2.65 கோடி ரூபா காரை அடுத்து இன்னொரு விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

சொகுசு கப்பலின் மறு உருவமாக பார்க்கப்படும் டொயோட்டா வெல்ஃபெயரை பிரபல நடிகையின் கணவர் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் யார் என்பதைக் கீழே காணலாம்.

2.65 கோடி ரூபா காரை அடுத்து இன்னொரு விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

டொயோட்டா நிறுவனத்தின் மிகவும் காஸ்ட்லியான காராக வெல்ஃபயர் மாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது. அதிக ஆடம்பர வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கும் இக்காரை இந்தியாவில் ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

2.65 கோடி ரூபா காரை அடுத்து இன்னொரு விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

அதில் மலையாள நடிகர் மோகன்லால் ஒருவரும் ஆவார். இவரைத் தொடர்ந்து மற்றுமொரு மலையாள நடிகரும் அண்மையில் இக்காரை வங்கினார். சுரேஷ் கோபி, இவரே சமீபத்தில் இக்காரை வங்கியவர் ஆவார். இதேபோன்று தெலங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான நாகர்ஜூனாவும் இக்காரை தனது சொகுசு பயணங்களுக்காக அண்மையில் வாங்கினார்.

2.65 கோடி ரூபா காரை அடுத்து இன்னொரு விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இவர்களின் வரிசையில் மற்றுமொரு பிரபல நடிகர் இணைந்திருக்கின்றார். ஆமாங்க, பிரபல நடிகை நஸ்ரியாவின் கணவரும், மலையாள நடிகருமான பஹத் பாஸில், இவரே டொயோட்டா வெல்ஃபயர் காரை தற்போது புதிதாக வாங்கியவர் ஆவார். மிக சமீபத்தில் தான் ரூ. 2.65 கோடி மதிப்புள்ள போர்ஷே கரேரா எஸ் காரை அவர் வாங்கியிருந்தார்.

2.65 கோடி ரூபா காரை அடுத்து இன்னொரு விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இதனைத்தொடர்ந்து, மற்றுமொரு ஆடம்பர வசதிக் கொண்ட காராக டொயோட்டா வெல்ஃபயர் மாடலை வங்கியிருக்கின்றார். இக்கார் இந்தியாவில் சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. இப்படியான விலையுயர்ந்த காரையே ஃபஹத் பாஸில் தற்போது தன்னுடைய குடும்பத்தின் சொகுசான பயணத்திற்காக வாங்கியிருக்கின்றார்.

2.65 கோடி ரூபா காரை அடுத்து இன்னொரு விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இக்காரை சாலையில் மிதக்கும் கப்பல் என்றே பலர் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கேற்ப எக்கசக்க சொகுசு வசதிகளுடன் இக்கார் விற்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இதன் இருக்கைகள் எண்ணற்ற சொகுசு வசதிகளை உள்ளடக்கியிருக்கின்றது. இதனை இருக்கையாக மட்டுமின்றி மெத்தைப் போன்றும் சாய்த்துக் கொள்ள முடியும். ஆகையால், காரில் வெகு நீண்ட தூரம் பயணித்தைகூட களைப்புகளின்றி சௌகரியமாக மேற்கொள்ள முடியும்.

2.65 கோடி ரூபா காரை அடுத்து இன்னொரு விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இத்துடன், பொழுதுபோக்கு வசதிகளாக சிறிய தொலைக்காட்சி பெட்டி, மியூசிக் சிஸ்டம், மன நிலைக்கு ஏற்ப ஒளிரக் கூடிய மின் விளக்குகள் மற்றும் மியூசிக் சிஸ்டம் உள்ளிட்டவை இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, சிறப்பு தொழில்நுட்ப வசதிகளாக மூன்று விதமான க்ளைமேட் கன்ட்ரோல், சன் ரூஃப், மினி ஃபிரிட்ஜ் போன்ற பல்வேறு பிரீமியம் அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

2.65 கோடி ரூபா காரை அடுத்து இன்னொரு விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இதுபோன்ற எக்கசக்க சொகுசு வசதிகளை இக்கார் தாங்கியிருக்கின்ற காரணத்தினாலயே தொழிலதிபர்களின் விருப்பமான காராக இது மாறியிருக்கின்றது. மேலும், திரை நட்சத்திரங்களின் விருப்பமான காராகவும் மாறி வருகின்றது.

2.65 கோடி ரூபா காரை அடுத்து இன்னொரு விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இக்காரில் வழங்கப்பட்டிருக்கக் கூடிய மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதன் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் ஆகும். இந்த வசதியை டொயோட்டா வெல்ஃபயர் பெற்றிருக்கின்ற காரணத்தினால் இது எரிபொருள் எஞ்ஜின் மற்றும் மின் மோட்டாரின் மூலமும் இயங்கும். இதுவும் இக்காரில் இடம்பெற்றிருக்கும் மிக சிறந்த வசதியாக இருக்கின்றது.

2.65 கோடி ரூபா காரை அடுத்து இன்னொரு விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகர்... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இக்காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 198 என்எம் டார்க்கை திறனையும் வெளிப்படுத்தக் கூடியது. இதன் மின் மோட்டார் 141 பிஎச்பி பவரையும், 67 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தக்கூடியது. இவையிரண்டும் இணைந்து காரின் அனைத்து வீல்களுக்கும் இயங்கும் திறனை வழங்குகின்றன. இதன் மைலேஜ், பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு 16.35 கிமீ ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mallu Actor Fahadh Faasil Buys Brand New Toyota Vellfire Luxury MPV. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X