பிஎஸ்6 டீசல் எஞ்சினுடன் பலேனோ காரை சோதனை செய்கிறதா மாருதி?... ஆவலில் மாருதி பிரியர்கள்!

மாருதி பலேனோ காரின் டீசல் மாடல் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பதாக வெளியானத் தகவல்களும், படங்களும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

டீசல் எஞ்சினுடன் பலேனோ காரை சோதனை செய்கிறதா மாருதி?... ஆவலில் மாருதி பிரியர்கள்!

பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, டீசல் மாடல்களுக்கு முழுக்கு போட்டுவிட்டது மாருதி கார் நிறுவனம். பெட்ரோல் எஞ்சின் தேர்வை மட்டுமே தனது கார்களில் மாருதி வழங்கி வருகிறது. எனினும், ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் பிஎஸ்6 தரத்திற்கு இணையான டீசல் எஞ்சின் தேர்வை தொடர்ந்து வழங்குவதால், மாருதிக்கு நெருக்கடியும், இந்த ரகத்தில் சிறிய அளவு வர்த்தக இழப்பும் ஏற்பட்டு வருகிறது.

டீசல் எஞ்சினுடன் பலேனோ காரை சோதனை செய்கிறதா மாருதி?... ஆவலில் மாருதி பிரியர்கள்!

இதனை மனதில் வைத்து, டீசல் கார் தேர்வை தனது கார்களில் வழங்குவது குறித்து மாருதி தொடர்ந்து பரிசீலித்து வருகிறது. எனினும், குறிப்பிடத்தக்க முடிவு இன்னும் எட்டப்படாத நிலையே தொடர்கிறது.

டீசல் எஞ்சினுடன் பலேனோ காரை சோதனை செய்கிறதா மாருதி?... ஆவலில் மாருதி பிரியர்கள்!

இந்த நிலையில், மாருதி பலேனோ காரின் பிஎஸ்6 எஞ்சின் பொருத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலானது கடந்த ஜனவரியில் விற்பனைக்கு வந்தது. டிசைனில் சிறிய மாறுதல்கள் மற்றும் பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட்டது.

டீசல் எஞ்சினுடன் பலேனோ காரை சோதனை செய்கிறதா மாருதி?... ஆவலில் மாருதி பிரியர்கள்!

இந்த சூழலில், புதிய மாடல் வருவதற்கு முன்பாக விற்பனையில் இருந்த மாருதி பலேனோ கார் ஒன்று சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த படங்களை டீம் பிஎச்பி தளம் வெளியிட்டுள்ளது.

டீசல் எஞ்சினுடன் பலேனோ காரை சோதனை செய்கிறதா மாருதி?... ஆவலில் மாருதி பிரியர்கள்!

இந்த பழைய மாருதி பலேனோ கார் மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு சோதனையில் வைக்கப்பட்டு இருக்கலாம். அதாவது, மாருதி சுஸுகி ஏற்கனவே வழங்கி வந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பிஎஸ்6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தி இந்த பலேனோ காரில் வைத்து சோதனை ஓட்டம் நடத்துவதற்கான வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

டீசல் எஞ்சினுடன் பலேனோ காரை சோதனை செய்கிறதா மாருதி?... ஆவலில் மாருதி பிரியர்கள்!

மாருதி நிறுவனம் வழங்கி வந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 94 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டது. ஒருவேளை டீசல் எஞ்சின் தேர்வை மீண்டும் வழங்க மாருதி நிறுவனம் முடிவு செய்தால், பலேனோ, எர்டிகா, டிசையர், சியாஸ், ஸ்விஃப்ட், எஸ் க்ராஸ் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய கார்கள் டீசல் தேர்வு வாய்ப்பை பெறும். விற்பனையிலும் குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையை பெற முடியும்.

டீசல் எஞ்சினுடன் பலேனோ காரை சோதனை செய்கிறதா மாருதி?... ஆவலில் மாருதி பிரியர்கள்!

மேலும், இதே எஞ்சின் டொயோட்டா பிராண்டில் விற்பனை செய்யப்படும் க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் ஆகிய கார் மாடல்களிலும் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. எனினும், தற்போதைக்கு உறுதியானத் தகவல் எதுவும் இல்லை.

டீசல் எஞ்சினுடன் பலேனோ காரை சோதனை செய்கிறதா மாருதி?... ஆவலில் மாருதி பிரியர்கள்!

மறுபுறத்தில் 48 வோல்ட் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் மாருதி பலேனோ கார் சோதனை செய்யப்படக்கூடும் என்ற தகவலும் வந்துள்ளது. பாஷ் நிறுவனத்தின் கூட்டணியில் இந்த ஹைப்ரிட் சிஸ்டத்தை மாருதி உருவாக்கி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. அதேபோன்று, பலேனோ காரின் எலெக்ட்ரிக் மாடலும் பரிசீலனையில் உள்ளது.

Most Read Articles

English summary
A mysterious Maruti Baleno test mule has been spotted in Gurgaon, Haryana.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X