காவலர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்... எதற்காக தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

இளைஞர் ஒருவர் போலீஸாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

காவலர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்... எதற்காக தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

அதிகம் போக்குவரத்து விதிமீறல்கள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. இதில் மட்டுமின்றி அதிகம் விபத்துகள் அரங்கேறும் நாடுகளின் பட்டியலிலும் இந்தியா முதன்மை நாடுகளில் ஒன்றாக இருக்கின்றது.

மேலும், நாளுக்கு நாள் இந்த விபத்துகளின் விகிதம் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இவ்வாறு, விபத்துகள் அதிகரிப்பதற்கு போக்குவரத்து விதிமீறல்களே முக்கிய காரணியாக உள்ளது.

காவலர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்... எதற்காக தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

ஆகையால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையிலான பல்வேறு நடவடிக்கைகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக, இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் நோக்கில் புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தில், முன்பெப்போதும் இல்லாத அளவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் மிக கடுமையாக உயர்த்தப்பட்டது.

காவலர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்... எதற்காக தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

இருப்பினும், விதிமீறல்கள் குறைந்தபாடில்லை. இதனை வெளிப்படுத்தும் நாள்தோறும் நாள்தோறும் வாகனம் சார்ந்து வெளிவரும் செய்திகள் இருக்கின்றன. ஆகையால், ஒவ்வொரு மாநிலத்திலும் போலீஸார் வாகன தணிக்கை மூலம் போக்குவரத்து விதமீறல் வாகன ஓட்டிகளை கலையெடுத்து வருகின்றனர்.

காவலர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்... எதற்காக தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

குறிப்பாக, வாகன தணிக்கையின் மூலம் வாகனங்களின் ஆவணம், ஓட்டுநர் உரிமம், சந்தைக்கு பிறகான அக்ஸசெரீஸ்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காவலர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்... எதற்காக தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

அதேசமயம், சில நேரங்களில் வித்தியாசமான விதிமீறல்களுக்கும் போலீஸார் வாகன ஓட்டிகள்மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையிலான, ஓர் சம்பவம்தான் தற்போது உத்தரபிரதேசத்தின், மீரட் பகுதியில் அரங்கேறியிருக்கின்றது.

அப்படியென்ன என்ன நடந்தது என்றுதானே கேட்கிறீர்கள்.. வாருங்கள் அதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக பார்க்கலாம்...

காவலர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்... எதற்காக தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

மீரட்டை எல்லைப் பகுதியாகக் கொண்ட காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மருத்துவ கல்லூரி முன்பாக வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வெள்ளை நிறத்தில் வந்த ஹூண்டாய் வெர்னா காரில் ஃபேன்சி நம்பர் பிளேட் இருப்பதைக் கண்டனர்.

காவலர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்... எதற்காக தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

அந்த நம்பர் பிளேட்டில் 'ராம்' என இந்தி எண் உருக்களைக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. இதுபோன்ற, ஃபேன்சி நம்பர் பிளேட்டை வாகனத்தில் பயன்படுத்துவது மோட்டார் வாகன சட்டப்படி குற்றமாகும்.

காவலர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்... எதற்காக தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

உபி சம்பவத்தின் புகைப்படம்

இதை உணர்த்த வேண்டுமென்பதற்காக வாகனத்தை தடுத்து நிறுத்திய போலீஸார், வாகனத்திற்கான ஆவணங்களை கேட்டனர். தொடர்ந்து, வாகனத்தில் ஃபேன்சி நம்பர் பிளேட் பயன்படுத்தியிருப்பதைப் பற்றிய கேள்வியையும் முன் வைத்தனர். ஆனால், அதற்கு எந்தவிதமான பதிலும் வாகன ஓட்டிகள் தரப்பில் அளிக்கவில்லை.

இதையடுத்து, இந்தி எண்ணுருக்களால் எழுதப்பட்டிருந்த நம்பர் பிளேட்டை அகற்றுமாறு உத்தரவிட்டனர்.

காவலர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்... எதற்காக தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

ஆனால், வாகன ஓட்டிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ராம் என்ற இந்த எழுத்தை அடங்கிய எண்ணுருக்களைப் பெறுவதற்காக ரூ. 31 ஆயிரம் செலவு செய்திருப்பதாகவும். ஆகையால், எங்களால் இதை நீக்க முடியாதும் என்றும் போலீஸாரிடம் மிகவும் ஆணித் தரமாக தெரிவித்தனர்.

காவலர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்... எதற்காக தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

மேலும், இது கடவுளின் பெயர் ராமை குறிக்கும் வகையில் தாங்கள் வாங்கியிருப்பதால் ஒருபோதும் எங்களால் நீக்க முடியாது. வேண்டுமென்றால் அபராதத்தைச் செலுத்துவிடுகிறோம் என மிகவும் தீர்க்கமாக கூறினர்.

இதனால், சற்றே அதிர்ந்துபோன போலீஸார் ஃபேன்சி நம்பர் பிளேட் பயன்படுத்தி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ரூ. 300க்கான அபராத செல்லாணை வாகன ஓட்டிக்கு வழங்கியுள்ளனர்.

காவலர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்... எதற்காக தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

போலீஸாரிடம் முரண்டுபிடித்து வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சில மணி நேரங்கள் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அபராதச் செல்லாணை வழங்கி வாகன ஓட்டிகளைச் செல்ல அனுமதித்தால் பரபரப்பு சூழ்நிலை தணிந்து காணப்பட்டது.

காவலர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்... எதற்காக தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

எண்ணுருக்கள் படிக்க மிகவும் கடினமாக இருப்பதன் காரணத்தினால் அதைப் பயன்படுத்த இந்திய மோட்டார் வாகன சட்டம் அனுமதிப்பதில்லை. மேலும், ஒரு மாநிலத்தவர்களுக்கு மட்டுமே அறிந்துகொள்ள முடிகின்ற எண்ணுருக்களை கொண்ட வாகனம் மற்ற மாநிலத்தில் பயன்படுத்தும்போது, அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அந்த எண்களை அடையாளம் காண்பதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகின்றது.

காவலர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்... எதற்காக தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

இந்த காரணத்திற்காகவே சொந்த மொழிலான எண்ணுருக்களைப் பயன்படுத்துவதை போலீஸார் கடுமையாக தவிர்க்க முற்படுகின்றனர். இத்துடன், ஸ்டைலான வடிவத்தைக் கொண்ட எண்களையும் நம்பர் பிளேட்டில் பயன்படுத்த போக்குவரத்து விதி அனுமதிப்பதில்லை.

இதேபோன்று, நம்பர் பிளேட்டில் பதிவெண்களை தவிர வெறெந்த ஸ்டிக்கரையும் பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டிருக்கின்றது.

காவலர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்... எதற்காக தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

இந்த போக்குவரத்து நாட்டில் இயங்கும் அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும். இருப்பினும், சில முறைகேடு வாகன ஓட்டிகள் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவதுடன், போலீஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு, போக்குவரத்து விதிமீறல்களுக்காக போலீஸார் வாகன ஓட்டிகள் வாக்குவாதம் செய்வது முதல் முறையல்ல. இதற்கு முன்பாகவும் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: 8வது புகைப்படத்தைத் தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை..

More from DriveSpark

Article Published On: Wednesday, March 11, 2020, 18:20 [IST]
English summary
Man Refuses To Remove Fancy Number & Argues With Cops. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+