மிக குறைவான வேலையில் அதிக அழகான காராக மாறிய மாருதி பலேனோ... அட்டகாசமான புகைப்படம் உள்ளே!

மாருதி பலேனோ கார் குறைந்த வேலையிலேயே அதிக கவர்ச்சியான காராக மாறியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மிக குறைவான வேலையில் அதிக அழகான காராக மாறிய மாருதி பலேனோ... அட்டகாசமான புகைப்படம் உள்ளே!

பார்ப்போரின் கண்களை ஏமாற்றும் வகையில் மாருதி பலேனோ காரின் உருவம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் வாகன விரும்பிகிளின் பிரிமியமான காராக விளங்கும் மாருதி பலேனோ ஸ்பார்ட்ஸ் கார் போன்ற மிகவும் ஸ்டைலான உருவத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றது.

மிக குறைவான வேலையில் அதிக அழகான காராக மாறிய மாருதி பலேனோ... அட்டகாசமான புகைப்படம் உள்ளே!

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் இதுவரை யாரும் கண்டிராத தோற்றத்திற்கு அக்கார் உருமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த அட்டகசமான தோற்றத்தை தனியார் வாகன மாடிஃபிகேஷன் நிறுவனத்தின் வாயிலாகவே அதன் உரிமையாளர் செய்திருக்கின்றார்.

மிக குறைவான வேலையில் அதிக அழகான காராக மாறிய மாருதி பலேனோ... அட்டகாசமான புகைப்படம் உள்ளே!

இந்த மாற்றியமைக்கப்பட்ட மாருதி பலேனோ கேரளாவைச் சேர்ந்ததாகும். அண்மைக் காலங்களாக கேரளாவில் வாகன மாடிஃபிகேஷன் கலாச்சாரம் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இதன்படி, முந்தைய கால கட்டத்தில் செய்யப்பட்டதைப் போலவே மாருதி பலேனோ கார் மாற்றமும் வாகன பிரியர்களைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது.

மிக குறைவான வேலையில் அதிக அழகான காராக மாறிய மாருதி பலேனோ... அட்டகாசமான புகைப்படம் உள்ளே!

இதில், முக்கியமானதாக இருப்பது பலேனோவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இரு நிற கலவையே ஆகும். கருப்பு மற்றும் வெள்ளை நிறம் இக்காருக்ககு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், இரு நிறங்களின் எல்லையை தெளிவுப்படுத்தும் வகையில் சிவப்பு மற்றும் சில்வர் நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இத்துடன், 09 என்ற எண் ஓட்டுநர் இருக்கை கதவின் வெளிப்புறத்தில் ஒட்டப்பட்டிருக்கின்றது.

மிக குறைவான வேலையில் அதிக அழகான காராக மாறிய மாருதி பலேனோ... அட்டகாசமான புகைப்படம் உள்ளே!

இவையே இக்காருக்கு ஸ்போர்ட்ஸ் லுக்கை வழங்கும் முதன்மையான மாற்றமாக இருக்கின்றது. இதுமட்டுமின்றி, வீல் ரிம் மற்றும் டயர் உள்ளிட்டவையும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையானதாக மாற்றப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, முன் பக்க பம்பர் மற்றும் ரேடியேட்டர் கிரில் உள்ளிட்டவையும் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

மிக குறைவான வேலையில் அதிக அழகான காராக மாறிய மாருதி பலேனோ... அட்டகாசமான புகைப்படம் உள்ளே!

இவையும் மாருதி பலேனோ காருக்கு ஸ்போர்ட்டி லுக்கை வழங்குவதில் முக்கியமான இடத்தைப் பிடிக்கின்றன. இதுதவிர ஏராளமான அம்சங்கள் இக்காருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு மிக குறைந்த வேலைபாட்டிலேயே மலையாள சேட்டன்மார்கள், இக்காருக்கு மிகவும் கவர்ச்சியான ஸ்போர்ட்ஸ் தோற்றத்தை வழங்கியிருக்கின்றனர்.

மிக குறைவான வேலையில் அதிக அழகான காராக மாறிய மாருதி பலேனோ... அட்டகாசமான புகைப்படம் உள்ளே!

வெளிப்புற தோற்றத்தைப் போலவே காரின் உட்புறத்தில் சில மாற்றங்களை அவர்கள் செய்திருக்கின்றனர். உயர் ரக ஆடியோ சிஸ்டம், கிக்கர் சப் ஊஃபர், ஹெர்ட்ஸ் எச்சிபி-4 4 சேனல் ஆம்ப், சோனி எக்ஸ்பிளோட் 2 சேனல் ஆம்ப், பயனியர் ஹெட் யூனிட், இன்ஃபினிட்டி டூர் காம்பனென்ட்ஸ் மற்றும் ஜேபிஎல் கூறுகள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருக்கின்றன.

மிக குறைவான வேலையில் அதிக அழகான காராக மாறிய மாருதி பலேனோ... அட்டகாசமான புகைப்படம் உள்ளே!

இந்த புதிய கூறுகள் சேர்ப்பை வைத்து பார்க்கையில் ஆடம்பர வசதிக்காக மட்டுமே பலேனோ மாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிய வருகின்றது. இந்த காரில் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் எஞ்ஜினே காணப்படுகின்றது. இது, அதிகபட்சமாக 75 பிஎஸ் மற்றும் 190 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். ஆனால், மாடிஃபிகேஷன் நிறுவனம் செய்த மாற்றத்தால் இது தற்போது 95 பிஎஸ் வரை வெளியேற்றும் திறனைப் பெற்றிருக்கின்றது. இக்கார் குறித்து எக்ஸைடட் டூ டிரைவ் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோவை கீழே காணலாம்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரிமியம் ரக கார்களில் மாருதி பலேனோ காரும் ஒன்று. இக்காரில் ஸ்போர்ட்ஸ் ஸ்டைல் கிடைக்காமல் இருப்பதே அதன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வருத்தமான விஷயமாக இருந்து வருகின்றது. இந்த நிலையிலேயே கேரளாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் இக்காருக்கு ஸ்போர்ட்ஸ் தோற்றம் வழங்கினால் எப்படி இருக்கும் என்பதை வெளிக் கொண்டு வரும் வகையில் புதிய மாற்றத்தைச் செய்திருக்கின்றார்.

மிக குறைவான வேலையில் அதிக அழகான காராக மாறிய மாருதி பலேனோ... அட்டகாசமான புகைப்படம் உள்ளே!

பார்ப்பதற்கு மிகச் சிறிய காராக இருந்தாலும் அதிக இட வசதியைக் கொண்டதாக பலேனோ இருக்கின்றது. எனவேதான், சில தொழிலதிபர்கள்கூட இக்காரை அதிகம் விரும்புகின்றனர். இதை பார்க் செய்வது முதல் பராமரிப்பது மிக எளிது. இந்த நிலையிலேயே கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் இக்காரை புதுமையான தோற்றத்திற்கு மாற்றியிருக்கின்றனர்.

Most Read Articles

English summary
Maruti Baleno Modified Into Sports Car. Read In Tamil.
Story first published: Wednesday, August 26, 2020, 17:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X