தீபாவளியின்போது விற்பனைக்கு வருகிறது 2020 மாருதி செலிரியோ... நம்பும்படியான தகவல்தான்...

மாருதி சுஸுகி நிறுவனம் புதிய தலைமுறை செலிரியோ ஹேட்ச்பேக் காரை வருகிற அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

தீபாவளியின்போது விற்பனைக்கு வருகிறது 2020 மாருதி செலிரியோ... நம்பும்படியான தகவல்தான்...

முற்றிலும் புதிய டிசைன், அப்டேட்டான உட்புற கேபின் மற்றும் அதிக எண்ணிக்கையிலான வசதிகளுடன் செலிரியோவின் அடுத்த தலைமுறை காரின் தயாரிப்பு பணிகளில் மாருதி சுஸுகி நிறுவனம் தற்சமயம் ஈடுப்பட்டு வருகிறது.

தீபாவளியின்போது விற்பனைக்கு வருகிறது 2020 மாருதி செலிரியோ... நம்பும்படியான தகவல்தான்...

இந்த நிலையில் ஆட்டோகார் இந்தியா செய்திதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த புதிய தலைமுறை ஹேட்ச்பேக் கார் வருகிற அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 2020 செலிரியோவின் அறிமுகத்தை தீபாவளி பண்டிக்கை காலத்தின்போது எதிர்பார்க்கலாம்.

தீபாவளியின்போது விற்பனைக்கு வருகிறது 2020 மாருதி செலிரியோ... நம்பும்படியான தகவல்தான்...

ஏற்கனவே கூறியதுபோல் முழுமையாக புத்துணர்ச்சியான டிசைனில் வடிவமைக்கப்பட்டு வருகின்ற இந்த 2020 கார் ஆனது மிகவும் குறைவான அளவில் ஃபேஸ்லிஃப்ட் மாற்றத்தை ஏற்றுள்ளது, அதாவது காரின் முன்பகுதி சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தீபாவளியின்போது விற்பனைக்கு வருகிறது 2020 மாருதி செலிரியோ... நம்பும்படியான தகவல்தான்...

மாருதி சுஸுகியின் ஹார்ட்டெக் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்ட லேட்டஸ்ட் மாடலாக வெளிவரவுள்ள இந்த ஹேட்ச்பேக் காரில் வேகன்ஆர்-ஐ போன்று ப்ராண்ட்டின் லேட்டஸ்ட் ஸ்மார்ட் ப்ளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

தீபாவளியின்போது விற்பனைக்கு வருகிறது 2020 மாருதி செலிரியோ... நம்பும்படியான தகவல்தான்...

அதேபோல் வேகன்ஆர்-ஐ ஒத்ததாக பிஎஸ்6 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் சற்று அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் அப்கிரேட் செய்யப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் புதிய தலைமுறை செலிரியோவும் பெற்று வரவுள்ளது. இவை வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளும் வேகன்ஆர்-ஐ ஒத்திருக்கலாம்.

தீபாவளியின்போது விற்பனைக்கு வருகிறது 2020 மாருதி செலிரியோ... நம்பும்படியான தகவல்தான்...

புதிய செலிரியோவில் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படவுள்ளன. இதற்கு மத்தியில் தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வரும் 2020 செலிரியோவின் தற்போதைய பிஎஸ்4 வெர்சன் இந்தியாவில் 2014ல் இருந்து விற்பனையில் உள்ளது.

தீபாவளியின்போது விற்பனைக்கு வருகிறது 2020 மாருதி செலிரியோ... நம்பும்படியான தகவல்தான்...

எக்ஸ்ஷோரூமில் ரூ.4.46 லட்சத்தில் இருந்து ரூ.5.73 லட்சம் வரையிலான விலையினை கொண்டுள்ள மாருதி செலிரியோ எண்ட்ரீ-லெவல் காராக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் புதிய தலைமுறை காரின் ஆரம்ப விலையே ரூ.5.50 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Next-gen Maruti Suzuki Celerio India launch by Diwali 2020
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X