வளர்ப்பு நாயுடன் வந்து புதிய காரை வாங்கிய நடிகை... யார் அவர்? என்ன விலையில் காரை வாங்கியிருக்கார்னு தெரியுமா?

பிரபல மலையாள நடிகை ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் வந்து காரை வங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த சிறப்பு தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வளர்ப்பு நாயுடன் வந்து புதிய காரை வாங்கிய நடிகை... யார் அவர்? என்ன விலையில் காரை வாங்கியிருக்கார்னு தெரியுமா?

கியா நிறுவனம், அதன் செல்டோஸ் காரின் ஒரு வருடத்தைக் கொண்டாடும் விதமாக இந்த மாடலின் சிறப்பு பதிப்பு ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஆண்டுவிழா பதிப்பு (Anniversary Edition) எனும் பெயரில் அக்கார் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது.

வளர்ப்பு நாயுடன் வந்து புதிய காரை வாங்கிய நடிகை... யார் அவர்? என்ன விலையில் காரை வாங்கியிருக்கார்னு தெரியுமா?

செல்டோஸ் எஸ்யூவி காரைக் கொண்டே கியா நிறுவனம் அதன் கால் தடத்தை இந்தியாவில் பதித்திருந்தது. இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, நல்ல வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த காராகவும் இது இருக்கின்றது.

வளர்ப்பு நாயுடன் வந்து புதிய காரை வாங்கிய நடிகை... யார் அவர்? என்ன விலையில் காரை வாங்கியிருக்கார்னு தெரியுமா?

எனவேதான் இக்காரை சிறப்பிக்கும் விதமாக கியா நிறுவனம் செல்டோஸ் எஸ்யூவியின் ஆண்டுவிழா பதிப்பை இந்தியாவில் அண்மையில் அறிமுகப்படுத்தியது. இக்காரை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்க அது திட்டமிட்டுள்ளது. செல்டோஸ் எஸ்யூவியின் எச்டிஎக்ஸ் வேரியண்டை தழுவியே இச்சிறப்பு பதிப்பு காரை கியா அறிமுகம் செய்திருக்கின்றது.

வளர்ப்பு நாயுடன் வந்து புதிய காரை வாங்கிய நடிகை... யார் அவர்? என்ன விலையில் காரை வாங்கியிருக்கார்னு தெரியுமா?

இந்த சிறப்பு பதிப்பு காரையே பிரபல நடிகை ஒருவர் புதிதாக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறந்த நடிப்பிற்கான விருதைப் பெற்ற மலையாள நடிகை ரஜிஷா விஜயன், இவரே கியாவின் சிறப்பு பதிப்பு காரை வாங்கியவர் ஆவார். மலையாள உலகில் தனது சிறந்த நடிப்பின் மூலம் ரசிக பட்டாளத்தைக் குவித்து வரும் இந்த நடிகை, அனுராகா கரிக்கின்வேலம் (Anuraga Karikkinvellam) எனும் மலையாள படத்திற்காகவே சிறந்த நடிகை எனும் விருதைப் பெற்றார்.

வளர்ப்பு நாயுடன் வந்து புதிய காரை வாங்கிய நடிகை... யார் அவர்? என்ன விலையில் காரை வாங்கியிருக்கார்னு தெரியுமா?

இவர் திரை நடிகையாக மட்டுமின்றி பிரபல டிவி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் ஆவார். இவரே தனது பயணத்திற்காக புதிய கியா செல்டோஸ் ஆண்டுவிழா பதிப்பு காரை வாங்கியிருக்கின்றார். இவர் வாங்கியிருக்கும் காரின் துள்ளியமான விலை அதிகாரப்பூர்வமாக தெரியவரவில்லை.

வளர்ப்பு நாயுடன் வந்து புதிய காரை வாங்கிய நடிகை... யார் அவர்? என்ன விலையில் காரை வாங்கியிருக்கார்னு தெரியுமா?

ஆனால், கியா நிறுவனம் செல்டோஸ் வரிசையில் இருக்கும் கார்களை ரூ. 13.75 லட்சத்தில் இருந்து ரூ. 14.85 லட்சம் வரையிலான விலையில் விற்பனைச் செய்து வருகின்றது. ரஜிஷா புதிதாக களமிறக்கியிருக்கும் ஆண்டுவிழா பதிப்பு செல்டோஸ் கார், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இக்கார் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் ஆகிய இருவிதமான கியர்பாக்ஸ் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

வளர்ப்பு நாயுடன் வந்து புதிய காரை வாங்கிய நடிகை... யார் அவர்? என்ன விலையில் காரை வாங்கியிருக்கார்னு தெரியுமா?

இது ஓர் சிறப்பு பதிப்பு கார் என்பதால் வழக்கமான செல்டோஸ் காரைக் காட்டிலும் ரூ. 30 ஆயிரம் கூடுதல் விலையில் இது விற்கப்பட்டு வருகின்றது. விலையைப் போலவே தோற்றத்திலும் சில மாறுதல்களை இக்கார் பெற்றிருக்கின்றது. முன் மற்றும் பின்பக்கத்தில் புதிய டிசைனிலான பம்பர்களை இது பெற்றிருக்கின்றது. லிமிடெட் எடிசன் என்பதை பிரதிபலிக்கின்ற வகையில் இந்த மாற்றம் அமைந்துள்ளது.

வளர்ப்பு நாயுடன் வந்து புதிய காரை வாங்கிய நடிகை... யார் அவர்? என்ன விலையில் காரை வாங்கியிருக்கார்னு தெரியுமா?

இத்துடன், ஆண்டுவிழா பதிப்பு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சிறப்பு பேட்ஜ்கள் காரின் முன்பக்க க்ரில் மற்றும் பின் பகுதியில் கியா சேர்த்திருக்கின்றது. மேலும், ஒட்டுமொத்த காருக்கும் கருப்பு நிறத்தை பிரத்யேக வண்ணமாக கியா வழங்கியிருக்கின்றது. இத்துடன், பக்கவாட்டு பகுதியில் ஸ்கிட் பிளேட், புதிய ஸ்டைலிலான மூடுபனி விளக்கு உள்ளிட்டவற்றையும் அது சேர்த்திருக்கின்றன.

வளர்ப்பு நாயுடன் வந்து புதிய காரை வாங்கிய நடிகை... யார் அவர்? என்ன விலையில் காரை வாங்கியிருக்கார்னு தெரியுமா?

இதுபோன்ற எக்கசக்க சிறப்பு அணிகலன்களை ஸ்பெஷல் எடிசன் செல்டோஸ் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், எஞ்ஜின் விஷயத்தில் எந்த மாற்றத்தையும் இது பெறவில்லை. மேலே நாம் கூறியதைப் போல் செல்டோஸ் காரின் எச்டிஎக்ஸ் ட்ரிம்மில் கிடைக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளே இதில் வழங்கப்படுகின்றது. இவ்விரு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷனிலும், பெட்ரோல் என்ஜினில் மட்டும் கூடுதலாக சிவிடி கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mallu Actress Rajisha Vijayan Takes Delivery Kia Seltos Anniversary Edition. Read In Tamil.
Story first published: Saturday, December 19, 2020, 19:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X