மில்லியனில் மிரட்டும் மாருதி ஆல்ட்டோ.. தொடர்ந்து 16 ஆண்டுகளாக விற்பனையில் நம்பர்-1

கடும் சந்தைப் போட்டிக்கு மத்தியிலும் மாருதி ஆல்ட்டோ கார் 16 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தை பிடித்து சாதித்து வருகிறது. இதுவரை யாரும் எட்ட முடியாத அளவுக்கு விற்பனை எண்ணிக்கையிலும் றெக்கை கட்டி பறந்து வருகிறது.

மில்லியனில் மிரட்டும் மாருதி ஆல்ட்டோ... 16 ஆண்டுகளாக தொடர்ந்து நம்பர்-1

இந்தியாவின் பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மாருதி ஆல்ட்டோ கார் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. அடக்கமான வடிவமைப்பு, அதிக மைலேஜ், மிக குறைவான விலை என்பதுடன், மாருதி கார் நிறுவனத்தின் பெரிய அளவிலான விற்பனைக்கு பிந்தைய கட்டமைப்பு மற்றும் சேவை தரம் மாருதி ஆல்ட்டோ காருக்கு பக்கபலமாக இருந்து வருகிறது.

மில்லியனில் மிரட்டும் மாருதி ஆல்ட்டோ... 16 ஆண்டுகளாக தொடர்ந்து நம்பர்-1

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மிக கச்சிதமாக பூர்த்தி செய்து வருவதால், பல புதிய கார் மாடல்கள் வந்தாலும், ஆல்ட்டோவின் இடத்தை அசைக்க முடியவில்லை. இதனால், கடந்த 16 ஆண்டுகளாக விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 என்ற அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

மில்லியனில் மிரட்டும் மாருதி ஆல்ட்டோ... 16 ஆண்டுகளாக தொடர்ந்து நம்பர்-1

முதல்முறை கார் வாங்குவோரின் முதல் சாய்ஸாக இருந்து வரும் ஆல்ட்டோ கார் இதுவரை 39 லட்சம் யூனிட்டுகள் என்ற இமாலய விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வியக்க வைத்துள்ளது. உலகிலேயே அதிகம் விற்பனையான கார் மாடல்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.

மில்லியனில் மிரட்டும் மாருதி ஆல்ட்டோ... 16 ஆண்டுகளாக தொடர்ந்து நம்பர்-1

கடந்த 2000ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் 2004ம் ஆண்டு முதல் விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 கார் மாடலாக இருந்து வருகிறது. 2008ம் ஆண்டில் 1 மில்லியன் யூனிட்டுகள் என்ற விற்பனையை தொட்டு சாதனை படைத்தது.

மில்லியனில் மிரட்டும் மாருதி ஆல்ட்டோ... 16 ஆண்டுகளாக தொடர்ந்து நம்பர்-1

அதைத்தொடர்ந்து, 2012ம் ஆண்டு 2 மில்லியன் யூனிட்டுகள் விற்பனை சாதனையையும், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 3.8 லட்சம் யூனிட்டுகள் என்ற சாதனையை தொட்டது. தற்போது வரை 3.9 மில்லியன் ஆல்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மில்லியனில் மிரட்டும் மாருதி ஆல்ட்டோ... 16 ஆண்டுகளாக தொடர்ந்து நம்பர்-1

ஆண்டுக்கு சராசரியாக 1.50 லட்சம் மாருதி ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி உள்ளன. மாருதி ஆல்ட்டோ காரின் வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளன. மிக குறைவான பராமரிப்பு செலவுடன், நாடு முழுவதும் மாருதி கார் நிறுவனத்திற்கு மிக அதிக எண்ணிக்கையில் ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் மையங்கள் உள்ளன. உதிரிபாகங்கள் விலையும் மிக குறைவாக இருப்பதும் முக்கிய காரணம்.

மில்லியனில் மிரட்டும் மாருதி ஆல்ட்டோ... 16 ஆண்டுகளாக தொடர்ந்து நம்பர்-1

மேலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போதுள்ள மாடலில் ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்படுகின்றன.

மில்லியனில் மிரட்டும் மாருதி ஆல்ட்டோ... 16 ஆண்டுகளாக தொடர்ந்து நம்பர்-1

மாருதி ஆல்ட்டோ காரில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல், சிஎன்ஜி எரிபொருள் தேர்வுகளிலும் கிடைக்கிறது.

மில்லியனில் மிரட்டும் மாருதி ஆல்ட்டோ... 16 ஆண்டுகளாக தொடர்ந்து நம்பர்-1

மாருதி ஆல்ட்டோ காரில் வழங்கப்படும் 800சிசி பெட்ரோல் எஞ்சின் 47 பிஎச்பி பவரையும், 69 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டது. லிட்டருக்கு 22.05 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆல்ட்டோ காரின் சிஎன்ஜி மாடலானது கிலோவுக்கு 31.59 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மில்லியனில் மிரட்டும் மாருதி ஆல்ட்டோ... 16 ஆண்டுகளாக தொடர்ந்து நம்பர்-1

மாருதி ஆல்ட்டோ 800 கார் ரூ.2.99 லட்சம் முதல் ரூ.4.36 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இதற்கு நேரடி போட்டியாக ரெனோ க்விட் மற்றும் டட்சன் ரெடிகோ கார்கள் உள்ளன.

Most Read Articles

English summary
Maruti Alto became India's bestselling car for the 16th consecutive year, the company said in a statement.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X