கார் பானெட்மீது விழுந்த போலீஸ்! துணிச்சலாக காரை ஓட்டிய டிரைவர்... வீடியோவ பாக்குறப்பவே பதறுது..!

பார்ப்போரை அதிர்ச்சியில் உறைய வைக்கின்ற வகையில் ஓர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

போலீஸ்காரர் என்றும் பாராமல் துணிச்சலாக கார் டிரைவர் செய்த காரியம்... வீடியோவ பாக்குறப்பவே பதறுது!!

பார்ப்போரை பதற வைக்கின்ற வகையிலான வீடியோக் காட்சி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் கார் பானெட் மீது விழுந்திருப்பதைப் போன்றும், இருப்பினும், கார் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் செல்வதைப் போன்றும் காட்சிகள் அமைந்திருக்கின்றன.

போலீஸ்காரர் என்றும் பாராமல் துணிச்சலாக கார் டிரைவர் செய்த காரியம்... வீடியோவ பாக்குறப்பவே பதறுது!!

கார் பானெட் விழுந்திருந்தது ஓர் போக்குவரத்து காவலர் ஆவார். பணியில் இருந்தபோது வாகன ஓட்டி மற்றும் போலீஸார் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் அரங்கேறிய இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ்காரர் என்றும் பாராமல் துணிச்சலாக கார் டிரைவர் செய்த காரியம்... வீடியோவ பாக்குறப்பவே பதறுது!!

போக்குவரத்து போலீஸாருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டிய ஓட்டுநரை போலீஸார் தற்போது கைது செய்திருக்கின்றனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பதாக இந்தியா.காம் எனும் புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆங்கில செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

போலீஸ்காரர் என்றும் பாராமல் துணிச்சலாக கார் டிரைவர் செய்த காரியம்... வீடியோவ பாக்குறப்பவே பதறுது!!

போலீஸ்-வாகன ஓட்டி இடையே மோதல் ஏற்படுவதற்கு வாகன ஓட்டி மாஸ்க் அணியாமல் வந்ததே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதுகுறித்த எழுந்த வாக்குவாதத்தினாலயே கார் ஓட்டுநர் போலீஸார் மீது கடும் ஆத்திரமடைந்திருக்கின்றார். இருவருக்கு இடையே என்ன வாக்குவாதம் ஏற்பட்டது என்பது பற்றிய தகவல் தெரியவில்லை.

போலீஸ்காரர் என்றும் பாராமல் துணிச்சலாக கார் டிரைவர் செய்த காரியம்... வீடியோவ பாக்குறப்பவே பதறுது!!

இருப்பினும், வாக்குவாத்தின் இறுதியாக இருவரிடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே கார் ஓட்டுநர் அங்கிருந்த நழுவ முற்பட்டுள்ளார். ஆனால், காரை செல்ல அனுமதிக்காத போலீஸார், அதன் பான்னெட்டின் மீது விழுந்தார். இதனைச் சற்றும் பொருட்படுத்திக் கொள்ள கார் டிரைவர் போலீஸ்காரரை அப்படியே வைத்துக் கொண்டு சில நூறு மீட்டர்கள் பயணித்தார்.

போலீஸ்காரர் என்றும் பாராமல் துணிச்சலாக கார் டிரைவர் செய்த காரியம்... வீடியோவ பாக்குறப்பவே பதறுது!!

இடையில், இருசக்கர வாகன ஓட்டிகள் மறித்தும் அவர் நிற்கவில்லை. இருப்பினும், பொதுமக்கள் மற்றும் போலீஸார் சிலரின் விடா முயற்சியைத் தொடர்ந்து கார் நிறுத்தப்பட்டு போலீஸ்காரர் பத்திரமாக மீட்டக்கப்பட்டிருக்கின்றார். இதில், போக்குவரத்து காவலருக்கு லேசாக காலில் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிர்ஷ்டவசமாக மற்றவர் யாருக்கும் எந்த ஆபத்தும் நேரவில்லை. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் விதமாக மாஸ்க் அணிவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இருசக்கர வாகனம், கார் என எதில் பயணித்தாலும், குறிப்பாக வெளியே வந்தாலே மாஸ்க் அணிந்தே வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

போலீஸ்காரர் என்றும் பாராமல் துணிச்சலாக கார் டிரைவர் செய்த காரியம்... வீடியோவ பாக்குறப்பவே பதறுது!!

ஏன், தனி நபராக வாகனத்தில் பயணத்தாலும்கூட மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே மாஸ்க் அணியாத வாகன ஓட்டிக்கும், போக்குவரத்து போலீஸாரும் மாஸ்க் மோதல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டியின் இந்த அத்துமீறல் செயலுக்கு புனே வாசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ்காரர் என்றும் பாராமல் துணிச்சலாக கார் டிரைவர் செய்த காரியம்... வீடியோவ பாக்குறப்பவே பதறுது!!

விதிமீறலில் ஈடுபட்ட அந்த வாகன ஓட்டியின் பெயர் யுவராஜ் ஹனுவேட் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவரை கைது செய்த சின்ச்வாட் காவல்நிலை போலீஸார், அவர் மீது இந்திய ஐபிசி பிரிவு 307, 353, 323, 279 மற்றும் 24(ஏ), 177 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலீஸ்காரர் என்றும் பாராமல் துணிச்சலாக கார் டிரைவர் செய்த காரியம்... வீடியோவ பாக்குறப்பவே பதறுது!!

இதேபோன்றதொரு சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியிலும் அரங்கேறியது. அதிலும், பானெட் மீது விழுந்த போலீஸாரை கார் டிரைவர் பல நூறு மீட்டர்களுக்கு இழுத்துச் சென்றிருந்தார். இந்த சம்பவத்திலும் கார் ஓட்டுநர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

போலீஸ்காரர் என்றும் பாராமல் துணிச்சலாக கார் டிரைவர் செய்த காரியம்... வீடியோவ பாக்குறப்பவே பதறுது!!

போக்குவரத்து விதிமீறல்கள் காரணமாக நாள்தோறும் ஆயிரக் கணக்கில் விபத்துகளும், அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவேதான் போலீஸார் கடந்த காலங்களைக் காட்டிலும் மிக கடுமையான நடவடிக்கைகளை விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு எடுத்து வருகின்றனர். இம்மாதிரியான சூழ்நிலையிலேயே மக்களை உறைய வைக்கின்ற சம்பவம் புனேவில் அரங்கேறியிருக்கின்றது.

8 முதல் 11 வரையிலான புகைப்படங்கள் அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Man Drags Traffic Police on Car Bonnet. Read In Tamil.
Story first published: Friday, November 6, 2020, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X