10 மாதங்களில் 5 லட்ச பிஎஸ்6 கார்கள் விற்பனை... மாருதி சுசுகி புதிய சாதனை...

மாருதி சுசுகி நிறுவனம் இதுவரை மொத்தம் 5 லட்ச பிஎஸ்6 கார்களை கடந்த 10 மாதங்களில் விற்பனை செய்து ஆச்சிரியப்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தியில் காண்போம்.

10 மாதங்களில் 5 லட்ச பிஎஸ்6 கார்கள் விற்பனை... மாருதி சுசுகி புதிய சாதனை...

மாருதி நிறுவனத்தில் இருந்து முதல் பிஎஸ்6 மாடலாக பலேனோ பிஎஸ்6 கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இதன்மூலம் பிஎஸ்6 கார்களின் விற்பனையில் 10 மாதங்களை கடந்துள்ள இந்நிறுவனம் இந்த 10 மாதங்களில் சுமார் 5 லட்ச பிஎஸ்6 மாடல் கார்களை விற்பனை செய்துள்ளது.

10 மாதங்களில் 5 லட்ச பிஎஸ்6 கார்கள் விற்பனை... மாருதி சுசுகி புதிய சாதனை...

பலேனோ அறிமுகப்படுத்தப்பட்ட 2019 ஏப்ரல் மாதத்தில் மாருதி ஆல்டோ 800 மாடலும் பிஎஸ்6 தரத்தில் அறிமுகமானது. இவற்றுடன் மாருதி நிறுவனத்தில் இருந்து தற்சமயம் வேகன்ஆர், ஸ்விஃப்ட், டிசைர், எர்டிகா, எக்ஸ்எல்6, எஸ்-பிரெஸ்ஸோ, ஈக்கோ, செலிரியோ உள்ளிட்ட மாடல்கள் பிஎஸ்6-க்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

10 மாதங்களில் 5 லட்ச பிஎஸ்6 கார்கள் விற்பனை... மாருதி சுசுகி புதிய சாதனை...

இதில் ஈக்கோ மற்றும் செலிரியோ பிஎஸ்6 மாடல்கள் நடைபெற்று வரும் 2020ஆம் ஆண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டன. மாருதி செலிரியோ பிஎஸ்6 காரில் 998சிசி, மூன்று சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றலின் அளவு, முந்தைய பிஎஸ்4 மாடலின் அளவுடன் அப்படியே ஒத்துப்போகிறது.

10 மாதங்களில் 5 லட்ச பிஎஸ்6 கார்கள் விற்பனை... மாருதி சுசுகி புதிய சாதனை...

செலிரியோ மாடலின் இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 68 பிஎச்பி பவரையும் 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்து ஆற்றல் கொண்டதாக உள்ளது. ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக இந்த காரில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளன.

10 மாதங்களில் 5 லட்ச பிஎஸ்6 கார்கள் விற்பனை... மாருதி சுசுகி புதிய சாதனை...

இந்த பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் கார் மட்டுமின்றி, அனைத்து மாருதி பெட்ரோல் என்ஜின்களும் பிஎஸ்6 மாற்றத்தால் நைட்ரஜன் ஆக்சைடை 25 சதவீதம் குறைவாக உமிழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாருதியின் பிஎஸ்6 மாடல்கள், அந்நிறுவனத்தின் பெட்ரோல் வேரியண்ட்களின் எண்ணிக்கையில் 75 சதவீதமாக உள்ளன.

10 மாதங்களில் 5 லட்ச பிஎஸ்6 கார்கள் விற்பனை... மாருதி சுசுகி புதிய சாதனை...

செலிரியோ பிஎஸ்6 மாடலில் இந்த என்ஜின் தரம் மாற்றம் தவிர்த்து, மற்ற பாகங்களில் பெரியளவில் எந்த அப்டேட்டும் கொண்டுவரப்படவில்லை. ஸ்போர்ட்டியான அதே க்ரில், கூர்மையான தோற்றத்தில் பம்பர், காரின் உடல் நிறத்தில் கதவுகளின் ஹேண்டில்கள், டர்ன் இண்டிகேட்டர்களுடன் உள்ள ஓஆர்விஎம்கள் மற்றும் அலாய் சக்கரங்கள் போன்ற அதே பிஎஸ்4 மாடலின் அம்சங்களுடன் தான் இந்த பிஎஸ்6 காரும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

10 மாதங்களில் 5 லட்ச பிஎஸ்6 கார்கள் விற்பனை... மாருதி சுசுகி புதிய சாதனை...

மேலும் ப்ளாசிங் ரெட், சில்கி சில்வர், ஜொலிக்கின்ற க்ரே, ஆர்ட்டிக் வெள்ளை, டார்க் ப்ளூ மற்றும் டாங்கோ ஆரஞ்ச் உள்ளிட்ட நிறத்தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற இந்த செலிரியோ பிஎஸ்6 கார், சந்தையில் ஹூண்டாய் சாண்ட்ரோ, மாருதி சுசுகி வேகன்ஆர், டட்சன் கோ மற்றும் டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடல்களுடன் விற்பனை போட்டியை தொடரவுள்ளது.

10 மாதங்களில் 5 லட்ச பிஎஸ்6 கார்கள் விற்பனை... மாருதி சுசுகி புதிய சாதனை...

இந்த பிஎஸ்6 மாடலின் ஒவ்வொரு வேரியண்ட்களும் ரூ.15,000- ரூ.24,000 வரை விலை அதிகரிப்பை பெற்றுள்ளன. இதனால் இந்த பிஎஸ்6 கார் தற்சமயம் ரூ.4.41 லட்சத்தில் இருந்து ரூ.5.67 லட்சத்திற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

10 மாதங்களில் 5 லட்ச பிஎஸ்6 கார்கள் விற்பனை... மாருதி சுசுகி புதிய சாதனை...

புதிய மாசு உமிழ்வு விதி இந்தியா முழுவதும் 2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்ட உடனே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே பிஎஸ்6 கார்கள் மாருதி நிறுவனத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த தொலைநோக்கு பார்வை தான், இந்நிறுவனத்தின் பிஎஸ்6 கார்களுக்கு சந்தையில் மிக பெரிய அளவில் தேவையை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 22, 2020, 14:02 [IST]
English summary
Maruti BS6 car sales cross 5 L in 10 months – 10 BS6 cars on offer
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+