஹோட்டல்களில்கூட இல்லாத வகையிலான பல லக்சூரி அம்சங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதன்காரணத்தினாலயே அவர் அக்காரை கொரோனா வைரஸ் காரணமாக நீடித்து வந்த ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த சில நாட்களிலேயே வாங்கியிருந்தார்.

சாலையில் மிதக்கும் சொர்க்கத்தை வாங்கிய பிரபல நடிகர்... இந்த காரின் விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

இந்நிலையில், பிரபல திரைப்பட நடிகர் ஒருவர் அஜய் ஜடஜே வாங்கிய காருக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகமான ஓர் காரை வாங்கியிருக்கின்றார்.

அவர் யார் என்ற சந்தேகம் உங்களுக்கு எழும்பலாம். அந்த நடிகர் மோலிவுட்டைச் சேர்ந்தவர். ஆம், மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கும் சுரேஷ் கோபிதான் அவர்.

சாலையில் மிதக்கும் சொர்க்கத்தை வாங்கிய பிரபல நடிகர்... இந்த காரின் விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

இவர்தான் நவீன சொகுசு கப்பல் என போற்றப்படும் புத்தம் புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரை வாங்கியிருக்கின்றார். சமீப காலமாக சொகுசு கார்களுக்கான வரவேற்பு இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பிரிமியம் மற்றும் சொகுசு அம்சங்களை வாரி வழங்கும் வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கி வருகின்றன.

சாலையில் மிதக்கும் சொர்க்கத்தை வாங்கிய பிரபல நடிகர்... இந்த காரின் விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

அந்தவகையில், நம்ப முடியாத வகையிலான சொகுசு அம்சங்களை மிக தாரளமாக வழங்கும் காராக கடந்த சில மாதங்களுக்கு விற்பனைக்கு வந்த கார்தான் டொயோட்டா நிறுவனத்தின் வெல்ஃபயர். இக்கார் கடந்த பிப்ரவரி மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்தான் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதே பலரின் கவனத்தை அக்கார் ஈர்க்க தொடங்கியது.

சாலையில் மிதக்கும் சொர்க்கத்தை வாங்கிய பிரபல நடிகர்... இந்த காரின் விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

இதன் விளைவாக எதிர்பாராத விற்பனை வளர்ச்சியை அது பெறத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இந்த காரில் பயணிக்கும்போது காரில் பயணிக்கின்றோம் என்ற உணர்வே ஏற்படாதாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு அம்சமும் மிக மிக அதிக சொகுசு வசதிகளை வாரி வழங்கும் வகையில் பொருத்தியிருக்கின்றது டொயோட்டா நிறுவனம். இதனால்தான் பிரபலங்கள் சிலர் இக்கார்மீது பார்வையைத் திருப்பியுள்ளனர்.

சாலையில் மிதக்கும் சொர்க்கத்தை வாங்கிய பிரபல நடிகர்... இந்த காரின் விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

அந்தவகையில், கார் அறிமுகம் செய்யப்பட்ட புதிதில் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் வெல்ஃபயர் மாடலின் உயர்நிலை வேரியண்டை வாங்கியிருந்தார். இவரைத் தொடர்ந்து மற்றுமொரு மலையாள நட்சத்திரமான சுரேஷ் கோபியும் தற்போது அதே மாடலை வாங்கியிருக்கின்றார். எனவே, மோலிவுட்டில் மட்டும் இரு டொயோட்டா வெல்ஃபயர் பயனர்கள் உருவாகியிருக்கின்றனர்.

சாலையில் மிதக்கும் சொர்க்கத்தை வாங்கிய பிரபல நடிகர்... இந்த காரின் விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

ஏற்கனவே, இன்னோவா க்ரிஸ்டா எம்பிவி கார் மூலம் இந்தியர்களை டொயோட்டா நிறுவனம் கவர்ந்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த சந்தையை சற்றே விரிவாக்கம் செய்யும் வகையில் புதிய வெல்ஃபயர் மாடலை அது இந்தியாவில் களமிறக்கியது. ஆனால், மற்ற எம்பிவி கார்களைவிட மிகப்பெரிய உருவம் கொண்டதாக இருக்கின்றது. எனவே, இடவசதிக்கு சற்றும் குறைச்சலின்றி காணப்படுகின்றது.

