மாருதி சியாஸ் பிஎஸ்-6 கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

மாருதி சியாஸ் காரின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் குறித்த முழு விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சியாஸ் பிஎஸ்-6 கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

மாருதி நிறுவனம் பெரும்பாலான கார்களில் பிஎஸ்-6 மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டது. இதுவரை 10 பிஎஸ்-6 கார்களை களமிறக்கிவிட்ட அந்நிறுவனம் 11-வது பிஎஸ்-6 மாடலாக சியாஸ் காரை அறிமுகம் செய்துள்ளது.

மாருதி சியாஸ் பிஎஸ்-6 கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

இந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சியாஸ் கார் மாருதி நிறுவனத்தின் பிரிமீயம் மாடலாக விற்பனையில் இருந்து வருகிறது.

மாருதி சியாஸ் பிஎஸ்-6 கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

மேலும், மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் விற்பனையில் நம்பர்-1 மாடலாகவும் சியாஸ் கார் உள்ளது. இந்த நிலையில், சியாஸ் காரின் பிஎஸ்-6 மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாருதி சியாஸ் பிஎஸ்-6 கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

மாருதி சியாஸ் காரில் பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுடன் வந்துள்ளதுடன், எஸ் என்ற கவர்ச்சிகரமான அம்சங்கள் கொண்ட புதிய வேரியண்ட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

மாருதி சியாஸ் பிஎஸ்-6 கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய மாருதி சியாஸ் காரின் எஸ் வேரியண்ட்டில் கூடுதலாக புதிய வண்ணத் தேர்வுகள், பாடி ஸ்பாய்லர்கள், பூட் லிட் ஸ்பாய்லர், விசேஷ கவருடன் சைடு மிரர்கள், கருப்பு வண்ண ஃபினிஷிங் செய்யப்பட்ட 16 அங்குல அலாய் வீல்கள் மற்றும் இதர கவர்ச்சிகரமான ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மாருதி சியாஸ் பிஎஸ்-6 கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

உட்புறத்திலும், கருப்பு வண்ண இன்டீரியரில் சில்வர் வண்ண ஆக்சஸெரீகளுடன் அலங்காரமாகவும், பிரிமீயமாகவும் இருக்கிறது. இந்த புதிய வேரியண்ட் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான தேர்வாக அமையும்.

மாருதி சியாஸ் பிஎஸ்-6 கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய மாருதி சியாஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வந்துள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அள்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இடம்பெற்றிருக்கும்.

மாருதி சியாஸ் பிஎஸ்-6 கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

புதிய மாருதி சியாஸ் காரின் பிஎஸ்-6 பெட்ரோல் மாடலானது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். பிஎஸ்-6 டீசல் மாடல் விற்பனைக்கு வருவதில் இன்னமும் சந்தேகம் நிலவுகிறது.

மாருதி சியாஸ் பிஎஸ்-6 கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

இதுவரை பயன்படுத்தப்பட்ட 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மாருதி சுஸுகி சொந்தமாக உருவாக்கிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பிஎஸ்-6 தரத்தற்கு மேம்படுத்தும் வாய்ப்புள்ளது. ஆனால், டீலர்களில் டீசல் மாடலுக்கு அதிக விசாரணைகள் வந்தால் மட்டுமே மீண்டும் இதுபற்றிய முடிவை மாருதி எடுக்க வாய்ப்பிருக்கிறது.

மாருதி சியாஸ் பிஎஸ்-6 கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

மாருதி சியாஸ் பிஎஸ்-6 மாடல் 5 மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டிலும், 3 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்டிலும் கிடைக்கும். பேஸ் வேரியண்ட் ரூ.8.31 லட்சத்திலும், டாப் வேரியண்ட்டிற்கு ரூ.11.09 லட்சம் வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டு இறுக்கிறது. பழைய மாடலைவிட ரூ.11,000 வரை அதிகரித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 25, 2020, 12:40 [IST]
English summary
Maruti Suzuki has launched Ciaz sedan with BS-6 compliant in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+