மான்ஸ்டராக உருமாறிய இந்தியர்களின் ஃபேவரிட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிக்க முடிகிறதா? வீடியோ!

இந்தியர்களின் ஃபேவரிட் கார் ஒன்று தற்போது மான்ஸ்டர் தோற்றத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

மான்ஸ்டராக உருமாறிய இந்தியர்களின் ஃபேவரிட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிக்க முடிகிறதா? வீடியோ!

அண்மைக் காலங்களாக இந்தியாவில் வாகன மாடிஃபிகேஷன் சம்பவங்கள் அதிகமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதிலும், கடந்த சில நாட்களாக இந்தியர்களின் ஃபேவரிட் காரான மாருதி 800 கார் அதிகமாக மாடிஃபை செய்வதை இந்திய ஆட்டோமொபல்ஸ்துறையும், வாகனச் செய்தித்துறையும் சந்தித்து வருகின்றது.

மான்ஸ்டராக உருமாறிய இந்தியர்களின் ஃபேவரிட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிக்க முடிகிறதா? வீடியோ!

அந்தவகையில், மிகவும் சாதுவான தோற்றத்தில் இருந்த மாருதி 800 கார் மான்ஸ்டர் தோற்றத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டிருப்பதைப் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

வழக்கமான தோற்றத்தில் இருக்கும் ஓர் காருக்கு மான்ஸ்டர் தோற்றம் வழங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஏனென்றால், புது அவதாரத்திற்கு மாறும் கார் அந்த தோற்றத்திற்கு ஏற்ப அனைத்து வசதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

மான்ஸ்டராக உருமாறிய இந்தியர்களின் ஃபேவரிட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிக்க முடிகிறதா? வீடியோ!

அப்படியிருந்தால் மட்டுமே அதனை புதிய உருவத்திற்கு அப்கிரேட் செய்ய முடியும். இல்லையெனில் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். ஆனால், மாருதி 800 அனைத்து உருவத்தையும் உள் வாங்கும் திறனைக் கொண்டதாக இருக்கின்றது. இதனை, கடந்த உருமாற்ற நிகழ்வுகளுடன் ஒப்பிட்டே நாங்கள் கூறுகின்றோம். ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிராக்டர் டயரைக் கொண்டும் இயங்கும் காராகவும் அது உருமாறியிருந்தது.

மான்ஸ்டராக உருமாறிய இந்தியர்களின் ஃபேவரிட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிக்க முடிகிறதா? வீடியோ!

மாருதி 800 முன் பக்க வீல் இயக்கம் கொண்ட கார் என்பதால் அனைத்தையும் எளிதில் பற்றிக் கொள்கின்றது. அதுமட்டுமின்றி ஏராளமான உருமாற்றத்தைப் பெறும் வகையில் அதன் கட்டமைப்பு உள்ளது. இதனால்தான் மாருதி 800 காரை மாடிஃபை செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.

தற்போதைய மான்ஸ்டர் தோற்றத்திற்காக பல்வேறு இழப்புகளைச் சந்தித்திருக்கின்றது மாருதி 800.

மான்ஸ்டராக உருமாறிய இந்தியர்களின் ஃபேவரிட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிக்க முடிகிறதா? வீடியோ!

குறிப்பாக, காரின் அடி பகுதி முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, மாருதி 800 காரை ஓர் மான்ஸ்டராக தோற்றுவிக்கும் வகையில் வீல்கள் ஒன்றிணைந்து காணப்படும் காரின் கேபின் பகுதி ஒரு சில அடிக்கு மேலே உயர்த்தப்ப்பட்டுள்ளது. எனவே, அதன் சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் என அனைத்தும் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, அமைப்பிலும் லேசான மாற்றத்தை வழங்கியிருக்கின்றது மாடிஃபிகேஷன் குழு.

மான்ஸ்டராக உருமாறிய இந்தியர்களின் ஃபேவரிட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிக்க முடிகிறதா? வீடியோ!

