மாருதி செலிரியோ எக்ஸ் மாடலை இனி ஆரஞ்ச் நிறத்தில் வாங்க முடியாது... காரணம் என்ன தெரியுமா..?

மாருதி சுஸுகி நிறுவனம் செலிரியோ மாடலுக்கு வழங்கி வந்த பப்ரிக்கா ஆரஞ்ச் நிறத்தேர்வை இந்திய சந்தையில் நிறுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி செலிரியோ எக்ஸ் மாடலை இனி ஆரஞ்ச் நிறத்தில் வாங்க முடியாது... காரணம் என்ன தெரியுமா..?

மாருதி சுஸுகி நிறுவனம் பிஎஸ்6 தரத்தில் செலிரியோ மாடலை ரூ.4.41 லட்சம் என்ற விலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. முன்பு இந்த ஹேட்ச்பேக் மாடலில் டீசல் என்ஜினும் வழங்கப்பட்டு வந்தது.

மாருதி செலிரியோ எக்ஸ் மாடலை இனி ஆரஞ்ச் நிறத்தில் வாங்க முடியாது... காரணம் என்ன தெரியுமா..?

ஆனால் புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக டீசல் என்ஜின்களை அப்டேட் செய்வது செலவு மிகுந்த வேலையாக இருந்ததால் மாருதி சுஸுகி நிறுவனம் அதன் தயாரிப்புகளில் டீசல் வேரியண்ட்களை வழங்குவதை நிறுத்தி இருந்தது. இந்த வகையில் செலிரியோவும் பிஎஸ்6 அறிமுகத்தின்போது பெட்ரோல் என்ஜின் உடன் மட்டும் தான் வெளிவந்தது.

மாருதி செலிரியோ எக்ஸ் மாடலை இனி ஆரஞ்ச் நிறத்தில் வாங்க முடியாது... காரணம் என்ன தெரியுமா..?

மேலும் மாருதி சுஸுகி நிறுவனம் செலிரியோஎக்ஸ் என்ற பெயரில் இதன் க்ராஸ்ஓவர் வெர்சனையும் விற்பனை செய்து வருகிறது. இதன் எக்ஸ்ஷோம் விலை ரூ.4.90 லட்சமாக உள்ளது. இயந்திர பாகங்களில் செலிரியோ மாடலுடன் இந்த எக்ஸ் செர்சனுக்கு எந்த வேறுபாடும் கிடையாது.

மாருதி செலிரியோ எக்ஸ் மாடலை இனி ஆரஞ்ச் நிறத்தில் வாங்க முடியாது... காரணம் என்ன தெரியுமா..?

ஆனால் கூடுதலாக காஸ்மெட்டிக் மற்றும் நிறத்தேர்வுகள் செலிரியோஎக்ஸ் மாடலில் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் ஏஜிஎஸ் (ஆட்டோ கியர் ஷிஃப்ட்) தேர்வும் கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இதன் நிறத்தேர்வுகளில் ஒன்றான பப்ரிக்கா ஆரஞ்ச் நிறம் இந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாருதி செலிரியோ எக்ஸ் மாடலை இனி ஆரஞ்ச் நிறத்தில் வாங்க முடியாது... காரணம் என்ன தெரியுமா..?

இதனால் செலிரியோஎக்ஸ் மாடல் இனி டார்க் ப்ளூ, ஒளிரும் க்ரே, காஃபைன் ப்ரவுன் மற்றும் ஆர்டிக் வொய்ட் என்ற நான்கு நிறங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். அதுவே வழக்கமான செலிரியோவிற்கு டங்கோ ஆரஞ்ச், ஆர்டிக் வொய்ட், ஒளிரும் க்ரே, ப்ளாஸிங் ரெட், சில்கி சில்வர் மற்றும் டார்க் ப்ளூ என்ற ஆறு நிறங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாருதி செலிரியோ எக்ஸ் மாடலை இனி ஆரஞ்ச் நிறத்தில் வாங்க முடியாது... காரணம் என்ன தெரியுமா..?

செலிரியோஎக்ஸ் மாடலின் பப்ரிக்கா ஆரஞ்ச் நிறம் நிறுத்தப்பட்டதற்கு, 2020 செலிரியோ மாடல் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 2020 செலிரியோ சந்தையில் அறிமுகமாகுவதற்கு அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது.

மாருதி செலிரியோ எக்ஸ் மாடலை இனி ஆரஞ்ச் நிறத்தில் வாங்க முடியாது... காரணம் என்ன தெரியுமா..?

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த 2020 மாடல் சமீபத்தில் கூட முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் 2020 செலிரியோ அறிமுகம் குறித்த அறிவிப்புகளும் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து AREA டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாருதி செலிரியோ எக்ஸ் மாடலை இனி ஆரஞ்ச் நிறத்தில் வாங்க முடியாது... காரணம் என்ன தெரியுமா..?

இதனால் இந்த 2020 மாடலின் அறிமுகம் மிக விரைவில் வரும் அக்டோபர் மாதத்தில் இருக்கலாம். சோதனையில் கார் முழுக்க முழுக்க மறைக்கப்பட்டிருந்தாலும், புதிய சக்கரங்கள், அப்டேட்டான லைட்டிங் க்ளஸ்ட்டர்கள், திருத்தியமைக்கப்பட்ட பம்பர்கள் உள்ளிட்டவற்றை காண முடிந்திருந்தது.

மாருதி செலிரியோ எக்ஸ் மாடலை இனி ஆரஞ்ச் நிறத்தில் வாங்க முடியாது... காரணம் என்ன தெரியுமா..?

அதேபோல் உட்புறத்திலும் குறிப்பிடத்தகுந்த அளவில் தொடுத்திரை, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா + சென்சார்கள் போன்றவற்றையும் நிச்சயம் எதிர்பார்க்கலாம். மற்றப்படி தற்போதைய 1.0 லிட்டர் கே10பி பெட்ரோல் என்ஜினில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.

மாருதி செலிரியோ எக்ஸ் மாடலை இனி ஆரஞ்ச் நிறத்தில் வாங்க முடியாது... காரணம் என்ன தெரியுமா..?

இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-ல் 67 பிஎச்பி பவரையும், 3500 ஆர்பிஎம்-ல் 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் ஏஎம்டி யூனிட் வழங்கப்படுகிறது.

மாருதி செலிரியோ எக்ஸ் மாடலை இனி ஆரஞ்ச் நிறத்தில் வாங்க முடியாது... காரணம் என்ன தெரியுமா..?

இந்த 2020 மாடலின் ஆரம்ப விலை ரூ.4.5 லட்சமாகவும் அதிகப்பட்சமாக ரூ.4.7 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. விற்பனையில் இதற்கு போட்டியாக டாடா டியாகோ பிஎஸ்6 மற்றும் ஹூண்டாய் சாண்ட்ரோ பிஎஸ்6 உள்ளிட்டவை உள்ளன. புதிய தலைமுறை செலிரியோ எக்ஸ் மாடலை பற்றிய எந்த தகவலும் தற்போதைக்கு இல்லை.

Most Read Articles
English summary
Maruti Celerio X Orange Colour Discontinued Ahead of New Gen Launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X