சாலையில் மிதக்கும் சொர்க்கத்தை வாங்கிய பிரபல நடிகர்... இந்த காரின் விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

இதற்கேற்ப டொயோட்டா வெல்ஃபயரின் நீளம் 4935 மிமீட்டராக உள்ளது. இதேபோன்று, அகலம் 1850 மிமீட்டராகவும், உயரம் 1895 மிமீட்டராகவும் இருக்கின்றது. இதன் வீல் 3000 மிமீ ஆகும். இந்த அளவிற்கு அளவுகொண்ட காரை இந்திய சாலையில் விற்பனைக்கு வருவது முதல் முறையாகும். ஏனென்றால் இந்தளவு உருவத்தில் மினி வேன்களே காணப்படுகின்றன. எனவேதான் ஒரு சிலர் இக்காரை சொகுசு அம்சங்கள் கொண்ட மினி வேன் என செல்லமாக அழைக்கின்றனர்.

சாலையில் மிதக்கும் சொர்க்கத்தை வாங்கிய பிரபல நடிகர்... இந்த காரின் விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

இக்காரில் ஆறு பேர் வரை பயணிக்க முடியும். இதில் நடு வரிசையில் இருக்கும் இருக்கைகள் கேப்டைன் இருக்கைகளாக இருக்கின்றன. இதில் பயணிக்கும்போது மன்னர்களின் அரியணையில் அமர்ந்திருப்பதைப் போன்ற அனுபவத்தை வழங்கும். அதாவது, மைய இருக்கைகளில் ஆர்ம் ரெஸ்ட், லெக் ரெஸ்ட், தேவைக்கேற்ப சாய்த்துக்கொள்ளும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இது நெடு நீண்ட தூர பயணங்களின்போது குட்டித் தூக்கம் போட ஏதுவான அம்சமாக உள்ளது.

சாலையில் மிதக்கும் சொர்க்கத்தை வாங்கிய பிரபல நடிகர்... இந்த காரின் விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

இதுமட்டுமின்றி, வான்வெளியை கண்டு ரசிக்கும் விதமாக இரு சன்ரூஃப் அமைப்புகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிவி, 3 விதமான கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட பிரிமியம் அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் பாதுகாப்பு அம்சங்களாக முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் 7 ஏர் பேக்குகள் நிறுவப்பட்டிருக்கின்றன. இவற்றுடன், மோதல் தடுப்பு தொழில்நுட்பம், ரேடார் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் வெல்ஃபயர் எம்பிவியில் கொடுக்கப்பட்டுள்ளன.

சாலையில் மிதக்கும் சொர்க்கத்தை வாங்கிய பிரபல நடிகர்... இந்த காரின் விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

மேலும், மிக முக்கியமாக டொயோட்டா வெல்ஃபயர் காரில் கவனிக்க வேண்டியது அம்சமாக ஹைபிரிட் சிஸ்டம் உள்ளது. அதாவது, இக்கார் பெட்ரோல் மற்றும் மின் மோட்டார் மூலம் இயங்கும் அமைப்பைக் கொண்டிருக்கின்றது. இதன் பெட்ரோல் எஞ்ஜின் 2.5 லிட்டர் ரகமாகும். இது அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 198 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

சாலையில் மிதக்கும் சொர்க்கத்தை வாங்கிய பிரபல நடிகர்... இந்த காரின் விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

இதேபோன்று, மின் மோட்டார் 141 பிஎச்பி பவரையும், 67 பிஎச்பி பவரையும் வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இவையிரண்டும் இணைந்து காரின் அனைத்து வீல்களுக்கும் இயங்கும் திறனை வழங்குகின்றது. மேலும், லிட்டர் ஒன்றுக்கு 16.35 கிமீ வரை மைலேஜை தருகின்றது.

சாலையில் மிதக்கும் சொர்க்கத்தை வாங்கிய பிரபல நடிகர்... இந்த காரின் விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!

இத்தகைய திறன் இக்காரின் விலை நீங்கள் நினைத்ததைப் போன்ற மிக உயர்ந்ததாகவே இருக்கின்றது. ஆம், இக்கார் இந்தியாவில் ரூ. 79.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பாகும். அதுவே, சுரேஷ் கோபி வாங்கிய காரின் மதிப்பைப் பார்த்தோமேயானால் ரூ. 79.99 லட்சமாக உள்ளது. இது கேரளா எக்ஸ்-ஷோரூம் விலை. வரி விதிப்பு வித்தியாசங்களின் காரணமாக விலையிலும் மாநிலங்களுக்கு மாநிலம் வித்தியாசம் காணப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Malayalam Actor Suresh Gopi Bought Toyota Vellfire MPV. Read in Tamil.
Story first published: Friday, June 19, 2020, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X