மாருதி சுஸுகி நிறுவனத்தின் குளிர்கால சர்வீஸ் முகாம்... இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன் தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனம் குளிர்கால சர்வீஸ் முகாமை தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் குளிர்கால சர்வீஸ் முகாம்... இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன் தெரியுமா?

நாடு முழுவதும் 'குளிர்கால சர்வீஸ் முகாம்' தொடங்கியிருப்பது குறித்த அறிவிப்பை இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற அனைத்து சர்வீஸ் டீலர்ஷிப்களிலும், இந்த சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் குளிர்கால சர்வீஸ் முகாம்... இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன் தெரியுமா?

இந்த சர்வீஸ் முகாம் கடந்த டிசம்பர் 9ம் தேதியே தொடங்கி விட்டது. வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி வரை சுமார் ஒரு மாத காலத்திற்கு நடைபெறவுள்ளது. குளிர்காலத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடைய கார்களுக்கு சரியான பராமரிப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சர்வீஸ் முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் குளிர்கால சர்வீஸ் முகாம்... இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன் தெரியுமா?

அத்துடன் குளிர்காலத்தில் கார்களை முறையாக பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த சர்வீஸ் முகாம் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இந்த சர்வீஸ் முகாமின் ஒரு பகுதியாக, இந்த காலகட்டத்தில் வரும் மாருதி சுஸுகி வாடிக்கையாளர்களின் கார்களுக்கு 27 வகையான விரிவான பரிசோதனைகள் வழங்கப்படும்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் குளிர்கால சர்வீஸ் முகாம்... இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன் தெரியுமா?

இதில், லைட்டிங் அமைப்பு, பேட்டரி மற்றும் பிரேக்குகள் ஆகியவற்றை பரிசோதிப்பது உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்த பரிசோதனைகள் தவிர, ஆக்ஸஸெரீஸ்கள் மற்றும் லேபர் கட்டணங்களில் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளும் வழங்கப்படவுள்ளன. இந்த சர்வீஸ் முகாமை மாருதி சுஸுகி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் குளிர்கால சர்வீஸ் முகாம்... இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன் தெரியுமா?

குளிர்காலத்தில் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் எந்தவித பிரச்னையும் இல்லாமல் சிறப்பான நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த குளிர்கால சர்வீஸ் முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாருதி சுஸுகி வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் குளிர்கால சர்வீஸ் முகாம்... இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன் தெரியுமா?

இதற்கிடையே மாருதி சுஸுகி நிறுவனம் வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்துள்ளது. ஆனால் கார்களின் விலைகள் எவ்வளவு உயரவுள்ளது? என்ற சரியான தகவலை மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் குளிர்கால சர்வீஸ் முகாம்... இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன் தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனம் மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு நிறுவனங்களும் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் கார்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளன. இதில், ஃபோர்டு, ஹூண்டாய், கியா, எம்ஜி மோட்டார், மஹிந்திரா, ரெனால்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் முக்கியமானவை. இதுதவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் விலை உயர்வை அறிவித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் குளிர்கால சர்வீஸ் முகாம்... இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன் தெரியுமா?

உற்பத்தி செலவு அதிகரித்து வரும் நிலையில், அதனை ஓரளவிற்கு ஈடுகட்டும் வகையில், வாகனங்களின் விலையை உயர்த்தவுள்ளதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பண்டிகை காலம் முடிவடைந்துள்ள சூழலில், தற்போது வாகன விற்பனை சற்றே குறைந்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு நிலையில், வாகனங்களின் விலை உயர்வதால் விற்பனை இன்னும் குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Most Read Articles

English summary
Maruti Announce Winter Service Camp. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X