இந்த மாடிஃபிகேஷன் குழு ஓர் கோவா மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள்தான் தற்போது மாற்றம் செய்யப்பட்டிருக்கும் மாருதி 800 கார்குறித்த வீடியோவினை யுடியூபில் பதிவேற்றம் செய்திருக்கின்றனர். இதற்காக பேங்க்ஸ் கஸ்டம் என்ற யுடியூப் சேனலை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதில், காரின் ஒட்டுமொத்த உருமாற்றம் மற்றும் இயக்கம் பற்றிய வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாருதி 800 கார், உருமாற்றத்தைப் பெற்றிருப்பதால் எஞ்ஜின் மற்றும் சஸ்பென்ஷன் போன்றவை வெளிப்படையாக தெரிகிறது. இது பார்வையாளர்களுக்கு சுவாரஷ்யமான தோற்றத்தை வழங்கும் வகையில் உள்ளது. இதற்காக, நீளம் கூட்டப்பட்டட காய்ல் ஸ்பிரிங்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது நீர் நிறைந்த மற்றும் அதிக பள்ளம், மேடுகள் நிறைந்த சாலையிலும் சுலபமாக செல்லும்.

மான்ஸ்டராக உருமாறிய இந்தியர்களின் ஃபேவரிட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிக்க முடிகிறதா? வீடியோ!

மாருதி 800 காரின் உருமாற்றத்தைத் தொடர்ந்து அதன் எஞ்ஜினும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜிப்ஸி எஸ்யூவிக்களில் பயன்படுத்தப்படும் எஞ்ஜின் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இது, மாருதி 800 காரின் உண்மையான எஞ்ஜினைக் காட்டிலும் அதிக திறனை வெளிப்படுத்த உதவும். இதுமட்டுமின்றி திறனை மேலும் அதிகரிப்பதற்காக கூடுதல் பெர்ஃபார்மென்ஸ் பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

மான்ஸ்டராக உருமாறிய இந்தியர்களின் ஃபேவரிட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிக்க முடிகிறதா? வீடியோ!

அதுமட்டுமின்றி, எஞ்ஜினை விரைவில் கூலாக்குவதற்காக ஆஃப்டர் மார்க்கெட் எக்சாஸ்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வழக்கமான எக்சாஸ்ட் சிஸ்டத்தை அதிக செயல்திறன் கொண்டதாகும். இதுபோன்ற அனைத்து மாற்றங்களாலும் மாருதி 800 மான்ஸ்டர் கார் 4X4 சிஸ்டம் கொண்ட எஸ்யூவி காரைப் போன்று மாறியிருக்கின்றது.

மான்ஸ்டராக உருமாறிய இந்தியர்களின் ஃபேவரிட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிக்க முடிகிறதா? வீடியோ!

இதைத்தொடர்ந்து, எந்த சாலையையும் சமாளிக்கின்ற வகையில் 30 இன்ச் ஆஃப்டர் மார்க்கெட் வீல் மற்றும் டயர்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இது தரையில் இருந்து 580 மிமீ உயரமாக இருக்க உதவுகின்றது. இதனால் எந்தவொரு தடையையும் மிகவும் அசால்டாக கடக்கும் திறன் இக்காருக்கு கிடைத்துள்ளது. இதுமட்டுமின்றி, முன் புறத்தில் ஆறு மின் விளக்குகள் மற்றும் ஹெல்லா மூடு பனி மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

மான்ஸ்டராக உருமாறிய இந்தியர்களின் ஃபேவரிட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிக்க முடிகிறதா? வீடியோ!

இந்த ஒட்டுமொத்த மாற்றத்தையும் வழங்குவதற்கு மாடிஃபிகேஷன் குழு அதிகபட்சமாக 3 மாதங்களை செலவிட்டுள்ளது. மேலும், இதற்காக 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்படதாகவும் கூறப்படுகின்றது. இந்த அதிகபட்ச செலவு காரின் வெளிப்புறத் தோற்றத்திற்கு மட்டுமின்றி உட்புற மாற்றத்திற்கும் செய்யப்பட்டதாக உள்ளது.

மான்ஸ்டராக உருமாறிய இந்தியர்களின் ஃபேவரிட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிக்க முடிகிறதா? வீடியோ!

அதாவது, மாருதி 800 காரின் வெளிப்புறத்தை எப்படி முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதோ, அதேபோன்று இன்டீரியரிலும் ஸ்போர்ட்டி லுக்கை வழங்குகின்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, சாதாரண தோற்றம் கொண்ட மாருதி 800 தற்போது முற்றிலும் ஆக்ரோஷமான மான்ஸ்டர் வாகனமாக மாறியிருக்கின்றது.

Most Read Articles

English summary
Maruti 800 Converted Into Off-Road Monster
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X